Untitled Document
May 8, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பலா கொட்டையில் இருந்தும் சொக்லெட் தயாரிக்கலாம்: -ஆய்வில் தகவல்
[Wednesday 2017-04-26 09:00]

வழக்கமாக கோகோவில் இருந்து தான் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ஆனால் பலா கொட்டையில் இருந்தும் சாக்லேட் தயாரிக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாக்லேட் தயாரிக்க, சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். சாக்லேட் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுகளில் கூடுதலாக கோகோ தேவைப்படும்.

அந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத பட்சத்தில் கோகோவை விடுத்து சாக்லேட் நறுமணம் மற்றும் சுவையுடன் மாற்று வழியில் தயாரிக்க முடியுமா..என பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், பலா கொட்டையில் இருந்து சாக்லேட் தயாரிக்க முடியும் என ருசிகரமான தகவலை அவர்கள் கண்டறிந்துள்ளனர். பலா கொட்டையில் சாக்லேட்டின் நறுமணம் மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பொருள் மறைந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதில் இருந்து சாக்லேட் தயாரிக்க பயன்படும் பொருள் உருவாக்க முடியும். இதன் மூலம் கோகோ பற்றாக்குறையால் சாக்லேட் தயாரிப்பில் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா