Untitled Document
May 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பாலியல் கொடுமைக்கு நானும் ஆளானேன் - காதல் சந்தியா புகார்
[Thursday 2017-03-02 20:00]

பாவனாவைப் போல தானும் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக காதல் படத்தில் நடித்த நடிகை சந்தியா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றி அவர் துணிச்சலாக புகார் கொடுத்ததை தொடர்ந்து இதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதைப்போல பாதிக்கப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை தற்போது வெளிப்படுத்தி வருகிறார்கள்.

நடிகை மேனகா, அவரது மகள் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்களையும் கடத்த முயற்சி நடந்த தகவலை வெளிப்படுத்தி உள்ளனர். நடிகை வரலட்சுமியும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி நடந்ததாக திடுக்கிடும் புகார் கூறி உள்ளார். இந்த நிலையில் நடிகை காதல் சந்தியாவும் இதுபற்றி பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காதல் சந்தியா கூறியதாவது:-

பாவனா எனது நெருங்கிய தோழி. அவர் மிகவும் தைரியசாலி. அவரது தைரியம் தான் அவர் மீதான பாலியல் கொடுமை பற்றி புகார் கொடுக்கவும், அதை வெளிப்படுத்தவும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளது. பாவனாவின் துணிச்சலை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது. அவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவில் மீண்டு விடுவார் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. நானும் பாலியல் கொடுமைக்கு ஆளானவள்தான் என்பதை இங்கு கூறிக் கொள்கிறேன். இதுபற்றி முன்பே மக்கள் முன்பு தெரிவிக்கவோ, போலீசில் புகார் செய்யவோ எனக்கு தைரியம் இல்லாமல் இருந்ததால் இதுபற்றி இதுவரை யாரிடமும் கூறாமல் இருந்து விட்டேன். இவ்வாறு அவர் பேசினார். பாவானவுக்கு தற்போது திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா