Untitled Document
May 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானின் இசையில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்
[Tuesday 2017-02-28 19:00]

முன்னணி இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர்களில் ஜி.வி.பிரகாஷும் ரசிகர்களிடம் நடிகராகவும் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படங்களான கடவுள் இருக்கான் குமாரு, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பென்சில் ஆகிய படங்கள் தோல்வி அடைந்தாலும் கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கிறார். அவர் நாயகனாக நடித்துள்ள ப்ரூஸ் லீ படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது அடங்காதே, ஐங்கரன், 4 ஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களுடன் பாலா அடுத்து ஜோதிகாவை வைத்து இயக்கும் நாச்சியார் படத்தில் ஒரு முக்கிய ரோலில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைக்க மீண்டும் இளையராஜாவை அணுகியுள்ளார் பாலா. தாரை தப்பட்டை படத்தில் இளையராஜாவிற்கும், பாலாவிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது. இருப்பினும் பாலாவின் அடுத்த படத்திற்கு இளையராஜாதான் இசை என்கிறார்கள்.

நடிகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் இருக்கும் ஜி.வி.பிரகாஷ், இளையராஜாவின் இசையில் நடிப்பது முக்கியமான ஒன்று. அதோடு, ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, ராஜீவ் மேனன் இயக்க உள்ள படத்தில் ஜி.வி.யின் மாமாவான ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். தமிழ்த் திரையுலகின் முக்கிய இசை ஜாம்பவான்களாக இளையராஜா, ரகுமான் இசையில் அடுத்தடுத்து நடிக்க உள்ள ஜி.வி.பிரகாஷுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டம் வேறு யாருக்கும் அமையாத ஒன்று.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா