Untitled Document
June 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தென் ஆப்ரிக்காவில் குழந்தையை உயிரோடு தின்ற இராட்சத எலிகள்: - மனதை உலுக்கும் சம்பவம்
[Wednesday 2016-12-21 07:00]

தென் ஆப்ரிக்காவில் இராட்சத எலிகள் மூன்று மாத பெண் குழந்தையை உயிரோடு தின்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Johannesburg, Katlehong நகரத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த குழந்தையின் 26 வயதான தாயை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் 26 வயதான பெண், தினமும் குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு மது விடுதிக்கு சென்று வந்துள்ளார்.இந்நிலையில், சம்பவத்தன்று பெண் மது விடுதிக்கு சென்று அதிகாலை வீடு திரும்பிய போது, குழந்தை உடல் பாகங்களின்றி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது.


  

விசாரணையில் இராட்சத எலிகள் குழந்தையை கொடூரமாக கடித்து தின்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில், அந்த குழந்தை வலியால் துடி துடித்து உயிரிழந்துள்ளது.இந்த பெண்ணின் மற்றொரு குழந்தை அவரை பிரிந்து வாழ்ந்து வரும் கணவரிடம் இருப்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளது.தென் ஆப்பிரக்காவில் சுமார் 3 ஆடி உள்ள இராட்சத எலிகள் அதிகாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. குழந்தை கவனிப்பாரற்று விட்ட தாயை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 41 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்:
[Wednesday 2017-06-21 18:00]

அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 41 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரத்திலிருந்து 41 பயணிகளுடன் சென்னை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தபோது தீப்பிடித்தது.


விண்வெளியில் புதிய நாடு உருவாகிறது: - 5 லட்சம் பேர் குடியேற விண்ணப்பம்! Top News
[Friday 2017-06-16 19:00]

பாரீஸ், நாம் வசிக்கும் இந்த பூமியில் 196 நாடுகள் உள்ளன, தற்போது இன்னொரு நாடு உதயமாக உள்ளது. ஆனால் பூமியில் இல்லை, பூமிக்கு வெளியே விண்வெளியில் இந்த புதிய நாடு உருவாக உள்ளது.ரஷியாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், ஏரோஸ்பேஷ் இன்டர்நேஷனல் ஆய்வு மைய தலைவருமான டாக்டர் இகோர் அசுர்பெய்லி விண்வெளியில் ஒரு நாட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்கு ‘அஸ்கார்சியா’ என பெயரிடப்பட்டுள்ளது.


2 கி.மீ. நீளத்தில் பீட்சா: அமெரிக்க சமையல் கலைஞர்கள் சாதனை
[Sunday 2017-06-11 15:00]

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 2 கி.மீ. நீள பீட்சா தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. ஃபோண்டோனா நகரில் உள்ள ஆட்டோ கிளப் ஸ்பீட்வே உணவகத்தைச் சேர்ந்த 12 சமையல் கலைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து இந்த சாதனையை படைத்தனர்.


இத்தாலியில் 5,300 ஆண்டுகளுக்கு முன் இருந்த பனி மனிதனை கொன்றது யார்..? விசாரணையில் காவல்துறை அதிகாரிகள்!
[Thursday 2017-06-08 18:00]

இத்தாலியில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன பனிமனிதனின் வழக்கை விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஓட்ஸெலர் ஆல்ப்ஸ் (Oetztaler Alps) பகுதியில் தொலைதூரத்தில் அமைந்திருக்கும் உயரமான பகுதியில், பனிமனிதன் ஓட்ஸி கண்டெடுக்கப்பட்டார். 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த பனிமனிதனின் பின்புறத்தில் ஒரு அம்பு தைத்திருந்தது.


பிளாஸ்டிக் அரிசியை தொடர்ந்து - பிளாஸ்டிக் சர்க்கரை கண்டுபிடிப்பு: பொதுமக்கள் பீதி..!
[Wednesday 2017-06-07 19:00]

சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்றவற்றில் பிளாஸ்டிக் அரிசி குறித்த செய்திகள் வெளியாகியது. சீனாவில் தான் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுகிறது எனவும் செய்திகள் பரவியது. உத்தரகாண்ட் மாநிலம் ஹால்ட்வானி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் அரசி விற்பனைக்கு வந்து உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி போன்றவற்றை தொடர்ந்து பெங்களூர் சந்தைகளில் பிளாஸ்டிக் சர்க்கரை புழகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காக்டாக் மற்றும் தும்கூரில் பிளாஸ்டிக் பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


அவுஸ்திரேலியாவில் கலக்கும் யாழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்: Top News
[Wednesday 2017-06-07 19:00]

வலைப்பந்தாட்டத்தில் உலகின் மிகச்சிறந்த கோல் போடும் வீராங்கனை என்ற பெருமைக்குரிய இலங்கை வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா லீக்கில் வெஸ்ட் சிட்டி பால்க்கோன்ஸ் வலைப்பந்தாடட கழகத்துக்காக விளையாடி வருகின்றார். தற்போது நடைபெற்று வரும் விக்ரோறியா லீக் தொடரில் 7 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், கடைசியாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஏ.சி.யு சோவேரெயன்ஸ் (68-53), மொனாஷ் பல்கலைக்கழகம் ஸ்டார்ம் (55-40) மற்றும் பெனின்சுலா வெவ்ஸ் (62-45) ஆகிய மூன்று கழகங்களுக்கெதிரான போட்டியிலும் தர்ஜினியின் கழகம் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.


கேரளத்தைக் கலக்கும் புதிய ரக வாழை: ஒரு வாழைப்பழத்தை ஓர் ஆளால் சாப்பிட முடியாது!
[Tuesday 2017-06-06 23:00]

ஒரு நேந்திரன் வாழைப் பழத்தை ஒருவர் சாப்பிட்டாலே மூச்சு முட்டும். அந்தச் சராசரி அளவு நேந்திரன் வாழைகளைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மெகா சைஸ் நேந்திரன் வாழைகளைத் தற்போது கேரளத்து விவசாயிகள் பயிரிட்டுக் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.


சவூதி இளவரசர் சூதாட்டம் சுதி..! 6 மணி நேரத்தில் 5 மனைவிகளை அடகு வைத்தார்:
[Tuesday 2017-06-06 19:00]

சவுதியை சேர்ந்த இளவரசர் மஜீட் பின் அப்துல்லா பின் அப்துல்ஜிஸ் அல் சவுட். போதை பொருள் மற்றும் சூதாட்ட பழக்கங்களால் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். சமீபத்தில் இவர் பிரபலமான சினாய் கிராண்ட் கேசினோவில் போக்கர் என்ற சூதாட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் பந்தயம் கட்டி படுதோல்வி அடைந்தார். சூதாட்டத்தில் தோற்றதால் பந்தய பணமான 1.350 பில்லியன் ரிலியஸ் ($ 359 மில்லியன்) கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இளவரசரிடம் அவ்வளவு பணம் இல்லை. மேற்கொண்டு $ 25 மில்லியன் பாக்கி தொகையை செலுத்த முடியவில்லை.


யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ள சந்தைக்கு வந்த மெகா சைஸ் பூசணிக்காய்! Top News
[Monday 2017-06-05 18:00]

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து பெரியதொரு பூசணிக்காய் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் நிறை 28 கிலோ 100 கிராம் ஆகும். இந்த பூசணிக்காய் 3160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் ஒரு கிலோ கிராம் பூசணிக்காய் 110 முதல் 120 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


பேசிக்கொண்டிருந்தபோது செல்போன் வெடித்து சிதறியது: வாலிபர் படுகாயம்.
[Saturday 2017-06-03 18:00]

அரியலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சச்சின் (வயது28). எம்.ஏ. படித்து வரும் இவர், உயர்ரக செல்போன் வைத்திருந்தார். நேற்று திருவாரூர் அருகே உள்ள புள்ளமங்கலம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் குணசேகரன் என்பவருடைய வீட்டுக்கு சச்சின் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருவாரூர்- தஞ்சை சாலையில் முகந்தனூர் என்ற இடத்தில் சென்றபோது அவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது.


டயானா பற்றிய உண்மைகளை பேசப்போகும் இளரவரசர் வில்லியம் - ஹரி:
[Saturday 2017-06-03 09:00]

பிரித்தானியா இளவரசி டயானா குறித்த பலருக்கும் தெரியாத விடயங்களை அவரின் மகன்களான இளவரசர் வில்லியமும், ஹரியும் டாக்குமெண்டரி திரைப்படம் மூலம் வெளி உலகுக்கு தெரிவிக்க உள்ளார்கள். பிரித்தானியா இளவரசி டயானா கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதி கார் விபத்தில் மரணமடைந்தார். டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் அவரை பற்றி மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி மனம் திறந்து பேசவுள்ளனர்.


காரில் மகளுடன் சாம்பலான பெற்றோர்.! திடுக்கிடும் தகவல்கள்!
[Friday 2017-06-02 22:00]

தமிழகத்தில் ஆடிட்டர் உட்பட அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தீயில் எரிந்து சாம்பலான வழக்கில் அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஜெயதேவன்(55). இவருக்கு ரமாதேவி என்ற மனைவியும், திவ்யஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இவர்கள் கடந்த 27-ஆம் திகதி காரில் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே உள்ள இடத்தில் திடீரென அவர்களது கார் தீப்பிடித்து எரிந்ததுள்ளது.


புத்தளத்தில் 19 வயது இளம்பெண் எரியூட்டிக் கொலை: - கணவர் அதிரடியாக கைது!
[Friday 2017-06-02 21:00]

புத்தளம் – விருதோடை, நாலிந்தூவ பகுதியில் 19 வயதான இளம்பெண் எரியூட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரங்குளி பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பெல்ஜியம் இளவரசி துப்பாக்கி சூடு : - கேட்கும் திறனை இழந்த பிரதமர்..!
[Thursday 2017-06-01 09:00]

விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பித்து வைப்பதற்காக பெல்ஜியம் இளவரசி, சுடும் போது ஏற்பட்ட துப்பாக்கியின் சத்தத்தால் அருகில் நின்ற அந்நாட்டு பிரதமர் கேட்கும் திறனை இழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவந்துள்ளதாவது, பெல்ஜிய தலைநகர் புருசெல்சில் கடந்த வரம் இடம்பெற்ற மரதன் ஒட்டப்பந்தயத்தை அந்நாட்டு மன்னர் பிலிப்பின் இளைய சகோதரி ஆஸ்ட்ரிட் மற்றும் பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்துள்ளனர்.


இலங்கையில் போலி பிளாஸ்டிக் கோழிமுட்டைகள்!
[Thursday 2017-06-01 09:00]

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கோழிமுட்டைகள் விற்பனையில் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிளாஸ்டிக் முட்டைகள், காலாவதியான முட்டைகள் என்பவற்றை விற்பனை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்குமாறு தென்கிழக்கு சுகாதாரப் பேரவை துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.


SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா