Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நிறம் மாறிய திருச்செந்தூர் கடல் ! பக்தா்கள் அதிர்ச்சி ! ஆய்வுசெய்ய அதிகாரிகள் விரைவு !
[Wednesday 2017-03-29 12:00]

திருச்செந்தூர் கடல் பகுதி நேற்று மாலை முதல் கருஞ் சிவப்பு நிறமாக மாறிவந்தது. இதனால் முருகன் கோயிலுக்கு வந்த பக்தா்கள் கடலில் குளிக்க அச்சமடைந்துள்ளனர். ரசாயன கழிவு கலந்தததே இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. வழக்கமாக கடலின் கரை பகுதி நீலநிறமாகவும், ஆழ்கடல் பகுதி பச்சை நிறமாகவும் இருக்கும் ஆனால் நேற்று மாலை 3 மணி அளவில் திருச்செந்தூர் கடலில் கருஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் படலம் போன்று பரவி காணப்பட்டது.

வள்ளி குகை அருகில் இருந்து கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணெய் படலமாக காட்சி அளித்தது. இதையடுத்து பக்தர்கள் யாரும் கடலில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்குக் காரணம், ஆழ்கடலில் காணப்படும் ஒருவகை பாசி, தற்போது கடலுக்கு மேல் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கடல் பகுதியில் வெளிநாட்டு கப்பல்கள் எதுவும் கழிவுகளை கொட்டி சென்றதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதனால் கடலில் ரசாயனம் கலந்ததது போல் காணப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யதற்காக மீன்வளத்துறை ஆய்வாளர்கள் திருச்செந்தூர் விரைந்துள்ளனர். சுனாமி வந்தபோது கூட திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதைத் தவிர பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா