Untitled Document
November 25, 2026 [GMT]
36 ஆண்டுகளுக்குப் பிறகு ஏலத்திற்கு வரும் மைக்கேல் ஜாக்சனின் அரிய ஓவியம்!
[Monday 2026-11-23 16:00]

கிங் ஆஃப் பாப்’ எனப் போற்றப்படும் மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சனின் அரிய உருவப்படம், வரும் நவம்பர் 26ஆம் தேதி பிரான்சில் ஏலத்திற்கு வரவுள்ளது. 1989ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓவியக் கலைஞர் பிரெட் லிவிங்ஸ்டன் ஸ்ட்ராங் வரைந்த ‘The Book’ என்ற இந்த ஓவியம், மைக்கேல் ஜாக்சன் நேரடியாகப் போஸ் கொடுத்து வரையப்பட்ட ஒரே அதிகாரப்பூர்வ உருவப்படம் எனக் கூறப்படுகிறது.


  

சிவப்பு ஜாக்கெட் அணிந்து, கைகளில் புத்தகத்துடன் அவர் அமர்ந்திருப்பது போன்று வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில், அவரது சிந்தனைகள், ஓவியங்கள் மற்றும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1990ஆம் ஆண்டு பெவர்லி ஹில்ஸில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஓவியம், சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த அரிய கலைப்படைப்பு, மைக்கேல் ஜாக்சன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா