Untitled Document
May 11, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்க IDEAL ISAI INC. நிறுவனம் உதயம்! Top News
[Monday 2016-01-04 08:00]

கனடா ரொறண்டோ பெரும்பாகப் பகுதியிலுள்ள தமிழ் இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் இசைக் கலையினை வளர்க்கும் வகையில் முன்னணிக் கலைஞர்கள் ஒன்று கூடி IDEAL ISAI INC. என்ற நிறுவனத்தினை உருவாக்கி உள்ளனர். இதன் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று ஞாயிறு (03-01-2016) பிற்பகல் ஸ்காபுறோவிலுள்ள துஊ டீயஙெரநவ ர்யடட மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஊடக வியலாளர் மகாநாட்டில் பத்திரிகைகள் தொலைக் காட்சிகள்இ இணையத்தளங்கள் வானொலிகள் ஆகியவற்றினை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இசைக் குயில் சகோதரிகளான செல்விகள் பிரதாயினி விதுசாயினி பரமநாதன் மற்றும் இசைக் கலைஞர்களான திரு. ஸ்ரPவ் கிளிவ் வலன்ரைன் (தீபன்) பிரபா பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மகாநாட்டினை நடாத்தினார்கள். திரு.தீபன் கூட்டத்தில் உரையாற்றிய போது 'ஏப்பிரல் மாதம் 29ம் திகதி விதுசாயினியின் பிறந்த தினமாகும்.அதனைக் கொண்டாடுவது பற்றி நாம் கலந்துரையாடிய போது அதனை தனது பிறந்த தின விழாவாகக் கொண்டாடாது பிற கலை ஞர்களையும் இணைத்து கொண்டாடினால் நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையையும் விருப்ப த்தையும் விதுசாயினி தெரிவித்தார். அது சரியான யோசனையாகத் தென்பட்டதால் அதுபற்றி நாம் கூடி ஆராய்ந்த போது தான் கலைஞர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு அமைப்பின் கீழ் செயற்பட்டால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உதயமாகியது. அதற்காக நாம் விதுசாயி னிக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாம் ஒரு அமைப்பாக செயற்படும் போது பொது மக்கள் தங்கள் விழாக்களுக்கு இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கு எம்முடன் தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்வது சுலபமாக இருக்கும். எனவே தான் இச்செய்தியினை வெளிப்படுத் தும் வகையில் முதலில் நாம் இந்த ஊடகவியலாளர் மகாநாட்டினை ஏற்பாடு செய்தோம். நீங்கள் அனைவரும் இதற்கென நேரத்தினை ஒதுக்கி இதில் கலந்து கொண்டமைக்கு நாம் எமது நன்றி யையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்" என்றார்.

திரு.பிரபா பாலகிருஷ்ணன் உரையாற்றிய போது - இத்தகைய ஒரு அமைப்பினை ஏற்படுத்துவது பற்றி பல கலைஞர்களுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய போது இருபது கலைஞர்கள் எமது ஆலோசனையை ஏற்றுக் கொண்டு எம்முடன் இணைந்து செயலாற்ற முன்வந்துள்ளனர். அதனால் ஏப்பிரல் 29ம் திகதி எமது கழகத்தின் முதலாவது நிகழ்ச்சி நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். எம்முடன் இணைய விரும்பும் கலை ஞர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு இணைந்து கொள்ளலாம்" எனக் கூறினார்.

செல்வி பிரதாயினி உரையாற்றிய போது 'நாம் ஒரு அமைப்பாக இணைந்து நிகழ்ச்சிகளை நடாத் தும் போது அதன் மூலம் சேகரிக்கப்படும் நிதியில் ஒரு பகுதியினை ஊரிலுள்ள நமது மக்களுக்கு அனுப்பி உதவி செய்ய முடியும். நாம் அங்கு சென்ற போது அவர்கள் முறையான வீடுகளும் குடி நீர் வசதிகளும் இல்லாமல் அவதிப்படுவதை நேரில் கண்டு வேதனை அடைந் தோம்" என்றார்.

ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்கள் எமது முயற்சிக்கு உங்க ளது ஆதரவு மிகிமிக அத்தியாசியமாகும். இன்று நீங்கள் அனைவரும் சமூகம் தந்திருப்பதற்கு நாம் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு எனவும் தெரிவித்தார்கள்.

செய்தி தொகுப்பு - வீரகேசரி மூர்த்தி

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா