Untitled Document
May 11, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா உறங்கா விழிகள் அமைப்பினால் கல்வி உபகரணங்கள் அன்பளிப்பு: Top News
[Tuesday 2016-01-05 19:00]

கனடாவில் இருந்து இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உறங்காவிழிகள் அமைப்பின் அனுசரணையுடன் அறிவொளி கல்வி வளர்ச்சிக் கழக மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் கல்வி நிலைய ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வும் மாணவர்களது ஆளுமைகளை வெளிப்படுத்தும் நூல்வெளியீடு மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இலவச கல்விச் சேவையை வழங்கி வரும் அறிவொளி கல்வி நிலையத்தில் கல்வி பயிலம் 276 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் சிறுவர் நூல் வெளியீடும், கலைநிகழ்வுகளும் வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய கணேசன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (03-01-2016) இடம்பெற்றது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வன்னிப் பிரதேச மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவால் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பினை வழங்கும் பொருட்டு அறிவொளி கல்வி வளர்ச்சிக் கழகம் என்றும் இலவச கல்விச் சேவை நிலையம் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் நெடுங்கேணி சேனைப்புலவில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த அறிவொளி கல்வி வளற்சி கழகமானது இன்று 9 இடங்களில் தனது இலவச கல்வி சேவையை வழங்கி வருகின்றது. இதற்கான மாதாந்த நிதி உதவியானது கனடா உறங்கா விழிகள் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் நோர்வே அபிவிருத்திக் குமுகம், , நோர்வே மொட்டன்ஸ்றூட் உள்ளிட்ட அமைப்புக்களும், தனிநபர்கள் சிலராலும் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையங்களில் கல்விபயிலும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டினை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் மாணவர்களின்பன்முக ஆழுமையினை விருத்தி செய்யும் நோக்கிலும் இந்த நிலையங்களில் கல்வி கற்கும் 276 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்ததுடன் சிறுவர்களின் ஆக்கங்களைத் தாங்கிய 'அறிவொளி' என்ற நூல் வெளியீடும் கலைநிகழ்வுகளும் இடம் பெற்றது.

அறிவொளி கல்வி நிலைய இயக்குனர் எஸ்.தவபாலன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார், வவுனியா தமிழ் சங்கத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி விநாயகமூர்த்தி மற்றும் 276 பிள்ளைகளதும் பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா