Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மக்களுக்காக அரசியல் நடத்துவேன் ; கமல்
[Wednesday 2017-03-08 19:00]

கமல்ஹாசன் திடீரென தனது மன்ற நிர்வாகிகள் மற்றும் வக்கில்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட அனைவரும் கமல் நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும். இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நீங்கள் தான் நிரப்ப வேண்டும் என்று பேசினார்கள். அதற்கு பதிலளித்து கமல் பேசியதாவது:

எனக்கு எந்த சாதியும் மதமும் தேவையில்லை நற்பணி இயக்கம் அரசியல் கலக்காமல் இன்னும் பெரிய சமுதாய நல்வழி இயக்கமாக மாறுவதற்கு இன்று கால்கோல் நடப்பட்டது. அதற்கான ஆயத்தத்தில் முன்னேற்பாடுகளைத் தான் இப்போது உங்கள் மூலமாக ஆரம்பித்துள்ளேன். எனக்குப் பின்னாலும் இந்த நற்பணி தொடரவேண்டும். நாம் செய்வது மக்கள் அரசியல். வாக்கு அரசியல் அல்ல. வாக்கு அரசியல் சாதி, மதம் பார்க்கத் தூண்டும். நான் மனிதனை மனிதனாகப் பார்ப்பவன். எனக்கு எந்த சாதியும் மதமும் தேவையில்லை. நல்லது செய்வதற்கு சாதி மதம் தேவையில்லை. நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல உள்ளம் இருந்தால் போதுமானது. அது உங்களிடத்தில் உள்ளது. அதற்கு உறுதுணையாக நான் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.

கடந்த 35 வருஷமா என்ன பண்றோம்? நற்பணி தான் பண்றோம். அதை இன்னும் பெரியதாக தொடர்வது எப்படி என்ற ஆலோசிக்கவே இந்த கூட்டம். நாம் செய்யும் நற்பணிகளுக்கு எந்த வித இடையுறும் வரக்கூடாது. அப்படி வந்தால், சட்டம் படித்த இந்த ஆலோசகர்களின் உதவி தேவை. இவர்கள் நமக்கு உதவுவார்கள். அதற்கு அரசியல் தான் களம் என்பது இல்லை. முதலமைச்சாராக மாறித் தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை. நான் படித்தது எட்டாம் வகுப்பு வரைத் தான். எனக்கும் சட்டம் தெரியும். ஆனால், சட்டம் படித்த நீங்கள் அதை சொல்லும் போது தான் அதற்கு உரிய மரியாதை கிடைக்கும்.

உடனே அரசியலுக்கு வா என்கிறீர்கள். அது என்னால் இயலாத காரியம். வரவும் முடியாது. அது என்னுடைய வேலையும் அல்ல. கச்சேரியில் பாட்டு சரியில்லை என்று கூறை கூறுவதால் நீ மேடைக்கு வந்து பாடுன்னு சொல்லலாமா? சமையலில் ஏற்படும் குறைகளை சுட்டிக் காட்டத் தான் முடியும். அதற்காக வந்து சமைத்துப் பார் என்று கூறினால் எப்படி? மக்களுக்காக அரசியல் நடத்துவேன் நான் அறிக்கைகள் விடுவது புதியதல்ல 30 வருடங்களுக்கு முன்பு இருந்தே நான் கருத்து கூறிவருகிறேன். அன்றே இலங்கை பிரச்சனைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தவன். ஆனால் இப்போது தான் நான் கூறுவது அவர்கள் காதில் விழ தொடங்கியுள்ளது. நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது. நான் அரசியலில் தான் உள்ளேன். நான் பண்ணும் அரசியல் ஒட்டு வாங்கும் அரசியல் அல்ல. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல். நான், நீங்க யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறமாட்டேன். ஆனால், யாருக்கு வாக்களிக்க கூடாது என்று கூறுவேன். அதை குறிப்பால் உணர்த்துவேன். அதைத் தான் கடந்த முறையும் செய்தேன். அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இன்று மக்கள் கேட்க தொடங்கியிருக்கிறார்கள். நான் சொன்னால் அது மக்களுக்காகத் தான் சொல்கிறேன் என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள். நான் இந்த நிலையை அடைவதற்கு எனக்கு 40 ஆண்டு காலம் தேவைப்பட்டது. டில்லியில் என் கட்சி கொடி பறக்கிறது என்னுடைய கட்சி கொடி டில்லியில் மூவர்ணமாக பறந்து கொண்டு இருக்கிறது. அதற்கு எந்த வித ஒரு பாதிப்பும் ஏற்படாமல் நான் காப்பேன். பச்சை தனியாக, வெள்ளை தனியாக, காவி தனியாக கிழிபடுவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்.

அதற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருப்பேன். இனி மாவட்ட பிரச்சனைகளை கையில் எடுப்பேன் அதற்கு பக்கபலமாக மாவட்ட சட்ட ஆலோசகர்கள் முன் வரவேண்டும். என்னால் முடியாத எதையும் உங்களை நான் செய்யச்சொல்ல மாட்டேன். இனி, இன்னொரு சுதாகர் சிறைச் செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன்.உங்கள் பின்னால் நான் இருப்பேன் தவறு செய்திருந்தால் தைரியமாக மன்னிப்பு கேட்பேன். ஆனால்,செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பதை அனுமதிக்க மாட்டேன். உங்கள் பின்னால் நான் இருப்பேன். நாம் செய்யும் நற்பணி கண்டு இந்த மாநிலமல்ல பக்கத்து மாநிலமே அழைத்து பாராட்டும் காலம் விரைவில் வரும். செய்வது நற்பணி, அதற்கு ஓய்வில்லை.

எந்த அரசியல்வாதி தவறு செய்தாலும் நாகரிகமான முறையில் அவர்களுக்கு கண்டனத்தை பதிவு செய்யுங்கள். மரியாதையாக பேசுங்கள். 35வருடங்களாக எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெற்ற நற்பணி, இன்னும் சிறந்த முறையில், பெரிய அளவில் நடைபெற வேண்டும். அதற்கு நான் துணையிருப்பேன் . இவ்வாறு கமல் பேசினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா