Untitled Document
April 26, 2024 [GMT]
ஒபாமாவின் காதல் டைரி..
[Wednesday 2017-02-15 08:00]

காதல் ஒரு மனிதனை என்னவாக வேண்டுமானாலும் மாற்றும். காதல் கோழைகளை வீரனாக்கும், காமெடியன்களை ஹீரோவாக்கும். அப்படிப்பட்ட காதல் ஒருவரை உலகின் சர்வ வல்லமை படைத்த பதவியான அமெரிக்க அதிபர் பதவிக்கு வரவைத்தது. எப்போதுமே ஒரு ஆண் சிறந்தவர் என மற்றவர்கள் கூறுவதை விட ஒரு பெண் கூறினால் அந்த ஆணின் மதிப்பு வேறு உயரத்தில் இருக்கும். அப்படித்தான் மிச்செல் ஒபாமாவின் ஒரே மேடைப்பேச்சு ஒபாமாவை அமெரிக்க அதிபராக்கியது.


  

இவர்களை, 'அமெரிக்க அதிபர் - ஃபர்ஸ்ட் லேடி'யாக அமெரிக்கா பார்த்ததைவிட, 'நல்ல கணவன் - மனைவி'யாகத்தான் பார்த்து வியந்தது. காதல், அன்பு, பாசம் என தங்களை மக்களோடு இணைத்துகொண்டதில் இந்த ஜோடி... நிஜமாகவே ஜோடி நம்பர் 1-தான். சட்டம் படிக்க ஹார்வர்ட் சென்ற மிச்செல் வழக்கறிஞராகி பின்னர் சிட்லி ஆஸ்டின் நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்தார். அங்குதான் ஒபாமாவைச் சந்தித்தார். அதன் பின் காதல், திருமணம் என ஒபாமா-மிச்செல் வாழ்க்கை காதலால் பின்னிப் பிணைந்தது.

நல்ல வேலையில் இருந்த மிச்செல் 2007-ம் ஆண்டு கணவருக்காக வேலையை உதறித் தள்ளினார். ஆம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒபாமாவுக்காக பிரசாரக் களத்தில் குதித்தார் மிச்செல். 'உலகின் மிக அதிகாரம் வாய்ந்த வெள்ளை மாளிகையில் கருப்பினத்தவரும் நுழைய முடியும்.' என்பதை நிரூபிக்க மிச்செலின் பிரசாரங்களும், ஒபாமாவின் தன்னம்பிக்கை பேச்சுகளும்தான் காரணம். ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பேசிய மிச்செல், 'என் கணவரை ஏன் அதிபராக்க வேண்டும்?'' என்று பேசியது ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஹோப் பிரசாரம் ஒபாமாவை பறைசாற்றியது என்றால், மிச்செலின் பேச்சுதான் அவரை அதிபராக்கியது என்று கூறலாம்.

பிரசாரம் முடிந்தது, அதிபரானார் ஒபாமா. இதற்கு மிச்செல் கேட்ட பரிசு, இவர்களது காதலின் ஆழத்தை உலகுக்கு காட்டியது. அது, 'ஒபாமா புகைப்பழக்கத்தை விட வேண்டும்.' என்பதுதான். ஒருமுறை மிச்செலிடம், 'உங்களை எப்படி அறிமுகம் செய்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்?' என்றதற்கு, 'எனது மகள்களின் தாயாக எனக் கூறி தான் அறிமுகம் செய்துகொள்ள ஆசை.' என்றார். அதாவது, 'அமெரிக்க அதிபரின் மனைவி!' என கர்வம் கொள்ளாமல் தாய்மை உணர்வோடு அவர் பேசியது மக்களை நெகிழ வைத்தது. 'ஆங்ரி ப்ளாக் உமன்' என ஒபாமா, மக்கள் மத்தியில் காதலோடு பேசியது எல்லாமே பார்ப்பவர்களை வியக்க வைத்தது.

2012-ம் ஆண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரங்களில் மிச்செலின் பேச்சு ஒபாமாவை உலக அரங்கில் அதிபர் என்பதையும் தாண்டி 'சிறந்த கணவர்' என்று அடையாளப்படுத்தியது. வெள்ளை மாளிகை பூங்காக்களில் ஒபாமாவும், மிச்செலும் சிறுவர்களுடன் விளையாடுவது; 'நாங்கள் உங்களைப்போல் ஆகவேண்டும்.' என அந்தச் சிறுவர்கள் கூறும்போது அவர்களை வாழ்த்துவது... என இயல்பாக தங்களின் அன்பை உலகுக்கு காட்டிய ஜோடி இவர்கள்.

இனி ஒபாமா அதிபர் இல்லை, மிச்செலும் ஃபர்ஸ்ட் லேடி இல்லை என்பது தெரிந்தாலும் 2016 ஜனநாயகக் கட்சி மாநாட்டில் 8 வருட அனுபவத்தையும், குழந்தைகளுக்கு தாயாகவும், அமெரிக்க மக்களுக்கு நல்ல முதல் குடிமகளாகவும் விளங்கினார் என்பதை அவரது பேச்சு உணர்த்தியது. 'எனது குழந்தைகள் வெள்ளை மாளிகைக்கு வரும்போது சிறுமிகள்; தற்போது யங் வுமன்.' எனக்கூறி தனது தாயுள்ளத்தை காட்டினார் மிச்செல்.

ஒபாமா தனது ஃபேர்வெல் பேச்சில், '25 வருடங்களாக மிச்செல் என்னோடு இருக்கிறார். ஒரு மனைவியாக, தாயாக... இந்த நாட்டின் ஃபர்ஸ்ட் லேடி என்பதையும் தாண்டி எனக்கு நல்ல தோழியாகவும் இருந்துவருகிறார்' என்றபோது மிச்செலின் கண்களில் வழிந்த நீர் தான் இவர்களது காதலின் அடர்த்தியைச் சொல்லியது. இன்று சூழல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கடைசி வரை காதல் சற்றும் குறையாமல் இருக்கும் இந்த ஜோடியை அமெரிக்கா எப்போதும் மிஸ் செய்யும்.!

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா