Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார் விஷால்..
[Thursday 2017-03-09 06:00]

ஹட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து, சென்னை, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகர் விஷால். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றே சொல்லலாம். தற்போது தமிழகத்தில் எழுந்துள்ள மற்றொரு போராட்டம் நெடுவாசல். புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான வேலைகள் துவங்கியுள்ள நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து அந்தப்பகுதி மக்கள் 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகத்திலும் ஆங்காங்கே சில இடங்களில் இதுதொடர்பான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சில திரைப்பிரபலங்கள் நெடுவாசல் சென்று போராட்டத்திலும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்கு ஆதரவு இருந்தாலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் உள்ளவர்களும் இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். நடிகர் விஷாலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்து வருகிறார். இதன் அடுத்தகட்டமாக தற்போது வழக்கும் தொடர்ந்துள்ளார். சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அவரே நேரில் ஆஜராகி தன் தரப்பு வாதங்களை எடுத்துரைக்க உள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா