Untitled Document
April 16, 2025 [GMT]
ஏலியன்களால் கோடீஸ்வரரான மனிதர்!
[Thursday 2019-01-10 09:00]

ஏலியன்கள் குறித்து, அவர்கள் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்று கேட்டால் நாம் தெரியலையே என்று தான் சொல்ல வேண்டும். வேற்றுகிரவாசிகளால் ஏதாவது பூமிக்கு தீங்கு ஏற்படலாம் என்று ஸ்டீபன் ஹாங்கிங்ஸ் சொல்லி வந்தார். இந்நிலையில், அது ஒரு விஷயத்தில் உண்மையாகவும் இருக்கலாம் என்று தற்போது நிருபணம் ஆகியுள்ளது. உங்களால் நம்ப முடியாமலும் போகலாம். தனது வீட்டை ஏலியன்கள் தொடர்ந்து தாக்கியதாக கூறி அதிர விட்டுள்ளார் அந்த மனிதர். தனக்கு பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் விழுந்த விண்கற்களால் அவருக்கு கோடிகளில் பணம் கொட்டியுள்ளது.


  

ஐரோப்பாவில் வடக்கு போஸ்னியா

ஐரோப்பாவில் வடக்கு போஸ்னியா பர்ஜெடருக்கு அகில் உள்ள கோர்ன்ஜி லாஜி கிராமத்தை சேர்ந்தவர் ராடிவொக் லாஜிக் (62) . இவர் தான் தனது வீட்டை வேற்று கிரக வாசிகள் தாக்கியதாக கூறியுள்ளார். இவர் முதலில் கடும் பயத்தில் இருந்தார்.

6 முறை வீடு மீது தாக்குதல்

என் வீடு மீது 6 முறை தாக்குதல் நடத்தியது ஏலியன்கள் தான் என்று லாஜிக் உறுதியாக கூறினார். இதனால் தான் பயத்தில் இருந்தாகவும் தெரிவித்துள்ளார். இதனால் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம் பீதியும் அடைந்திருந்தார்.

வீட்டின் மீது விழுந்த விண்கல்

நான் அவர்களை(ஏலியனை) என்ன தொந்தரவு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு என்னிடம் வேறு எந்த விளக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.

விண் கற்கள் விழுந்தது

வீட்டின் மீது 6 முறை விண் கற்கள் விழுத்தல் என்பது சரியானதாக இருக்காது. இதை வேண்டுமென்றே வேற்றுகிரக வாசிகள் தான் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்கியது விண்கல் உறுதி

வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது விண்கல் தான் பால்கேட் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் பாறைகள் அனைத்து விண்கற்கள் தான் என்று ஆய்வு செய்து தெரிவித்தனர்.

விண்கல் விற்பனை

விழுந்த விண்கலை நெதர்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு ஒன்றை விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு வீட்டின் மேற்கூரை எஃக்கால் அமைத்துள்ளார். விழுந்த விண்களில் ஒரு சிலவற்றை விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு கோடிகளில் பணம் கிடைத்துள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர்.

அருங்காட்சியம்

ஏலியன் தாக்கிய விண்கற்களை கொண்டு அவர் அருங்காட்சியம் அமைக்கும் முடிவில் இறங்கியுள்ளார். இதனால் அவர் ஒரு புறமும் முதலில் பீதியில் இருந்தாலும், தற்போது மகிழ்ச்சியாகவும் இருக்கின்றார்.

விண்கல் ஒரே இடத்தில் விழுகாது

தொடர்ந்து விண்கற்கள் ஓரே இடத்தில் விழுகாது. அவர்கள் என் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தினாலும், மற்றொரு புறம் எனக்கு இருந்த கஷ்டங்கள் மாயமாகியுள்ளது. தற்போது உலகம் முழுக்க இருந்து எங்கள் வீட்டிற்கு வருகின்றனர்.

ஏலியனால் மகிழ்ச்சி

முதலில் ஏலியன்கள் எங்கள் வீட்டை விண்கற்களால் தாக்கிய போது, நான் பீதியில் இருந்தேன். அந்த விண்கற்கள் மூலம் பணமும் கிடைப்பதால் நான் ஏலியனை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கின்றேன். ஏலியனால் எங்கள் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா