Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கச்சதீவில் புதிய ஆலயம்! - திறந்து வைத்தார் யாழ்.ஆயர் Top News
[Friday 2016-12-23 20:00]

கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இன்று இடம்பெற்றது. யாழ்.மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஐன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜய குணரட்ண ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

காலையில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப் பிரகாசம் தேவாலயத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

கடந்த மே மாதம் புதிய தேவாலயத்துக்கான அடிக்கல் உத்தியோகபூர்வமாக நாட்டப்பட்டதுடன் 7.5 மில்லியன் ரூபா செலவில் தேவாலய நிர்மாணம் இடம்பெற்றுள்ளது. இன்றைய திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான தமிழக பக்தர்களும், பெருந்திரளான யாழ்ப்பாணம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். புதிய தேவாலயத்தின் திறப்பு விழாவிற்கான சகல ஒழுங்குகளையும் கடற்படையினர் மேற்கொண்டிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா