Untitled Document
May 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சிறிலங்காவுக்கு ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான சட்டப் போராட்டத்தை தொடங்கியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! Top News
[Tuesday 2016-12-13 09:00]

சிறிலங்காவின் சட்டப்போராட்டத்தை பன்னாட்டு சட்டாவாளர்களின் துணையுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியது. தமிழ்மக்கள் தமக்குரிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தனிநாடு கோருவது தண்டைக்குரிய குற்றமாக, சிறிலங்காவின் ஆறாம் திருத்தச்சட்டம் அமைவதோடு, மக்களது கருத்துச் சுதந்திரத்தினையையும், பேச்சு உரிமையினையையும் மறுக்கின்றது. இந்நிலையில், மக்களின் அடிப்படை உரிமையினை மறுக்கின்ற சிறிலங்காவின் இச்சட்டமூலத்துக்கு எதிராகவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது சட்டப் போராட்டத்தினை முறையாக தொடங்கியுள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு சட்டவாளர்களை உள்வாங்கி, ஐ.நா. மனிதவுரிமைக் குழுவின் முன் வாதிடப்பட இருக்கும் இச்சட்டப் போராட்டத்தில் பிரான்சின் பிரபல சட்டவாளர் திரு. ஜில் பிக்குவா அவர்களும், தென் சுடான் சட்டவாளர் திரு. பீற்றர் குஜோ ஆகியோர் முதற்கட்டமாக ஒப்பமிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் ரம்சி கிளார்க், தமிழகத்தின் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி இளைப்பாறிய நீதியரசர் கே.பி.சிவசுப்பிரமணியம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் இச்சட்டப் போராட்டத்திற்கு தலைமை தாங்குகின்றனர்.

இச்செயல்முனைப்பு தொடர்பில் நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை விடுத்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டமூலமானது ஐ.நா. சபையின் சிவில் மற்றும் பொது மக்கள் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் 18ம் 19 சரத்துகளில் குறிப்பிட்பட்டுள் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியே இந்த நெருக்கடியினை சிறிலங்காவுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்படுத்துகின்றது.

ஐ.நா. பொதுச்சபையின் தீர்மானம் 2625 (1070) வழமையான சர்வதேசச் சட்டமாகவுள்ளதன் அடிப்படையில், தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிநாட்டை உருவாக்குவது தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவது சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாம் திருத்தத்தில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பபடுவது தொடர்பாக தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இக்காலகட்டத்தில் தமிழ்மக்கள் தமக்கான உரிமையை எதுவித தடைகளுமின்றிப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். ஆகையால் இம்மனு பொருத்தமானதொரு காலத்தில் தாக்கல் செய்படவிருக்கிறது.

தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுமுள்ள சட்டவாளர்களையும், மற்றும் உலகெங்கும் வாழும் முற்போக்குக் கருத்துடைய சட்டவாளர்களையும் ஆதரவு வழங்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோருகிறது.

1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரதிகளை வினியோகித்ததாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட ட்ரயல் அற் பார் (யூரிகளற்ற நீதிமன்றம்) வழங்கில் ஜீ.ஜீ. பொன்னம்பலம், சா.ஜே.வே. செல்வநாயகம், மு. திருச்செல்வம் ஆகியோரின் தலைமையில் அறுபத்தியாறு சட்டவாளர்கள் வாதிட்டதை ஒத்ததாகவே இம்முயற்சியும் அமையவிருக்கிறது.

இவ்விடயத்தில் ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம் உட்பட்ட சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்டு தீர்ப்புகளை முன்னுதாரணங்களாக் கொண்டு வாதிடப்படும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இவ்விடயத்தில் இணைப்பாளராகச் செயற்படும் டேவிற் மற்றாஸ் அவர்களுடன் dmatas@mts.net என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

  
  
   Bookmark and Share Seithy.com



பிரான்சில் பேரெழுச்சிகொண்ட மே 18 முள்ளிவாய்க்கால் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்! Top News
[Friday 2017-05-19 19:00]

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று 18.05.2017 வியாழக்கிழமை மிக பேரெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிஸ் La Chapelle மெட்ரோ நிலையத்தின் அருகாமையில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க எமது நாட்டில் இடம்பெற்ற அவலங்களை ஆற்றுகை செய்தபடியும் பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடியும் பாரிஸின் முக்கிய பகுதிகளுக்கு ஊடாகச் சென்று Place de la République இனை அடைந்தது.



ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Friday 2017-05-19 19:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 8ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2017 வியாழக்கிழமை ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் காலை 9.00 மணி தொடக்கம் 17.00 வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனனர்.



மௌரிசியஸ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் Top News
[Friday 2017-05-19 19:00]

மௌரிசியஸ் நாட்டு பிரதி அதிபர் உயர் திரு பரமசிவம் பிள்ளை வையாபுரி பங்குபற்றுதலுடன் தமிழீழ நினைவு தூபி அமைக்கப்பட்ட இடத்தில் பல அரசியல் தலைவர்கள் முன்னிலையில் மௌரிசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பு அமைப்பினரால் நடாத்தப்பட்டது, அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்காவிலும் டர்பன் நகரத்தில் நினைவு கூறப்பட்டது.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றினார் முதல்வர் விக்னேஸ்வரன்: Top News Top News
[Thursday 2017-05-18 11:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.



லய இசையில் லயித்த மெல்பேர்ண்: Top News
[Wednesday 2017-05-17 21:00]

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகின்றேன். Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும். மாலை 6:30 மணிக்கு முன்னரே Rivergum Performing Arts Centre மண்டபம் நிரம்பியிருந்தது. சரியாக 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நவரட்ணம் ரகுராமும் செல்வி கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.



வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட, எல்லே அணிகளுக்கான வர்ண சீருடை வழங்கல்: Top News
[Tuesday 2017-05-16 19:00]

வ/விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட மற்றும் எல்லே அணிகளுக்கான கல்லூரியின் வர்ண சீருடை அறிமுக விழா முதல்வர் திருவாளர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் 16.05.2017 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் வர்ண சீருடைகளை பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக கல்லூரி பழைய மாணவன் பொறியியலாளர் திரு.எ.நிலின்ஸ் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



டென்மார்கில் நடைபெற்ற் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு: Top News
[Sunday 2017-05-14 20:00]

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்துடன் மாலதி தமிழ்க் கலைக்கூடம் இணைந்து நடாத்திய இசை, நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 13.05.2017 சனிக்கிழமை அன்று டென்மார்க்கின் கேர்ணிங் நகரில் இடம்பெற்றது. தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரேற்றமும் நடராஜருக்கான விளக்கேற்றமும் இடம்பெற்றதனை தொடர்ந்து தாயக மீட்புப் போரிலே தங்களை வித்தாக்கிச் சென்ற மாவீரர்களுக்கான அகவணக்கம் இடம்பெற்றது. வரவேற்பு உரையினை மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை நிர்வாகி திரு. அருளானந்தராசா அவர்கள் வழங்கினார்.



விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தை பேராதரவுடன் வரவேற்ற பிராங்போ ர்ட் தமிழ் மக்கள்! Top News
[Sunday 2017-05-14 09:00]

நான்காவது நாளாக யேர்மனியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் நேற்றுக் காலை Landau நகரை ஊடறுத்து மாலை 4 மணிக்கு Frankfurt நகர மத்தியை அடைந்தது. அங்கு வாழும் தமிழ் இளையோர்களின் ஆதரவுடன் , தமிழ்த் தேசிய செயற்பாடாளர்களின் ஒருங்கிணைப்பில் பல்லின மக்கள் நடமாடும் பகுதியில் கண்காட்சி அமைத்து தமிழின அழிப்பை எடுத்துரைத்தும் , நீதி கோரியும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும், கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.



உயிர்காக்கும் உன்னத பணியில் கனடா செந்தில்குமரன்: நிவாரணம் நிதியம் மூலம் 22வது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு. Top News Top News
[Friday 2017-05-12 19:00]

கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியம் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் போரினாலும், நோயினாலும் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு முதல் நிதியுதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கிவருகின்றது. இந்நிதியத்தினூடாக இருதயநோய் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடிய 22 நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை உட்பட மேலும் பலருக்கு ஏனைய மருத்துவ உதவிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு அவர் தம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.



தாயின் மடியில் இன்னிசை நிகழ்வில் கலந்துகொள்ளும் கலைஞர்கள் இன்று டொரோண்டோவை வந்தடைந்தனர். Top News
[Thursday 2017-05-11 07:00]

எதிர்வரும் 14ம் திகதி ஞாயிறன்று அன்னையர்தின நாளில் Markham Event Centerல் நடைபெறவுள்ள தாயின் மடியில் கலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ள கலைஞர்களான பிரபல பாடகர் VM-மகாலிங்கம் மற்றும் சுப்பர் சிங்கர் புகழ் பாடகி அனுஷியா ஆகியோரை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் டொரோண்டோ விமானநிலையத்தில் வரவேற்றனர்.



வல்வெட்டித்துறையில் களை கட்டியுள்ள இந்திர விழா! Top News
[Wednesday 2017-05-10 18:00]

வர­லாற்­றுச் சிறப்பு மிக்க வல்­வெட்­டித்­துறை சிறீ முத்­து­மாரி அம்­மன் தீர்த்த உற்­ச­வத்தை முன்­னிட்டு வல்வை மக்­க­ளால் 50 ஆவது ஆண்­டாக இந்­திர விழா நடத்­தப்­ப­டுகிறது. இன்று காலை இடம்பெற்ற தீர்த்தோற்சவத்தை அடுத்து, மாலையில் இந்திரவிழா ஆரம்பமாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வல்வை நகரில் மிகப் பிரமாண்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரே விழாக் கோலம் பூண்டுள்ளது. வீதிகள் தோறும் வாழைகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்துக் கடவுள்களின் பெரியளவிலான கட்அவுட்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.



இந்திய ஹெலிகள் ஹட்டனில் தரையிறக்கம்! - மோடியின் வருகைக்கு முன்னாயத்தம் Top News
[Tuesday 2017-05-09 18:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஹட்டனுக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் இரண்டு, ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று பரீட்சார்த்தகரமாக தறையிறக்கப்பட்டன. இதன் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.



மொன்றியல், ரொறொன்ரோ ஐலன்ட் பகுதிகளில் வெள்ளம்! Top News
[Thursday 2017-05-04 19:00]

மொன்றியல் தெற்கு பகுதியில் கடும் வெள்ளத்தினால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றிரவு தொடக்கம் இன்று காலை வரை இந்நிலை தொடர்ந்தது. வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் பல நிலக்கீழ் குடியிருப்புக்களும் வெள்ள மயமாக காணப்படுகின்றன. புதன்கிழமை காலை வரையில் கிட்டத்தட்ட 100 கட்டிடங்கள் வெள்ள அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக மொன்றியல் நகர சபை அறிவித்துள்ளது. கியுபெக்கிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



யேர்மனியில் தமிழ் , 27 ஆண்டுகள்..! Top News
[Wednesday 2017-05-03 20:00]

யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின் உயர்வு மீண்டும் உறுதியாகியது... கடந்த 27 ஆண்டுகள் யேர்மனி முழுவதிலும் பரந்து விரிந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியையும் பண்பாடுகளையும் கற்றுக்கொடுத்த பெருமையோடு 27 வது அகவை நிறைவு விழாவைத் தமிழ்க் கல்விக் கழகம் கடந்த இருவாரங்களாக நடாத்தி வருகின்றது.



தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் :- தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி Top News
[Wednesday 2017-05-03 20:00]

தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் "கலைமாருதம்" எனும் நிகழ்வை நடாத்தி வருகின்றனர். இவ்வருடம் 10 வது ஆண்டாக கலைமாருதம் மாபெரும் ஈழத்து நட்சத்திர விழாவாக அரங்கம் நிறைந்த மக்களுடன் மெய்சிலிர்க்க வைத்த அரங்க வடிவத்துடன் எண்ணிக்கையில் அடங்கா நிறுவனங்களின், மக்களின் முழு ஆதரவுடன் நிறைவேறியது. மாபெரும் இவ் நிகழ்வை சிறப்பித்த அனைத்து ஈழத்து கலைஞர்களுக்கும் இவ் நிகழ்வுக்கு தமது முழு ஆதரவை தந்துதவிய அனைவருக்கும் தமிழ் பெண்கள் அமைப்பு -. யேர்மனி தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா