Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பாலியல் குற்றங்களை மையமாக கொண்டு வெளிவரும் `சிவப்பு எனக்கு பிடிக்கும்''
[Thursday 2017-01-19 09:00]

பாலியல் குற்றத்தை தடுக்க யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படம் வரும் 20-ம் தேதி ரிலீசாகிறது. இதுகுறித்த ருசீகர தகவலை கீழே பார்க்கலாம். 'மதுரை சம்பவம்' படத்திற்கு பிறகு இயக்குநர் யுரேகா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சிவப்பு எனக்கு பிடிக்கும்'. பாலியல் குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், 'போராளி' பட புகழ் சாண்ட்ரா எமி நடித்துள்ளார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்போரேஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அமிஷ் யுவானி இசையமைத்துள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாது, வடமாநிலங்களிலிருந்தும் வேலைதேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் தங்களது உணர்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். இதனை தடுக்க பாலியல் கல்வியை ஊக்குவித்து ஆபாசங்களின்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் ஐடி நிறுவன பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் நடந்து வருகிறது. இதுபோன்ற குற்றசெயல்களை தடுக்க, சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை தணிக்கைகுழு பாராட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற குற்ற செயல்களை தடுக்க சென்னையில் சிவப்பு விளக்குப் பகுதியை உருவாக்குவது போன்ற காட்சிகளும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 20-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் இயக்குநர் யுரேகாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளாராம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா