Untitled Document
May 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்!
[Tuesday 2024-03-26 18:00]

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார். மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு சிகிச்சை பலனின்றி காலமானார். 2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த இவர், சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலிலும் நடித்திருந்தார்.

சின்னத்திரையில் நடித்துக்கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய சேஷூ, வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், ஏ1, திரௌபதி, ஆண்டி இந்தியன், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில்

லொள்ளு சபாவில் நடித்து காமேடியானாக சினிமாவில் அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள நிலையில், அவர் நடிக்கும் படங்களில் சேசு நடித்து வந்தார்.

அண்மையில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்திலும் இவரது நடிப்பில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் சேஷுவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் சேஷூ காலமானார்.

இவரின் திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com



கண்ணை கூசும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்! Top News
[Thursday 2024-05-23 06:00]

துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான யாஷிகா ஆனந்த் பஞ்சாப்பை சேர்ந்த மாடல் அழகி ஆவார். 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற தமிழ் திரைப்படத்தை நீச்சல் பயிற்சியாளராக நடித்தார். எனினும் இந்த படம் இவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுக்கவில்லை. இதனை அடுத்து இவர் நடித்த துருவங்கள் பதினாறு மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.



மூன்று ஆண்டு சிறை தண்டனை: தப்பிப்பாரா இர்ஃபான்?
[Wednesday 2024-05-22 18:00]

நேற்றிலிருந்து யூடியூபர் இர்ஃபான் விவகாரம் சோசியல் மீடியாவில் கொழுந்துவிட்டு எரிகிறது. தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என அவர் அறிவித்தது தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம். துபாயில் இந்த பரிசோதனையை செய்த அவர் தனக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என ஒரு பார்ட்டி வைத்து பகிரங்கப்படுத்தி இருக்கிறார். இதுதான் தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.



கவர்ச்சி நடிகையை கேட்டு அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்!
[Wednesday 2024-05-22 18:00]

சிவகார்த்திகேயன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதுப்புது ஹீரோயின் உடன் டூயட் பாடி விடுவார். அப்படி அவர் ரொம்ப காலமாக கண்ட்ரோலில் வைத்து இருந்த ஹீரோயின் பிரியங்கா மோகன். அவருக்கு ஒரு கார்டியன் போல செயல்பட்டு வந்தார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான், என அடுத்தடுத்து இவர்கள் காம்போவில் படங்கள் வெளியானது. மற்ற படங்களுக்கும் சிபாரிசு செய்வது என பிரியங்கா மோகனின் கால் சீட்டையும் கவனித்து வந்தார் சிவகார்த்திகேயன். அது மட்டுமின்றி அவருக்கு ஒரு மேனேஜர் போல் செயல்பட்டு வந்தார் எஸ் கே.



நடிகை நமிதாவை ஏமாற்றிய தயாரிப்பாளர்!
[Wednesday 2024-05-22 18:00]

விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து எங்கள் அண்ணா திரைப்படத்தில் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நமிதா. இதற்கு முன் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. டிகன், இங்கிலீஷ்காரன், சாணக்கியா, பம்பர கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்ச குதிரை, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா, என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார்.



நடவடிக்கைக்கு பயந்து இர்பான் எடுத்த முடிவு!
[Wednesday 2024-05-22 06:00]

ஹோட்டலில் சாப்பாடு எப்படி இருக்கிறது என ரிவியூ சொல்லி யூட்டியூபில் பாப்புலர் ஆனவர் இர்பான். அவர் சமீபத்தில் தொடங்கிய குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராகவும் வந்திருக்கிறார். இர்பான் தற்போது ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவரது மனைவி ஆலியா கர்ப்பமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு மகிழ்ச்சி உடன் அறிவித்து இருந்தனர்.



குட் பேட் அக்லீ படத்தின் போஸ்டர் செய்த சாதனை!
[Wednesday 2024-05-22 06:00]

விடாமுயற்சி படம் கிடப்பில் இருக்கும் நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த படம் 'குட் பேட் அக்லீ' ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் அந்த படத்தை இயக்குகிறார். ஹைதராபாத்தில் ஷூட்டிங் சில தினங்கள் நடைபெற்ற நிலையில் அதன் பின் படக்குழு சென்னைக்கு திரும்பியது.



புதிய சாதனை படைக்க மோகன்லாலுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
[Tuesday 2024-05-21 18:00]

இந்திய திரையுலகில் தமிழ், மலையாள, தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் மோகன்லால். மலையாளத் திரையுலகில் முதல் முறையாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் இவர் நடித்த புலிமுருகன். நடிப்பதைத் தாண்டி தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.



சூரியை பற்றி சிவகார்த்திகேயன் சொன்ன செய்தி!
[Tuesday 2024-05-21 18:00]

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி கூட்டணியில் வெளிவந்த விடுதலை மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. அதிலும் இதுவரை காமெடியனாக இருந்த சூரி இதில் நடிப்பில் கலக்கி இருந்தார். அதை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் என அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டானார். அதில் கருடன் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது.



பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் சிம்பு!
[Tuesday 2024-05-21 18:00]

நடிகர் சிம்பு தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



டாப் குக்கு டூப் குக்கு ஷோவில் நுழைந்த நடிகர் வடிவேலு!
[Monday 2024-05-20 06:00]

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் இருந்து விலகிய மீடியா மேசன்ஸ் நிறுவனம் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இணைந்து தற்போது சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற ஷோவை தொடங்கி இருக்கின்றனர்.



TTF வாசன் செய்த குளறுப்பிடியால் காதலிக்கு நேர்ந்த கொடுமை!
[Sunday 2024-05-19 19:00]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான். அதனால் தான் நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஐந்தாவது சீசன் ஆக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு வாரம் முடிந்த நிலையில் தற்போது இந்த வார எலிமினேஷனுக்கு ஒரு போட்டியாளர் தயாராகி விட்டார்.



நேரலையில் இந்தியன் 3 பற்றி அப்டேட் கொடுத்த கமல்!
[Sunday 2024-05-19 19:00]

ஐபிஎல் சீசன் 17 கிரிக்கெட்போட்டிகள் களை கட்டி வருகிறது. அதில் சமீபத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையான போட்டியில் கமல் மற்றும் இயக்குனர் சங்கர் அவர்கள் நேரலையில் பங்கு கொண்டு இந்தியன் 2 படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டனர். கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படம் தான் இந்தியன். கதை மற்றும் காட்சி அமைப்பிற்காக ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.



விஜய்யுடன் இணைந்த இளம் நடிகை!
[Sunday 2024-05-19 19:00]

நடிகர் விஜய் - இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் கோட் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அரசியலில் களமிறங்கவுள்ளதால் சினிமாவில் விலகி முழு நேரமும் அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தார். தளபதி 69 தான் அவருக்கு கடைசி படமாக இருக்கும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.



உடல் எடை கூடியதால் காணாமல் போன 5 நடிகைகள்!
[Sunday 2024-05-19 08:00]

திரைத் துறையில் நடிகர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல் பருமனை மற்றும் தோற்றத்தை அடிக்கடி மாற்றி வெற்றி பெற்று வருகின்றனர். ஆனால் நடிகைகள் தங்களது உடல் பருமன் சற்று அதிகரித்துவிட்டாலும், மார்க்கெட்டை இழந்து அல்லாடி விடும் நிலைமை ஏற்படுகிறது. அவ்வாறு உடல் பருமனால் மார்க்கெட்டை இழந்த நடிகைகளில் சிலர்,



ஸ்டார் படம் மூலம் அதிரடி காட்டும் நடிகர் கவின்!
[Sunday 2024-05-19 08:00]

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் நடிகர் கவின். முதல் தொடர் கொஞ்சம் ரீச் கொடுக்க பல போராட்டங்களுக்கு பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் நாயகனாக மாறினார். அதனை தொடர்ந்து பிக்பாஸில் கலந்துகொண்டவர் சுமாராக விளையாடி இருந்தார். பின் கவினின் திரைப்பயணத்திலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் படமாக அமைந்தது தான் டாடா. இந்த படம் மூலம் கவினுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி அங்கீகாரம் கிடைத்தது.


NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா