Untitled Document
May 11, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடிய தமிழர் தேசிய அவையின் 7ம் கட்ட தாய்த் தமிழ் நாடு வெள்ள நிவாரணப் பணி: Top News
[Monday 2015-12-28 22:00]

7ம் கட்டமாக தமிழ் நாட்டு வெள்ள அனர்த்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட ஆதி திராவிட, இஸ்லாமிய மக்களை அதிகமாக கொண்ட ஆலம்பூர் மாவட்டத்தில் கனடிய தமிழர் தேசிய அவையினர் தமது பணிகளை டிசெம்பெர் மாதம் 26ம் திகதி காலை 11 மணியிலிருந்து மாலை 1 மணி வரை மேற்கொண்டிருந்தனர். 1130 குடும்பங்களுக்கு அம்மக்களின் தேவையைத் தெரிந்து படுப்பதற்குரிய பாய், போர்வை உட்பட அரிசி பொதியும் வழங்கப்பட்டது. இவ்விசேட நிகழ்வில் கனடிய தமிழர் தேசிய அவையின் உறுப்பினரும், தமிழ் ஊடக பேச்சாளரான தேவா சபாபதியும் மற்றும் பழ நெடுமாறன் ஐயா, ம. நடராஜன் ஐயா, கவிஞ்சர் காசி ஆனந்தன், மணியரசன், ஓவியர் வீர சந்தானம், வணிக சங்கத் தலைவர் வெள்ளையன், தயாரிப்பாளர் மணிவண்ணன், கவிஞ்சர் சிநேகன், இயக்குனர் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இன்நிகழ்விற்கு தமிழகத்திலிருந்து 10 ற்கும் அதிகமான ஊடகங்கள் வருகை தந்திருந்தனர்.

ஏற்கனவே 6 கட்டங்களாக வெள்ளத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மிகவும் பின்தங்கிய இடங்களான கடலூர் மாவட்டம், போரூர், நெற்குன்றம், பெரும்பலூர், மூலைக்கடை, பொன்னேரி, பழம்தண்டலம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளுக்கு ஆறு கட்டங்களாக உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. எதிர் வரும் காலங்களிலும் கனடிய தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும். இவ் வேலைத்திட்டத்தில் தம்முடைய முழு ஆதரவையும் வழங்கிய கனடிய தமிழ் மக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மீண்டும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலதிகத் தொடர்புகளுக்கு:

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

தொலைபேசி: 416-830-7703 - மின்னஞ்சல்: info@ncctcanada.ca

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா