Untitled Document
May 8, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரான்சில் தமிழர் விளையாட்டுக்கழகம் 95 நடாத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்! Top News
[Monday 2017-06-05 22:00]

தமிழர் விளையாட்டுக்கழகம் 95 வருடாந்தம் நடாத்தும் இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் கடந்த (04.06.2017) ஞாயிற்றுக்கிழமை Garges Les Gonesse பகுதியில் காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சார்சல் தமிழ்ச்சங்க தலைவர் திரு.டக்ளஸ் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை உதவிப்பொறுப்பாளர் திரு.செல்வா அவர்கள் ஏற்றிவைத்தார். மாவீரர் திருஉருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 27.07.1987 அன்று இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை தனேந்திரனின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செய்தார்.

தொடர்ந்து 95 விளையாட்டுக்கழகக் கொடியினை தமிழர் விளையாட்டுக்கழகம் 95 இன் பொறுப்பாளர் திரு.யூட்ஸ் றமேஷ் அவர்கள் ஏற்றிவைக்க இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டன. பாரதி இல்லம், காந்தி இல்லம், அன்பு இல்லம், குருகுலம் இல்லம் ஆகிய 4 இல்லங்களினதும் கொடிகளை அவற்றின் பிரதிநிதிகள் ஏற்றிவைத்ததனைத் தொடர்ந்து ஒலிம்பிக் சுடர்ஏற்றப்பட்டது. ஒலிப்பிக் தீபத்தை திரு.பொன்ராஜ் குகராஜ், திருமதி வின்ஸ்ரன் தயாநிதி ஆகிய இருவரும் ஏற்றிவைத்தனர். விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து இல்லங்களின் அணிநடை இடம்பெற்றது. அணிவகுப்பு மரியாதையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.பாலசுந்தரம், சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் தமிழர் விளையாட்டுக்கழகம் 95இன் பொறுப்பாளர் திரு.யூட்ஸ் றமேஷ் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து பிரதம விருந்தினர்கள் போட்டிகளை ஆரம்பித்துவைத்தனர். இல்லங்களுக்கிடையே போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன. ஒவ்வொரு போட்டிகளின் நிறைவிலும் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் நினைவுப் பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இல்லங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றதைக்காணமுடிந்தது. சிறுவர்களுக்கான ஓட்டப்போட்டிகளும், பெரியவர்களுக்கான வேக நடைபோட்டிகளும் சிறப்பாக அமைந்திருந்தன. ஏனைய போட்டிகளிலும் வீர வீராங்களைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை பாராட்டத்தக்கது.

சிறப்புவிருந்தினர்களாக சார்சல் நகர பிதா திரு.பிரான்சுவா (Monsieur Fran

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா