Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஐ.நா மனித உரிமை உயர்ஆணையருக்கும், உறுப்பு நாடுகளுக்கும் இந்தியப் பொதுவாழ்வுப் பிரமுகர்கள் வேண்டுகோள் Top News
[Saturday 2017-03-11 19:00]

தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை மன்றத்தின் 34ஆம் அமர்வில் சிறிலங்கா அரசுக்கு அதன் உறுதி மொழி களை நிறைவேற்ற மேற் கொண்டு அவகாசம் தரக் கூடாதென்றும், இந்தச் சிக்கலை ஐநா.பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்ப வேண்டுமென்றும், அனைத்துலகக் குற்ற வியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப ஐநா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென்றும் ஒரு வேண்டுகோள் விண்ணப்ப மடலில் தமிழகத் திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும், கல்வியி யலாளர்களும் வழக்கறிஞர்களும் மருத்துவர்களும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர் இயக்கங்களின் தலைவர்களும் ஓரணியில் திரண்டு கையொப்பம் போட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவுத் தலைவர்களான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்த் தேசியப் பேரியக் ககத் தலைவர் பெ.மணியரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கோவை இராமகிருட்டிணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஆலோசகர் தோழர் தியாகு, தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன், சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி, தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு களஞ்சியம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், உள்ளிட்ட பல தலைவர்களும் பேராசிரியர் இராமு மணி வண்ணன், ஓவியர் புகழேந்தி உள்ளிட்ட பல கல்வியியலாளர்களும் இந்த வேண்டுகோளில் தம்மை இணைத்துக் கொண்டு ஐ.நா.மனித உரிமை மன்றத் திற்கு அனுப்பிவைத்த கோரிக்கை மனுவிலே கையொப்பம் போட்டுள்ளார்கள்.

இந்த வேண்டுகோள் விண்ணப்ப மடல் ஜெனிவாவில் ஐநா மனித உரிமை ஆணை யரிடம் கையளிக்கப்படவுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா