Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் இருபதாவது ஆண்டு விழாவும், வேரும்விழுதும் விழாமலர் வெளியீடும்... Top News
[Saturday 2017-02-04 20:00]

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் இருபதாவது ஆண்டு விழாவும் மற்றும் அதனையொட்டி வேரும்விழுதும் விழாமலர் வெளியீட்டு நிகழ்வும் கடந்த 28.01.2017 சனிக்கிழமை நண்பகல் 01.30மணிளவில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாகவும், ஆரோக்கியமான முறையிலும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்று இரவு 11.30மணியளவில் இனிதே நிறைவுபெற்றது. மேற்படி நிகழ்வானது அன்று மதியம் 1.30 மணிக்கு மண்டப வாயிலில் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் நிகழ்விற்கு உதவி புரிந்தோரினால் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து 01.40மணியளவில் விழாவின் நாயகர்களாக கலந்து கொண்டிருந்த மதகுருமார்கள், அரசியல் பிரமுகரக்ள் மற்றும் அனைத்து ஊர் முக்கியஸ்தர்களினால் விழா மேடையில் மங்கல விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து திருமதி முரளிதரன் அவர்களினால் அமைதி வணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலாவது நிகழ்வாக புங்குடுதீவு கீதம் இசைக்கப்பட்டது. இந்நிகழ்வு திருமதி ரோகினி ஈசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

ஆசியுரையினை திரு.முரளிதரன் அவர்கள் வழங்கினார். வரவேற்பு நடனம் செல்விகள் அபி சுதா, அனு சுதா ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டது. முதலாவது பக்திப் பாடல் கரோக்கி இசைக்குழுவின் பாடகர் திரு. எஸ் காந்தன் அவர்களினால் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து திருமதி. செல்வி சுதா அவர்கள் வரவேற்பு உரையினை நிகழ்த்தினார். இதனையடுத்து கரோக்கிப் பாடல்களை "சுவிஸ் ராகம்" கரோக்கி இசைக்குழுவினர் இசைத்தனர். தொடர்ந்து "தமிழர் சிறப்பு" தொடர்பாக செல்வன் செவ்வேள் முரளிதரன் அவர்களும், "எமது புங்குடுதீவு கிராமம்" என்னும் தலைப்பில் திருமதி சிந்தியா தனேஸ் அவர்களும் சிறப்புரையாற்றியிருந்தனர்.

சுவிஸில் "சுவிஸ் அரசியல் வாழ்வில் தம்மைத் தடம்பதித்த", தமிழர்களை, பிரதம விருந்தினர்களைக் கொண்டு கௌரவப்படுத்தியதுடன், நிகழ்வுகள் தந்தோர், அனுசரணை வழங்கியோர், உதவிகள் புரிந்தோர் என அனைவரும் விருந்தினர்களைக் கொண்டு கௌரவிக்கப்பட்டதுடன் மேலும், நிகழ்வின்போது பல நடனங்கள், நாட்டிய நிகழ்வுகள், பின்னணி இசைக்கு பாடுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. தொடர்ந்து இன்னிசை கச்சேரிகள் "இன்னிசை வேந்தர் சங்கீத பூசணம்" திரு. பொன் சுந்தரலிங்கம் மற்றும் இசைக்குயில்கள் ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டது.

அதேபோன்று பல மாணவிகளின் இன்னிசைக் கச்சேரியும், வயலின் இசைக் கச்சேரியும்ம் நிகழ்த்தப்பட்டன. ஒன்றிய செயற்பாடுகள் குறித்து, ஒன்றியத்தின் கல்வி& விளையாட்டுப் பொறுப்பாளர் திரு .இலட்சமணன் சின்னத்துரை அவர்களினால் தெரிவிக்கப்பட்ட்து.புங்குடுதீவு வீராமலை தங்கக்குட்டி எஸ் சிவத்தின் "பாட்டிங் பாட்டிங்" நகைச்சுவை நிகழ்ச்சியும், திரு. சிறீதரன் அவர்களின் தலைமையிலான சிறப்பு பட்டிமன்றமும் தொடர்ந்து இடம்பெற்றன.

அதேபோன்று திரு. லக்ஸ்மன் சின்னத்துரை, திருமதி லலிதா லக்ஸ்மன், திருமதி தகீதா பிரசாந்த் ஆகியோரின் முன்னிலையில் சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய வரலாற்றில் முதன் முறையாக நடாத்தப்பட்ட "அறிவுத்திறன் போட்டி"யில் பங்குபற்றிய மாணவ, மாணவியர்க்கான பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு புனரமைப்புக்கான அதிஸ்டலாப சீட்டுக் குலுக்கல் இடம்பெற்றது.

அத்துடன் பிரதம விருந்தினர் திரு. இலக்ஸ்மன் இளங்கோவன் (வட மாகாண சபை ஆளுநரின் செயலாளர்), சிறப்பு விருந்தினர் திரு. பொன் சுந்தரலிங்கம் (சங்கீத பூசணம் மற்றும் இன்னிசை வேந்தர்), திரு. எஸ்.கே. சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர் மற்றும் சமூக சேவகர்), கௌரவ விருந்தினர் திரு. சதாசிவம் சண்முகம் (முன்னாள் அதிபர், சமூக சேவகர்) ஆகியோரின் உரைகளும், ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையுரையும் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து திருமதி தனம் தமிழ்வாணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

மேற்படி விழாவானது அரங்கு நிறைந்த சனத்திரளின் மத்தியில் மிகச் சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நடாத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவரும் மேற்படி விழாவினையும், விழாவினை நடாத்தியவர்களையும் பாராட்டிச் சென்றிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா