Untitled Document
May 11, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா இடைத் தேர்தல் வேட்பாளர் 'ராகவன் பரம்சோதி'யின் அலுவலக திறப்பு விழா Top News
[Monday 2017-03-13 20:00]

கனடாவில் மார்க்கம் - தோர்ண்ஹில் பகுதியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட மத்திய அரசுக்கான இடைத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியில் போட்டியிடும் தமிழரான ராகவன் பரம்சோதி அவர்களது தேர்தல் அலுவலகம் சனிக்கிழமை (மார்ச் 11) கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. தமிழர்கள் செறிந்து வாழும் மார்க்கம் நகரில் மார்க்கம் / டெனிசன் வீதிகளின் சந்திப்பில் (7200 Markham Road, Markham) இருக்கும் இந்த அலுவலகத்தில் மாலை 2:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் சுமார் 200 க்கும் மேலான தமிழ் மக்களும், இதர சமூக மக்களும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.

மிகவும் குறுகிய கால அவகாசத்தில் (ஒரு வாரம்) நியமனத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்து அதில் அபார வெற்றியையும் ஈட்டி இரண்டொரு நாட்களிலேயே அலுவலகத் திறப்பு விழாவையும் நடத்தி முடித்த ராகவன் பரம்சோதியின் தொண்டர் குழுவின் திறமையை மெச்சியே ஆக வேண்டும். இத் தொகுதிக்கான இடைத் தேர்தல் கனடா முழுவதுமான அனைத்து கட்சிகளினதும், அரசியல்வாதிகளினதும், ஊடகங்களினதும் அவதானத்தை ஈர்த்திருந்தது. அதற்குக் காரணம் இத் தொகுதி காலா காலமாக லிபரல் கட்சி அங்கத்தவரையே தெரிவு செய்து வந்ததும் இந்த தடவை லிபரல் கட்சி வேட்பாளர் தேர்வில் நீதியானதும் ஜனநாயகமானதுமான நடைமுறையைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுமே.

இத் தொகுதியில் வாழும் பல்லின மக்களில் சீன சமுகத்துக்கு அடுத்ததாக தமிழரே எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். மிக குறுகிய கால அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட இத் தேர்தலில் பல சமூகங்களிலிருந்தும் வேட்பாளர்கள் லிபரல் கட்சியின் கீழ் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர். அதில் தற்போது மார்க்கம் பகுதியில் கல்விச் சபை உறுப்பினராக இருக்கும் தமிழ்ப் பெண்மணியான யுவனீதா நாதனும் அடங்குவார். ஆனாலும் கட்சியின் தலைமை தமக்கு விரும்பிய, இத் தொகுதியில் வசிக்காத சீன இனத்தவர் ஒருவரை நியாயமற்ற முறையில் களமிறக்கியுள்ளது.

இதனால் கடும் விசனமுற்ற இத் தொகுதி வாழ் தமிழ் மக்கள் தாம் நீண்டகாலமாக ஆதிரித்து வந்த லிபரல் கட்சிக்கு வாக்களிக்காது கன்சர்வேட்டிவ் கட்சியில் வேட்பாளராக இருக்கும் ராகவன் பரம்சோதியையே ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள். இவ் விடயத்தில் தமிழ்ச் சமூகத்திலுள்ள பல அமைப்புகளும், சமூகத் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து கலந்து கொண்ட மக்களும் தொண்டர்களும் மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இன் நிகழ்வில் முன்னாள் கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் போல் கலாண்ட்றா, பல தமிழ்ச் சமூகத் தலைவர்கள் மற்றும் வேட்பாளர் ராகவன் பரம்சோதி ஆகியோர் பேசியிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா