Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சாவித்ரியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்..
[Thursday 2017-03-09 06:00]

நடிகையர் திலகம் என தமிழ்த் திரையுலக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சாவித்ரி. குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து அந்தக் காலத்தில் மிகச் சிறந்த நடிகை எனப் பெயரெடுத்தவர். அவருடைய இடத்தை இன்று வரை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதே உண்மை. நடிகை சாவித்ரியின் நிஜ வாழ்க்கையைப் படமாக்க தெலுங்கு இயக்குனரான நாக் அஸ்வின் கடந்த சில வருடங்களாக முயற்சியில் ஈடுபட்டிருந்தார். சாவித்ரியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று ஒரு சஸ்பென்ஸ் இருந்து வந்தது. சமந்தா, வித்யா பாலன், நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் என பலருடைய பெயர்கள் பேசப்பட்டு வந்தது.

இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள். மகாநதி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்ரியாக நடிக்க உள்ளார். சமந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.இப்படத்திற்காக கடந்த ஒரு வருட காலமாக பலரைச் சந்தித்து பல தகவல்களைப் பெற்றதாகவும், தமிழ், தெலுங்கு இரு திரையுலகத்திற்கும் இப்படம் பெருமை சேர்க்கக் கூடிய படமாக இருக்கும் என்றும் படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா