Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெயம் ரவியின் வில்லன் சிங்கப்பூர் நடிகர்..
[Wednesday 2017-03-08 19:00]

மிருதன் படத்திற்கு பிறகு சக்தி சவுந்தர்ராஜனும், ஜெயம்ரவியும் மீண்டும் இணைந்திருக்கும் படம் டிக் டிக் டிக். ஜெயம்ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார், தன்ஷிகா, ரமேஷ் திலக் உள்பட பலர் நடிக்கிறார்கள். இமான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பின்னி மில்லில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான விண்வெளி ஷெட்டில் படமாகி வருகிறது. முதன் முதலாக தமிழில் தயாராகும் விண்வெளி திரைப்படம் இது. நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் பிரபல சிங்கப்பூர் நடிகர் ஆரோன் அஜீஸ் நடிக்கிறார்.

கேஎல் டிரிப்ட், 2 ஆலம், ஓம்பக் ரிண்டு, கீரத் 14, கேஎல் கேங்ஸ்டார் உள்பட 50க்கும் மேற்பட்ட மலேயா மற்றும் சீனப் படங்களில் நடித்துள்ளார். சீன, மலேசிய, சிங்கப்பூர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கபாலி படத்தில் இவர் தான் வில்லனாக நடித்திருக்க வேண்டியது. அப்போது அவர் டி.வி.சீரியல் ஒன்றில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தால் அந்த வாய்ப்பை இழந்தார். தற்போது டிக் டிக் டிக் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா