Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
'காற்று வெளியிடை' டிரைலர் நாளை வெளியீடு..
[Wednesday 2017-03-08 19:00]

தமிழ் சினிமாவை சர்வதேசப் பார்வைக்குக் கொண்டு சென்றவர்களில் இயக்குனர் மணிரத்னமும் முக்கியமானவர். தமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் இந்திய அளவிலும், உலக அளவிலும் தனக்கென ஒரு தனி இடத்தைத் தொடர்ந்து பல ஆண்டு காலமாக தக்க வைத்துக் கொண்டிருப்பவர். தோல்விகளைக் கொடுத்தாலும் அடுத்து எப்படியாவது நிமிர்ந்துவிடுவார். மணிரத்னம் தற்போது இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 7ம் தேதி வெளியிட உள்ளளார்கள். ஏற்கெனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் தனித் தனியாக வெளியிடப்பட்ட மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

நாளை(மார்ச் 9) மாலை 5 மணிக்கு படக்குழுவினருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஃபேஸ்புக் லைவ் மூலம் காற்று வெளியிடை படத்தின் டிரைலரை வெளியிட உள்ளார். இதை ஏஆர் ரஹ்மானே வீடியோ வடிவில் தெரிவித்திருக்கிறார். கார்த்தி, அதிதி ராவ் ஹைதரி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் மணிரத்னத்தின் அடுத்த ஹிட் படமென இப்போதே ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதை படத்தின் பாடல்களும் நிரூபித்துள்ளன. காலத்திற்கேற்ப என்றும் இளமையுடன் இளம் ரசிகர்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு படங்களைத் தருவதில் மணிரத்னத்திற்கு நிகர் அவரேதான் என திரையுலகினரே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். காற்று வெளியிடை டிரைலர் எப்படியிருக்கப்போகிறது என்பதைப் பார்க்க இன்னும் ஒருநாள் காத்திருக்க வேண்டும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா