Untitled Document
November 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
'தாயின் அருகில் அடக்கம் செய்யுங்கள்' ; சிறுவனின் கோரிக்கை
[Monday 2017-03-20 21:00]

போலந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஃபிலிப்புக்கு திடீரென்று உடல்நிலை மோசமானது. என்ன நோய் என்றே தெரியவில்லை. தாயைப் பறிகொடுத்தவன். தந்தைதான் சிறுவனுக்கு எல்லாமே. சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனப் பதைபதைத்துப் போகிறார் தந்தை. இங்கிலாந்து நாட்டுக்கு சிறுவனை அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்.


  

இங்கிலாந்து புறப்படும் முன் , தாயின் கல்லறைக்குச் செல்கிறான் சிறுவன். தாயின் கல்லறையில் விழுந்து வணங்கி ஆசி வாங்கிக் கொண்டான். தாயுடன் நின்று புகைப்படம் எடுப்பது போலவே… அந்தக் கல்லறைக்கு அருகில் நின்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டான். அங்கேயே வர இருக்கிறோம் என்று தெரியவில்லை அந்தச் சிறுவனுக்கு. வாழ்க்கைதான் சில சமயங்களில் மிகவும் கொடூரமானதாயிற்றே!

போலந்து நாட்டைச் சேர்ந்தவர் Piotr Kwasny. இவரின் மனைவி அக்னீஸ்கா. கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்தனர். இரு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. ஃபிலிப் எனப் பெயரிட்டு செல்லமாக வளர்த்தனர். சிறிய குடும்பம். வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ தெரியவில்லை அக்னீஸ்காவைப் புற்றுநோய் தாக்கியது. க்வான்சியால் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை. உயிருக்குயிரான மனைவியை புற்று நோய் அவரிடம் இருந்து பறித்தது. போலந்து நாட்டில் உள்ள Wadowice அக்னீஸ்காவின் சொந்த ஊர். அந்தச் சிறிய கிராமத்தில் மனைவியின் உடலைப் புதைத்தார் க்வான்ஸி.

தந்தையும் மகனும் தனியாக வாழத் தொடங்கினர். க்வான்ஸியால் மகனைத் தனித்துப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. மகனுக்காக இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்தார். ஒரு குழந்தை பிறந்தது. இரு குழந்தைகளை தத்தும் எடுத்தனர். வாழ்க்கை சகஜ நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த போதுதான், மகன் ஃபிலிப்புக்கும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மகனைக் காப்பாற்ற லண்டன் கொண்டு செல்ல முடிவெடுத்தார்.

பல்வேறு கட்ட பரிசோதனைக்குப் பிறகு சிறுவனுக்கு ரத்தப் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பது தெரியவந்தது. துடித்துப் போனார் க்வான்ஸி. ஏற்கெனவே மனைவியை புற்று நோய்க்கு பலி கொடுத்துவிட்ட நிலையில், மகனுக்கும் புற்று நோய் என்றால்… எந்தத் தந்தையால்தான் தாங்கிக்கொள்ள முடியும் ? கடந்த 2013ம் ஆண்டு லண்டனில் உள்ள குழந்தைகள் புற்று நோய் மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். சற்று உடல்நிலை தேறி வந்த நிலையில் கடந்த செப்டம்பரில் ஃபிலிப்பின் உடல்நிலைமோசமானது. மூக்கில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. கால்களில் ரண வலி ஏற்பட்டது. தாங்க முடியாத வேதனையில் சிறுவன் துடித்தான். கடைசிக் கட்டமாக ஃபிலிப்புக்கு அளிக்கப்பட்ட கீமோதெரபியும், ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எவையும் பலன் அளிக்கவில்லை. தற்போது வலிநிவாரண சிகிச்சை மட்டுமே ஃபிலிப்புக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுவனுக்கு தனது வாழ்நாள் எண்ணப்படுவது தெரிந்தே இருந்தது. என்ன நினைத்தானோ தெரியவில்லை. ‘நான் இறந்த பின், எனது உடலை தாயின் கல்லறையிலேயே அடக்கம் செய்துவிடுங்கள்’ என வேண்டுகோள் விடுத்தான். ஐந்து வருடங்களுக்கு முன் புதைக்கப்பட்ட மனைவியின் சவப்பட்டியைத் தோண்டி எடுத்து மகனின் ஆசையை நிறைவேற்ற போக்குவரத்து உள்ளிட்டவற்றிற்கு போதிய பணம் இல்லாத நிலையில் இருந்தார் க்வான்ஸி. 6500 பவுண்டுகள் வரை ஆகும் என்ற தகவல் ஆன்லைனில் பரவியது. இங்கிலாந்து நாடே உருகிப்போனது. 6,500 பவுண்டு நிதிஉதவி திரட்ட திட்டமிடப்பட்டது. இப்போதுவரை 37000 பவுண்டு நிதி திரட்டப்பட்டுள்ளது.

லண்டனில் சிறுவன் ஃபிலிப் அனுமதிக்கப்பட்டுள்ள புற்று நோய் மையம் பிரசித்தி பெற்றது. புற்று நோயை தொடக்க நிலையில் கண்டுபிடித்தால், குணப்படுத்திவிடலாம். இந்த மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகள், வார்டில் உள்ள மணியை மூன்று முறை அடித்து ஓசையை எழுப்புவார்கள். அந்த மணிச்சத்தம் மற்ற குழந்தைகளுக்கும் தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்பதால் இது ஒரு பாரம்பர்ய நிகழ்வாக இந்த மருத்துவமனையில் நிகழும்.

“என் மகன் ஃபிலிப்பின் கரங்கள் மட்டும் அந்த மணியை நோக்கி நீளப் போவதில்லை.. நான் என் மகனை அடக்கம் செய்யவேண்டும் என்று நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது. என் மனைவியின் கல்லறையில் மகன் புதைக்கப்பட்டால் சொர்க்கத்தில் அவனை அவள் பார்த்துக்கொள்வார் என்று நான் திடமாக நம்புகிறேன்” என்கிறார் க்வான்ஸி. மார்ச் மாத ஆரம்பத்திலேயே மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். வலிக்கான சின்ன சிகிச்சைகள் மட்டும் தற்போது நடைபெற்று வருகிறது….. வாழ்க்கை சில சமயம் காட்டும் கோரமுகம், பார்க்கவே இயலாத அளவு கொடுமையானது.

  
   Bookmark and Share Seithy.com


புதுமணப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை: - திருமணம் முடிந்த 4-வது நாளில் கோர்ட்டு தீர்ப்பு
[Wednesday 2017-11-01 18:00]

மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில், திருமணம் முடிந்த 4-வது நாளில் புதுமணப்பெண்ணுக்கு ஆயுள்தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. திருச்சி கோட்டை பகுதி பட்டவர்த் ரோட்டை சேர்ந்தவர் முத்துரத்தினாவதி (வயது 80). இவரது வீட்டின் மாடியில் திவ்யபிரியா (25) என்ற பெண் வாடகைக்கு குடியிருந்து வந்தார். திவ்யபிரியா திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக பணியாற்றினார்.


ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் மண்டை ஓடு கண்டுபிடிப்பு!
[Friday 2017-10-27 17:00]

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் மண்டை ஓடு ஆஸ்திரேலிய கண்டத்தில் உள்ள சிறிய தீவான பப்புவா நியூ கினியாவில் கிடைத்துள்ளது. இந்த மண்டை ஓடு 1929-ம் ஆண்டு ஐடாப் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த மண்டைஓடு எத்தகைய காலகட்டத்தைச் சேர்ந்தது என விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்நிலையில் 1998-ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட ஒரு சுனாமி தாக்குதலுக்கு பின்னர், இங்குள்ள மண் மற்றும் அந்த மண்டைஓடு ஆகியவற்றை சர்வதேச குழு ஒன்று ஆராய்ச்சிக்கு உட்படுத்தியது.


விந்தணு தானம் - மனைவிக்கு தெரியாமல் 60 குழந்தைகளுக்கு தந்தையான கணவன்!
[Friday 2017-10-13 09:00]

விந்தணு தானம் (Semen / Sperm Donation) என்பது உலகிளவில் பெருகி வருகிறது. உலகெங்கிலும் ஆண்மை குறைபாடு மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதால், இரத்த தானம், தாய் பால் தானம் போல, விந்தணு தானமும் செய்யப்பட்டு வருகிறது. சிலர் தங்கள் விந்தை பணத்திற்கும் விற்கிறார்கள். பெண்கள் மத்தியில் எப்படி தாய் பால் சுரக்கவில்லை என்றால் தானம் பெறப்படுகிறதோ, அப்படி தான் ஆரோக்கியமான விந்து இல்லாதிருக்கும் ஆண்கள் விந்து தானம் பெற்று பிள்ளை பெறுகிறார்கள்.


ராட்சத மலைப்பாம்பை கொன்று விருந்தாக்கிய கிராம மக்கள்!
[Friday 2017-10-06 07:00]

இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் பொதுவாக 20 அடி நீள மலைப்பாம்புகள் உள்ளன. அவற்றை அங்குள்ள கிராம மக்கள் பிடித்து உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், சுமத்ரா தீவின் துணை மாவட்டமான பட்டாங் கன்சாலில் 37 வயது மதிக்கத்தக்க சுடராஜா என்பவர் அங்குள்ள பகுதியில் பாம்பு பிடிக்க சென்றுள்ளார்.


பிரேசில் போலீசார் வெளியிட்டனர் வேற்றுகிரகவாசி புகைப்படம்! Top News
[Tuesday 2017-10-03 18:00]

உலகின் முதல் நிஜ வேற்றுகிரகவாசி என பிரேசில் போலீசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பிரேசில் போலீசார் வெளியிட்ட இந்த புகைப்படமானது வேற்றுகிரகவாசி குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவரும் அமைப்பினர் தங்களின் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். பிரேசிலின் பெர்குமெட்ர் பகுதியில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடைபெற்றுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் நள்ளிரவில் குறித்த உருவத்தை தங்களது மொபைல் போனில் புகைப்படமெடுத்துள்ளனர்.


உகந்த வரன் கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்!
[Thursday 2017-09-28 17:00]

இத்தாலியில் 40 வயதான பெண் ஒருவர் தமக்கு உகந்த வரன் இதுவரை கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.இத்தாலியின் லம்பார்டி நகரில் குறித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. Lissone பகுதியில் உடற்பயிற்சி பயிற்றுநராக இருக்கும் லாரா மெஸ்ஸி(40) கடந்த 20 ஆண்டுகளாக தமக்குரிய வரனை தேடி வந்துள்ளார்.இந்த நிலையில் 20 ஆண்டுகளாக எந்த வரனும் சிக்காததால் அவர் வித்தியாசமான இந்த முடிவுக்கு வந்துள்ளார்.


ஏன் ஒருத்தரை மட்டும் காதலிக்கணும்? - மனம் மாறிய ஓவியா!
[Tuesday 2017-09-26 19:00]

இன்று சென்னை ஓ.எம்.ஆர் ரோட்டில் நடைபெற்ற ஒரு தனியார் ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நடிகை ஓவியா. விழாவில் கலந்துகொண்ட ஓவியாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓவியா ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். இந்த விழாவில் பேசிய ஓவியா, பிக்பாஸ் வீட்டில் தான் பாடிய 'கொக்கு நெட்டக் கொக்கு...' பாடலைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.


உணவு தண்ணீர் உட்கொள்ளாமல் வாழும் 82 வயது சாமியார்!
[Friday 2017-09-22 17:00]

77 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் வாழும் 82 வயது சாமியார் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.இந்தியாவில் ப்ரஹ்லாத் ஜானி (82) என்பவர் வாழ்ந்து வருகிறார், கடந்த 77 ஆண்டுகளாக தான் உணவு சாப்பிடவில்லை மற்றும் நீர் குடிக்கவில்லை என்று கூறுகிறார்.


திருமணம் என்ற பெயரில் அரபு நாட்டவர்களுக்கு சிறுமிகளை விற்கும் கும்பல் சிக்கியது:
[Wednesday 2017-09-20 19:00]

பணத்திற்காக அரபு நாட்டவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் கும்பலை போலீஸ் பிடித்து உள்ளது. ஐதராபாத்தில் சிறுமிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்படும் சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஐதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ரூ. 5 லட்சம் கொடுத்து திருமணம் செய்துக் கொண்ட வெளி உலகிற்கு தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் தாயார் போலீசில் புகார் கொடுத்த போதுதான் சிறுமியின் உறவினர்கள், முகவர்கள் பணம் வாங்கிக்கொண்டு சிறுமியை முதியவருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.


தலைமுடியை வெட்டி வீசியவர் என - மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரை சரமாரியாக தாக்கிய பெண்கள்!
[Wednesday 2017-09-20 19:00]

தங்களின் தலைமுடியை வெட்டி வீசியவர் என கருதி மனநலம் பாதித்த வாலிபரை பெண்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள சேனா கிராமத்தை சேர்ந்த பெண்களின் தலைமுடிகள் மர்மமான முறையில் வெட்டி வீசப்படும் சம்பவங்கள் நடந்து வந்தன. தூங்கும் நேரத்தில் யாரோ மர்ம ஆசாமி பெண்களின் தலை முடியை வெட்டி வீசுவதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


டெக்சாஸ் கடற்கரையில் ஒதுங்கிய கோரைப் பல் உயிரி!
[Friday 2017-09-15 08:00]

ஹார்வி புயலுக்குப் பிறகு அமெரிக்காவின் டெக்சாஸ் கடற்கரையில் ஒதுங்கிய கோரைப் பற்கள் உள்ள மர்மமான கடல் உயிரி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.டெக்சாஸ் நகரக்கடற்கரையில் அழுகிக் கொண்டிருந்த இந்த உயிரியை கண்ட பிரீத்தி தேசாய் என்பவர் அதன் படத்தை டிவிட்டரில் வெளியிட்டு அது என்ன உயிரி என்று கேட்டு ஒரு பதிவிட்டார். ட்விட்டரில் அந்தப் பதிவு உயிரியலாளரும், விலாங்கு மீன் ஆய்வாளருமான டாக்டர் கென்னத் டிகேவுக்கு அவரது நண்பர் ஒருவரால் அனுப்பப்பட்டது.


கிருஷ்ண ஜெயந்தி - பச்சிளம் குழந்தையை இரண்டரை மணிநேரம் இலையில் கட்டிவைத்த சம்பவம்!
[Thursday 2017-09-14 18:00]

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 3 வயது குழந்தையை சுமார் இரண்டரை மணிநேரம் இலையில் கட்டிவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது, இந்த பண்டிகை அன்று தங்கள் குழந்தைகளை கிருஷ்ணர் போன்று அலங்காரம் செய்வார்கள், மேலும் பல்வேறு வகையான பலகாரங்களை செய்து தங்கள் வீட்டிற்கு கிருஷ்ணரை வரவேற்பார்கள்.


ப்ரூஸ்லீ இறப்பின் மர்மம் :33 வருடங்களுக்கு வெளியான மருத்துவ அறிக்கை:
[Saturday 2017-09-09 07:00]

மாபெரும் கராத்தே லெஜன்ட், ப்ரூஸ்லீயின் இறப்பு குறித்த ரகசிய மர்மம் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கையில் கசிந்துள்ளது. அவரை ப்ளான் பண்ணி கொலை செய்துள்ளனா் என்பதே அதிா்ச்சியான செய்தியாகும். காெலைக்கு முக்கியமான காரணம் அவர் மனைவி என்பது தான் பேரதிா்ச்சியை உண்டாக்கியுள்ளது.


முழு சூரிய கிரகணத்தில் பிறந்த குழந்தை: - பெற்றோர்கள் வைத்த வித்தியாசமான பெயர்
[Thursday 2017-08-24 09:00]

அமெரிக்காவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தின் போது பிறந்த குழந்தைக்கு வித்தியாசமாக பெயரிட்டு பெற்றோர்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.அமெரிக்காவின் 14 மாகாணங்களில் 99 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் நடைபெற்ற முழு சூரிய கிரகணத்தை அனைவரும் பார்த்து களிப்படைந்தனர்.


அஹோசின் தேவதை படுகொலை! - நைஜீரியருக்கு ஆயுள் தண்டனை?
[Thursday 2017-08-17 18:00]

இலங்கையைச் சேர்ந்த அகதிப் பெண் ஒருவர் ஜேர்மனியின் அஹோஸ் நகரில் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் கைதானவரின் வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. அஹோஸ் பகுதியில் வசித்து வந்த 22 வயதான சூபிகா பரமநாதன் என்ற குறித்தப் பெண், அவரது ஆண் நண்பர் என்று கூறப்படும் நைஜீரியாவைச் சேர்ந்த அகதி ஒருவரால் கடந்த பெப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். அகதிகளுக்கான தொண்டுபணிகளியில் ஈடுபட்டு வந்த அவரை ‘அஹோசின் தேவதை’ என்று அந்த பகுதி மக்கள் அழைத்துவந்ததாக ஜேர்மனியின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா