Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உயிர்காக்கும் உன்னத பணியில் கனடா செந்தில்குமரன்: நிவாரணம் நிதியம் மூலம் 22வது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு. Top News Top News
[Friday 2017-05-12 19:00]

கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியம் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் போரினாலும், நோயினாலும் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு முதல் நிதியுதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கிவருகின்றது. இந்நிதியத்தினூடாக இருதயநோய் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடிய 22 நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை உட்பட மேலும் பலருக்கு ஏனைய மருத்துவ உதவிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு அவர் தம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.

கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியத்தின் இணைப்பாளர் திருவாளர் செந்தில்குமரன் கனடாவில் மின்னல் மியூசிக் நிகழ்ச்சியின் இணைப்பாளரும் ஏற்பாட்டாளருமாவர். 'நிவாரணம்' என்னும் இசை நிகழ்ச்சியினுடாகவும் பரோபகாரர்களின் நன்கொடைகள் மூலமாகவும் இந்நிதியத்தை வளர்த்து வருகிறார்.

அத்துடன், முற்றுமுழுதாக வடக்கு, கிழக்கு வாழ் துன்புறும் மக்களின் துயர்துடைக்க பல இடர்களுக்கு முகம் கொடுத்து சுமை சுமந்து இரவு பகல் நோக்காது விழித்திருந்து உழைக்கும் செந்தில்குமரன் தனது நிதியத்தினூடாக நம்மக்களின் உயிர்காத்து வருவது காலத்தில் செய்யும் கனதியான பணியாகும்.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டம், புலோப்பளை பகுதியில் வசித்துவரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் கந்தசாமி (வயது 45) என்பவருக்கு உடனடியாக இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்களால் கூறப்பட்டு அதன்படி வெற்றிகரமாக அறுவை சிகிட்சையும் செய்யபட்டுள்ளது. பத்து இலட்ச்சம் செலவுள்ள மேற்படி சத்திர சிகிச்சையை செந்தில் குமரன் வேண்டுதலுக்கு இணங்க மருத்துவர்கள் திரு காந்திஜீ மற்றும் லசந்த பத்மஸ்ரீ ஆகியோர் ஊதியம் ஏதும் பெறாமல் இலவசமாக தமது சமூக கடமையை செய்ததால் இச் சிகிச்சைக்கு ஏழு இலட்சமே முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செந்தில்குமரனின் நிவாரண நிதியமூடாக செய்யப்பட்ட 22வது உயிர்காப்பு சத்திர சிகிச்சைக்கு உதவி புரிந்த அனைத்து கொடையாளிகளுக்கும் பயனாளிகள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா