Untitled Document
January 16, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் உடலை கரைத்த இளைஞர்!
[Wednesday 2016-12-28 08:00]

மெக்ஸிக்கோவில் இளைஞர் ஒருவர் உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் உடலை கரைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.26 வயதான Francia Ruth Ibarra என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். குறித்த குற்றத்தில் ஈடுபட்ட 26 வயதான Emmanuel Delani Valdez Bocanegr என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.Ibarra காணவில்லை என அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். Ibarraவின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததின் மூலம் அவர் Tinder என்ற டேட்டிங் தளத்தில் Bocanegrவுடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது.


  

இந்த தகவலை அறிந்த Ibarraவின் நண்பர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து Bocanegr குடியிருப்பில் பொலிசார் நடத்திய சோதனையில் ஒரு பையில் மனித எலும்புகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.எலும்பிலிருந்து ஆறு கிலோ சதையை கைப்பற்றிய பொலிசார், அதை டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சதையிலிருந்த டிஎன்ஏ காணாமல் போன Ibarra டிஎன்ஏவுடன் பொருந்தியுள்ளது.மேலும், குடியிருப்பில் நடத்திய சோதனையில் Ibarra ஆடைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.தற்போது, Bocanegr கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், Ibarra உறவுக்கு மறுத்ததால் தான் Bocanegr அவரை கொடூரமாக கொன்றதாக தெரியவந்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


விண்வெளியில் பாரிய கருந்துளை
[Friday 2018-01-12 17:00]

விண்வெளியில் பாரிய கருந்துளை ஒன்று இரண்டு எரிசுவாலைகளை வெளிப்படுத்தியுள்ளது.குறித்த கருந்துளையானது, எரிநிலை வாயுவுடன மோதுண்ட வேளையில் இந்த எரிசுவாலை வெளிப்பட்டதாக விண்ணாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


உலகில் அதிகம் பேர் செல்லும் தீவு…. ஆனால் இப்படி ஒரு தீவு உலகிலேயே இல்லை-! நல் தீவு (NULL ISLAND) Top News
[Thursday 2018-01-11 18:00]

ஒரு தீவு, இதன் பெயர் "நல் தீவு" (Null Island) அங்கே தான் ஒவ்வொரு நாளும் ஆயிரம் செல்ஃபிக்களுக்கும் மேலாக எடுக்கப்படுகின்றன, எண்ணற்ற திருமண விழாக்கள் நடக்கின்றது, பல பிரியா விடைகள் அளிக்கப்படுகின்றன, ஒரு நாளைக்கு இலட்சக் கணக்கில் மனிதர்கள் வந்து போகிறார்கள். இவ்வளவும் ஏன்? நீங்கள் கூட பல முறை அங்கே சென்று வந்திருப்பீர்கள், நேற்று நீங்கள் ஏதோ ஒரு டேட்டிங் ஆப்பில் தரவேற்றம் செய்த படம் கூட இந்தத் தீவில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம், அதன் பெயர் ‘நல் தீவு’ (Null Island). சோகம் என்னவென்றால், அப்படி ஒரு தீவு இந்த உலகத்திலேயே இல்லை. குழப்பிக்கொள்ளும் முன் ஒரு சிறிய கணித விளக்கம். ‘Null’ என்ற வார்த்தையை நாம் கணிதத்தில் அதிகம் பயன்படுத்தி இருப்போம். இதற்கு என்ன அர்த்தம்? பலர் இதை ‘0’ வுடன் குழப்பிக் கொள்வார்கள்.


ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அரண்மனையை வழங்கிய குஜராத் இளவரசர்!
[Thursday 2018-01-11 13:00]

குஜராத்தைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கைப் பழக்கம்கொண்ட இளவரசர், அவருடைய அரண்மனையை ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு மாற்றிவருகிறார். குஜராத் மாநிலம் ராஜ்பிபிலா பகுதியைச் சேர்ந்த இளவரசர், மன்வேந்திர சிங் கோஹில். அவருக்கு வயது 52. தான் ஒரு ஒரினச் சேர்கையாளர் என்று அறிவித்த முதல் இந்திய இளவரசர். ராஜ்பிபிலா சமஸ்தானத்துக்கான சொத்துகளுக்கு அவர்தான் வாரிசு. அவர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.


இதயத்தை பையில் சுமந்து வாழும் பெண் Top News
[Thursday 2018-01-11 13:00]

பிரிட்டனைச் சேர்ந்த செல்வா ஹுசைன் என்ற பெண்ணின் இதயம் செயலிழந்து விட்டது. அதனால் அவர் ஹரிபீல்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


சூரியனை போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரம்
[Wednesday 2018-01-10 18:00]

சூரியனை போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனை போன்றே அளவும், பரப்பளவும் உள்ளது. சூரியனின் வயது அளவே இதுவும் உள்ளது. இந்த புதிய நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது.


இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை வேறொருவருக்கு மாற்றிய வழக்கை துரிதமாக விசாரிக்க கட்டளை:
[Monday 2018-01-08 19:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டமை தொடர்பான வழக்கை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.


சிறுமியை வன்புணர்ந்த குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 7 வருட கடூழியம்"- யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று தீர்ப்பு
[Monday 2018-01-08 07:00]

சிறுமியை வன்புணர்ந்த குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமி குற்றவாளியின் மகள் ஆவார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் 2013ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி 14 வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமியின் தந்தையான இரத்தனசிங்கம் சிவகரனைக் கைது செய்தனர்.


உலகின் முதல் தொடுவுணர்வுடைய செயற்கை கை!
[Sunday 2018-01-07 18:00]

உலகிலேயே முதல் முறையாக தொடும் பொருட்களை உணரும் தன்மை உடைய செயற்கை கை ஒன்றை உயிர்மின்னணுவியல் தொழில்நுட்பம் மூலம் இத்தாலியில் உள்ள அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.


ஒரே தாயின் வயிற்றில் வெவ்வேறு ஆண்டில் பிறந்த இரண்டைக் குழந்தைகள்!
[Saturday 2018-01-06 00:00]

பொதுவாக இரட்டைக்குழந்தைகள் ஒரே மணி நேரத்தில் பிறப்பது வழமை ஆனால் இரட்டைக் குழந்தைகள் இருவரும் வெவ்வேறு ஆண்டில் பிறந்துள்ளன. இந்த அபூர்வ சம்பவம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரத்தில் உள்ள மருத்துவமனையில் இடம்பெற்றது. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆண் மற்றும் பெண் இரட்டை குழந்தைகள்பிறந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரியா என்ற பெண்மணிக்குமருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.


அமெரிக்காவில் வார்த்தைகளை பயின்ற கொரில்லா குரங்கு!
[Friday 2018-01-05 08:00]

அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவிலுள்ள மிருகக்காட்சி சாலையில் கட ந்த 1971ஆம் ஆண்டு ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்கிற்கு பிரசவம் நட ந்தது. பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது. ஆனால் 6 மாதம் ஆனதும் ஜாக்குலின் கொரில்லா தனது குட்டியை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதற்கிடையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உளவியல் படித்துக் கொண்டிருந்த பென்னி என்ற மாணவிக்கு அந்த ஆண்டு க்கான செயல்திட்ட தலைப்பானது "மனித மிருக உரையாடல்" என அமைய ப்பெற்றிருந்தது.


சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு வரை கார் விற்பனை தடை!
[Wednesday 2018-01-03 18:00]

சாலையில் அதிகமான இயங்கும் கார்களின் எண்ணிக்கையை 0.25 சதவிகித நிலையில் இருந்து, பூஜ்ஜியமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது சிங்கப்பூர் அரசு. அதன் அடிப்படையில், வரும் பிப்ரவரி 2018 முதல் 2020 வரை கார் விற்பனையை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ளது சிங்கப்பூர் அரசு. உலகின் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பிரதேசங்களில் ஒன்றான சிங்கப்பூரில் ஏற்கெனவே அதிக அளவில் வாகன நெரிசல் இருப்பதாகவும், மொத்த நிலப்பரப்பில் 12 சதவிகிதம், சாலைப்போக்குவரத்திற்கு உபயோகித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள சிங்கப்பூர் அரசு, புதிய சாலை வசதிகள் செய்வதற்கான நோக்கம் இல்லாத காரணத்தினாலேயே 2020 வரை புதிய கார் விற்பனையை நிறுத்தப்போவதாக விளக்கமளித்துள்ளது.


5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம்!
[Sunday 2017-12-24 08:00]

டெல்லியில் 5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. டெல்லியில் அதிகரித்துள்ள வாகனங்கள் வெளியிடும் புகையால் காற்று மாசு அதிகமாகி உள்ளது. இதனால், மனிதனின் நுரையீரலில் கோளாறு ஏற்பட்டு சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் உலகத்திலேயே அதிகளவாக இந்தியாவில் 12 லட்சம் பேர் காற்று மாசு தொடர்பான பிரச்னையால் உயிரிழந்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நுரையீரல் பராமரிப்பு அறக்கட்டளையுடன் பெட்ரோனட் எல்என்ஜி என்ற அமைப்பு இணைந்து, டெல்லியில் நேற்று தியாகராஜ் ஸ்டேடியத்தில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் டெல்லி தேசிய தலைநகர் மண்டலத்தில் உள்ள 35 பள்ளிகளை சேர்ந்த 5,300 குழந்தைகள் பங்கேற்றனர்.


ரோபோக்களை ஈடுபடுத்தி சேவையில் புதிய புரட்சியில் சென்னை உணவகம்!!
[Friday 2017-12-22 19:00]

இந்தியாவின் சென்னையிலுள்ள உணவகமொன்றில் ரொபோக்களை சேவையில் ஈடுபடுத்தி வாடிக்கையாளர் சேவையில் புதிய புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.குறித்த ‘ரொபோ’ உணவகத்தில், உணவு வகைகளை பறிமாறவும், துப்புரவு நடவடிக்கையிலும் ரொபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.ஏற்கனவே ‘மொமோ’ எனப் பெயரிடப்பட்டிருந்த குறித்த உணவகமானது ரொபோக்களை சேவையில் ஈடுபடுத்தியதை அடுத்து, அதன் பெயரை ‘ரொபோ’ உணவகம் என பெயர்மாற்றியுள்ளது.


ஓராண்டில் மட்டும் 70 கோடி சம்பாதித்த 6 வயது சிறுவன்!
[Sunday 2017-12-17 09:00]

பொதுவாக சினிமாவிலோ, விளம்பர படத்திலோ நடிக்கும் சிறுவர்களுக்கு தான் அதிக சம்பளம் கிடைக்கும். ஆனால், ரியானின் பெற்றோர் கொஞ்சம் மாத்தி யோசிச்சிருக்காங்க. ரியானுக்கு 3 வயது இருக்கும் போது, விளையாட்டு பொம்மைகளை கொடுத்து, அதன் தரம், பயன்பாடு குறித்து விமர்சனம் செய்ய வைத்து வீடியோ எடுத்துள்ளனர். அதை யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்தனர். ரியானின் விமர்சனம் செம ரீச்சாகி விட்டது. இப்போது ரியானுக்கு 6 வயது.ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.


65 லட்சம் டாலர்களுக்கு ஏலம் போன உலகின் மிகப்பெரிய அமைதி வைரம்!
[Wednesday 2017-12-06 08:00]

மேற்காப்பிரிக்கா கண்டத்தில் வைரச் சுரங்கள் நிறைந்த சியெரா லியோன் நாட்டின் கோனோ மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத வைரக்கல்லை கடந்த மார்ச் மாதம் பாதிரியார் ஒருவர் கண்டெடுத்தார். முட்டை வடிவத்திலான அந்த வைரத்தை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை நாட்டின் வளர்ச்சி சார்ந்த தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு அரசிடம் அதை ஒப்படைத்தார்.


Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா