Untitled Document
May 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கோலாகலமாக நடந்தேறியது 89வது ஆஸ்கர் விருது விழா..
[Tuesday 2017-02-28 12:00]

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில், ‛லா லா லேண்ட் படம் 6 ஆஸ்கர் விருதுகளை குவித்தது. ஹாலிவுட்டின் அதிரடி மன்னன் ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நடிகர் தேவ் பட்டேல் விருது பெறும் வாய்ப்பை தவறவிட்டார். சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். 89வது ஆஸ்கர் விருதுகள், அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‛டால்பி திரையரங்கில் நடந்தது. 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.

ஏராளமான திரைப்பிரபலங்கள் டால்பி திரையரங்கில் குவிந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார். 6 விருதுகளை குவித்த லா லா லேண்ட் : 89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ‛லா லா லேண்ட் திரைப்படம் 14 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில், சிறந்த நடிகை, இயக்கம், தயாரிப்பு வடிவமைப்பு, இசை, பாடல் மற்றும் ஒளிப்பதிவு என 6 பிரிவுகளில் விருது வென்றது.

தேவ் பட்டேல் ஏமாற்றம் : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய நடிகர் தேவ் பட்டேலுக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை. ‛லைன் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதுப்பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், ‛மூன்லைட் படத்தில் நடித்த மஹேர்சலா அலி, சிறந்த துணை நடிகர் விருதை வென்றார்.

ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் : ஹாலிவுட்டின் அதிரடி மன்னனான ஜாக்கி சான் திரைத்துறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். அவரது கலைச்சேவையை பாராட்டி, ஜாக்கி சானுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

விருதுகள் விபரம்...

சிறந்த துணை நடிகர் : மஹேர்சலா அலி (மூன் லைட்)

சிறந்த ஒப்பனை : அலிசாண்ட்ரோ. ஜியார்ஜியா, கிறிஸ்டோபர் வில்சன் (சூசைட் ஸ்குவாட்)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - கொலின் அட்வுட் (பென்டாஸ்டிக் பீஸ்ட் அண்ட் வேர் டூ பைன்ட் தம்)

சிறந்த ஆவணப்படம் : ஓ.ஜே. மேட் இன் அமெரிக்கா

சிறந்த சவுண்ட் எடிட்டிங் : அரைவல்

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் : சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - கெவின் ஓ

கனெல், ஆண்டி ரைட், ராபர்ட் மெக்கென்சி, பீட்டர் க்ரேஸ்(படம்- ஹாக்ஸா ரிட்ஜ்)

சிறந்த துணை நடிகை : வயோலா டேவிஸ் (படம் - பென்சஸ்)

கவுரவ ஆஸ்கார் விருது : ஜாக்சிசான் (1960 ம் ஆண்டு முதல் கலைத்துறையில் பணியாற்றி வருவதற்காக

சிறந்த வெளிநாட்டு மொழி படம் : தி சேல்ஸ்மேன் (ஈரான் நாட்டு படம்)

சிறந்த அனிமேஷன் குறும்படம் : பைபர்

சிறந்த அனிமேஷன் படம் : ஜூட்டோபியா

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : லா லா லேண்ட்

சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் : தி ஜங்கிள்புக்

சிறந்த பட எடிட்டிங் : ஹாக்ஸா ரிட்ஜ்

சிறந்த ஆவண குறும்படம் : தி ஒயிட் ஹெல்மெட்ஸ்

சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் : சிங்v சிறந்த ஒளிப்பதிவு : லினஸ் சான்ட்கிரின் (லா லா லேண்ட்)

சிறந்த இசை : ஜஸ்டின் ஹர்விட்ஸ், (லா லா லேண்ட்)

சிறந்த பாடல் : ‛சிட்டி ஆப் ஸ்டார்... என்ற பாடல் (லா லா லேண்ட்)

சிறந்த திரைக்கதை : ‛மான்செஸ்டர் பை தி சீ - கென்னத் லோனர்கேன்

சிறந்த திரைக்கதை தழுவல் : ‛மூன் லைட் - பேரி ஜேக்கின்ஸ் மற்றும் டேரல் அல்வின் மெகர்னே

சிறந்த இயக்குநர் : டேமியன் சால்ஸே (லா லா லேண்ட்)

சிறந்த நடிகர் : கேஸி ஆப்லெக் (மான்செஸ்டர் பை தி சி)

சிறந்த நடிகை : எமா ஸ்டோன் (லா லா லேண்ட்)

சிறந்த படம் : மூன் லைட்

சிறந்த திரைப்படத்திற்கான விருது முதலில் லா லா லேண்ட் படத்திற்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் அது தவறாக சொல்லப்பட்டுவிட்டது என்றும், சிறந்த படம் ‛மூன் லைட் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. இந்த குளறுபடியால் ஆஸ்கர் விழாவில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com



கோட் படத்தில் நடிக்கும் CSK வீரர்கள்!
[Sunday 2024-05-05 07:00]

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, அஜ்மல், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா என எக்கசக்க பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்த்தை நடிக்க வைக்க உள்ளனர்.



விஜய், அஜித்தை தாண்டி அடுத்த தலைமுறைகளை நம்பி இருக்கும் 6 ஹீரோக்கள்!
[Saturday 2024-05-04 17:00]

சினிமாவில் காலம் காலமாக இரண்டு நடிகர்களுக்கு இடையே போட்டி நிலவி வருவது வழக்கம்தான். அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் இருந்து இப்பொழுது இருக்கும் விஜய் அஜித் வரை போட்டி போட்டு கொள்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு அடுத்து இளம் ஹீரோக்கள் எக்கச்சக்கமாக வந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களில் யார் அடுத்த தலைமுறைகளில் இடம் பிடிக்க போகிறார் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த லிஸ்டில் இடம் பிடிப்பதற்கு கிட்டத்தட்ட ஆறு ஹீரோக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.



விஜய் சேதுபதி தொடங்கிய புதிய ஓடிடி!
[Saturday 2024-05-04 17:00]

இப்போது தியேட்டரை காட்டிலும் ஓடிடி தான் ரசிகர்களின் பிரியமான தளமாக இருந்து வருகிறது. ஏனென்றால் தியேட்டருக்கு செல்வதான நேரம் மற்றும் டிக்கெட் செலவு ஆகியவற்றை ஒப்பிடும்போது ஓடிடி மிகவும் குறைவாக உள்ளது.



சிவகார்த்திகேயனை அழிக்க துடித்த 3 நடிகர்கள்!
[Saturday 2024-05-04 07:00]

தமிழ் சினிமாவில் அசுரவேகத்தில் வளர்ச்சி அடைந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் திரைப்பட பின்னணி குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. முழுக்க முழுக்க தனது திறமையாலும் முயற்சியாலும் முன்னேறி வந்தவர். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை மக்களுக்கு வெளிக்காட்டி பின்னர் தன் திறமையின் மூலமாக சினிமா துறையில் நுழைந்தவர் தான் சிவகார்த்திகேயன்.



அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை சோபிதா துளிபாலா! Top News
[Saturday 2024-05-04 07:00]

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தவர் சோபிதா துளிபாலா. அவர் ஹிந்தி, ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். அவர் பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு பிகினியில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இதோ...



கோலிவுட்டை மீட்டெடுத்த சுந்தர் சி!
[Friday 2024-05-03 18:00]

2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளியாகிறது. ரஜினியின் லால் சலாம், விஷாலின் ரத்னம் என பெரிய நடிகர்களின் படங்களும் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் பெறவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆன நிலையில் ஒரு தரமான ஹிட் படம் கூட இந்த ஆண்டில் தமிழ் சினிமா கொடுக்கவில்லை. மாறாக மலையாள சினிமாவில் வெளியாகும் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருந்தது.



கமலின் வில்லத்தனத்தால் 1000 கோடி பட்ஜெட்டுக்கு அஸ்திவாரம் போட்ட இயக்குனர்!
[Friday 2024-05-03 18:00]

நடிப்பில் எவராலும் மிஞ்ச முடியாத நம்மவர் நாயகன் தான் உலக நாயகன் கமலஹாசன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை வெறித்தனமாக நடித்து முடிக்கக்கூடிய திறமை இருக்கிறது. சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். இவருடைய நடிப்பை வியந்து பார்த்தவர்கள் பலரும் இருக்கிறார்கள்.



கில்லி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
[Friday 2024-05-03 18:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்தபின் தனது கடைசி திரைப்படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். ஆனால், இதுவரை தளபதி 69 படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என அறிவிக்கவில்லை. ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்கவுள்ளார் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.



தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?
[Friday 2024-05-03 06:00]

நடிகர் அஜித்தின் 53ம் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று தீனா படம் ரீரிலீஸ் ஆனது. வெளியாகி 23 வருடம் ஆகும் இந்த படத்தை மீண்டும் தியேட்டரில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் அஜித் கெரியர் மட்டுமின்றி முருகதாஸ் கெரியரிலும் முக்கிய படமாக அமைந்தது. லைலா ஹீரோயினாக நடித்து இருந்தார்.



தாராள கவர்ச்சியில் சாக்ஷி அகர்வால்! Top News
[Friday 2024-05-03 06:00]

பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் ஆனவர் சாக்ஷி அகர்வால். அவரது லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்கள் இதோ...



திருமணமான ஒரு வருடத்திற்கு உள்ளாகவே உயிரிழந்த ரஜினி பட நடிகை!
[Thursday 2024-05-02 18:00]

சில பிரபலங்கள் புகழின் உச்சியில் இருக்கும் போது திடீர் அவர்களுடைய மரணம் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவ்வாறு நடிகை சில்க் ஸ்மிதா, பாடகி சுவர்ணலதா போன்றோரின் இறப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அவ்வாறு தான் ரஜினி பட நடிகை ஒருவர் முன்னணி இடத்தில் இருந்த போது ஒரு விபத்தின் காரணமாக உயிரிழந்து விட்டார். இதில் இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவருக்கு திருமணமாகி ஒரு வருடம் தான் ஆகி இருக்கிறது.



தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் பிரவீன் மரணம்!
[Thursday 2024-05-02 18:00]

பிரபலங்களின் வாழ்க்கையில் ஏதாவது சோகமான விஷயம் நடந்துவிட்டால் அது அவர்களது ரசிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அப்படி தான் இப்போது ஒரு பிரபலத்தின் உயிரிழப்பு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!
[Thursday 2024-05-02 18:00]

பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன்(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். பிரபல பின்னணி பாடகியான உமா ரமணன் கடந்த 1980ம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடல் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகமானார்.



எல்லை மீறும் அஜித் வெறியர்கள்: தியேட்டருக்குள் நடந்த கலவரம்!
[Thursday 2024-05-02 06:00]

எப்போதுமே சோசியல் மீடியாவில் அஜித், விஜய் ரசிகர்களுக்கு இடையே வாய்க்கா தகராறு இருந்து கொண்டே இருக்கும். அது அவ்வப்போது எல்லை மீறிய கதையும் உண்டு. அப்படித்தான் தற்போது சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. இன்று அஜித் தன்னுடைய 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதை தொடர்ந்து தீனா படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.



நீச்சல் உடையில் கேத்ரின் தெரசா உச்சகட்ட கவர்ச்சி! Top News
[Thursday 2024-05-02 06:00]

மெட்ராஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகம் ஆனவர் கேத்ரின் தெரசா. அவர் தற்போது பிகினியில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இதோ...


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா