Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சித்திரைப் புது வருடப் பிறப்பு: - மருந்து நீர் பற்றிய ஓர் சிறப்பு பார்வை.
[Friday 2017-04-14 17:00]

தமிழர் திருநாள் சித்திர புது வருடத்தையொட்டி தமிழர் வாழும் பகுதிகளின் பல இடங்களிலும் மருத்து நீர் தற்பொழுது வழங்கப்பட்டுவருகின்றது. சித்திரைப் புது வருடப் பிறப்பு தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தமிழ்ப் பஞ்சாங்கங்கள் சித்திரை மாதத்திலிருந்துதான் ஆரம்பமாகின்றன. சித்திரை வருடப் பிறப்பன்று மருத்துநீர் தேய்த்து நீராடுதல் இந்து மக்களால் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியம் ஆகும். புத்தாண்டில் சகல துன்பங்களும் விலகி மகிழ்ச்சியான வாழ்வு மலரப் பிரார்த்தனை செய்து, குடும்ப மூத்தோரால் அல்லது குருவால் குடும்ப உறவுகளுக்கு தலையில் வைக்கப்படும் புனித நீரை மருத்துநீர்எ ன்பார்கள்.

மருந்து நீர் வைத்தல் என்பது முக்கிய விஷயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது. இம்மருந்து நீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும். மருந்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும். இவற்றுள் பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம்.

விஷூ புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும். தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும். இலங்கையில் இரு இனங்களுக்கும் பொதுவான தமிழ், சிங்கள புத்ததாண்டாக கொண்டாடப்படுகின்றது. சைவ சமயத்தவர்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கும் போது முதலில் பிள்ளையாரை வணங்கி (பூசைசெய்து) ஆரம்பிப்பது வழக்கம்.

அதன் காரணமாக இப்புத்தாண்டு தினத்திலும் முதலில் பிள்ளையார் ஆலயங்களில் சிறப்புப் பூசைகளும் மஹோற்சவ விழாக்களும் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில், மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம், தாவடி விநாயகர் ஆலயம், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் புத்தாண்டு தினத்தில் தேர்த்திரு விழா நடைபெறுவது வழக்கம். இத்தினத்தில் பிள்ளையார் ஆலயங்களில் மட்டுமன்றி எல்லா ஆலயங்களில் விசேட அபிஷேக ஆராதனைகளும், பூசைகளும் நடைபெறும். இத்தினத்தில் அனேகமான ஆலயங்களில் பிரதம குரு கைவிசேஷம் வழங்கும் வழக்கமும் வழக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் வருடத்திற்கு ஆறுமுறை அபிஷேகம் காணும் தில்லை நடராஜருக்கு வசந்த காலமான சித்திரை மாத திருவோண நட்சத்திர தினத்தன்று அந்த ஆண்டிற்குரிய அபிஷேகம் நடத்தப்படுகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா