Untitled Document
April 26, 2024 [GMT]
சீனாவில் காதலர் தினத்துக்கு இணையாக கொண்டாடப்படும் ஷிஸி நாள்!
[Monday 2017-02-13 18:00]

உலகில் பல்வேறு தினங்கள் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் காதலர் தினத்துக்கு என்று தனி உற்சாகம் இருக்கிறது.காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.அந்த நாளில் இவர்கள் சந்தோஷத்தில் மிதப்பதோடு மட்டுமல்லால் ஒட்டுமொத்த உலகத்தினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்திவிடுவார்கள். அந்த அளவுக்கு பார்க்கும் திசையெல்லாம் வண்ண வண்ண மலர்களும், பல்வேறு பரிசுப்பொருட்களும் தான் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் காதலர் தினம் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகின்றன. காதலர் தினம் உலகளவில் பிரபலமானது என்றால், சில நாட்டில் தனிப்பட்ட முறையிலும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.சீனாவில் காதலர் தினத்துக்கு இணையாக கொண்டாடப்படும் ஷிஸி நாள்.


  

சீன காலண்டரில் ஏழாவது சந்திர மாதத்தில் ஏழாவது நாள் கொண்டாடப்படும் ஷிஸி தினத்துக்கு பின்கதை உண்டு. சீன மக்களின் நம்பிக்கைப்படி சொர்க்கத்தை ஆட்சி செய்த ராஜா ஒருவரின் மகளான ஷின்யூ எனும் பெண் ஏழ்மை நிலையில் உள்ள நையுலங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரட்டை குழந்தைகளை ஈன்றெடுக்கிறாள்.இதுகுறித்து பெண்ணின் தந்தைக்கு தெரியவர தனது மனைவியை அனுப்பி ஷின்யுவை அழைத்து வரச்சொல்கிறார். .ஷின்யூவை அழைத்து வரும்போது, நையுலங் மற்றும் இரண்டு குழந்தைகளும் அழுவதை பார்த்து வருடத்துக்கு ஒரு முறை சந்திக்க அனுமதி தருகிறார்.அந்த நாள் செவ்ன்த் நைட் பெஸ்டிவல்(Seventh Night Festival) அல்லது ஷிஸி எனப்படுகிறது. அந்நாளில் இளம்பெண்கள் நல்ல துணை அமைய வேண்டும் என்று பழங்களை வைத்து படைக்கின்றனர். திருமணமானவர்கள் கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர். அன்றைய இரவு ஷின்யூ மற்றும் நையுலங் நட்சத்திரமாக ஒன்றிணைவார்கள் என எல்லோராலும் நம்பப்படுகிறது.

  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா