Untitled Document
May 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கமலுக்கே சவால் விடும் பெண் இயக்குனர்..
[Thursday 2017-03-02 20:00]

ஊர் உலகத்தில் வேறு கதைகளை இல்லை என்கிற மாதிரி சில சமயங்களில் ஒரே கதையை இரண்டு பேர் தனித்தனியாக படமாக்குவதற்கு போட்டிபோடும் சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது உண்டு.. இங்கே பாலாவும், பராதிராஜாவும் குற்றப்பரம்பரை கதையை படமாக எடுப்பேன் என அறிக்கைப்போர் நிகழ்த்தியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். மலையாளத்தில் கூட கர்ணன் கதையை மம்முட்டியை வைத்து எடுப்பேன் என ஒரு இயக்குனரும், பிருத்விராஜை வைத்து எடுப்பேன் என ஒரு இயக்குனரும் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்..

இப்போது லேட்டஸ்டாக அந்தப்பட்டியலில் இணைந்திருக்கிறார்கள் மலையாள இயக்குனர் கமலும், தமிழ் எழுத்தாளரும் குறும்பட இயக்குனருமான லீனா மணிமேகலையும்.. இதுநாள் வரை இயக்குனர் கமல் மாதவிக்குட்டி (அ) கமலாதாஸ் என்கிற எழுத்தாளரை பற்றிய வாழ்க்கையை ஆமி என்கிற பெயரில் படமாக எடுக்க இருப்பதாகத்தான் மீடியாக்களில் அடிக்கடி செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. அதில் கதாநாயகியாக நடிக்க இருந்த வித்யாபாலன் விலகி இப்போது மஞ்சு வாரியர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளது வரை படம் முன்னேற்றம் கண்டு வருகிறது..

இந்தநிலையில் தான் இயக்குனர் லீனா மணிமேகலை தானும் கமலாதாஸின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதாக கூறியுள்ளாராம்.. இந்தக்கதை பற்றி பேச ஆரம்பத்தில் கமல் தன்னை தேடிவந்தபோது, தான் அதற்கு முன்பாகவே கமலாதாஸ் கதையை ஸ்க்ரிப்ட்டாக மாற்றி வைத்திருந்ததை காண்பித்தாராம் லீனா. ஆனால் கமலோ, நீங்கள் கமலாதாஸ் கேரக்டரில் நடியுங்கள்.. நான் படத்தை இயக்குகிறேன் என கூறினாராம். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அந்தக்கதையை படமாக இயக்க கமல் தயாராகி வரும் நேரத்தில் லீனா மணிமேகலை இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா