Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வரலட்சுமியை நடிகை என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் - சினேகா
[Friday 2017-03-10 20:00]

நடிகை பாவனாவின் பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பிறகு விழித்துக்கொண்டது நடிகைகள் வட்டாரம். அதுபோன்ற நிலை தொடரக்கூடாது என்பதற்காக, பல நடிகர் நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர். இதில், நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி ஒருபடி மேலே சென்று சேவ் சக்தி என்றொரு அமைப்பை தொடங்கி கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார். இதற்கு நடிகர் விஷால், மிஷ்கின், பிரசன்னா, சினேகா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அவரது சேவ் சக்தி இயக்கத்தில் இணைந்து கையெழுத்திட்டுள்ளனர். அப்போது இந்த சேவ் சக்தி திரையுலக பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதனால் இதில் அனைத்து ஆண்களும், பெண்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் வரலட்சுமி. நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சினேகா, வரலட்சுமியை நடிகை என்ற கண்ணோட்டத்தில் யாரும் பார்க்க வேண்டாம். அவர் ஒரு பெண்ணாக, அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இந்த சேவ்சக்தி அமைப்பை தொடங்கியிருக்கிறார். அவருடன் இணைந்து அனைவரும் செயல்படுவோம். குற்றங்களை தடுப்போம். குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா