Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இந்த பழத்தை சாப்பிட்டு விதையை தூக்கிப்போடாதீங்க!
[Saturday 2017-06-10 18:00]

நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள விதையை தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த பழத்தை சாப்பிட்டு கொட்டையை தூக்கிப்போடாதீங்க பழங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கிய உணவு வகைகளுள் ஒன்று. அதிலும் அந்தந்த சீசன்களில் கிடைக்கும் பழங்களை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை அந்தந்த பருவகாலத்துக்கு ஏற்றபடி உடலை தகவமைத்து வைத்திருக்கும்.

அப்படி ஏராளமான நன்மைகளைக் கொண்ட பழங்களில் ஒன்று தான் நாவல் பழம். இது குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும். நாவல் பழத்தை எல்லா வயதினரும் விரும்பிச் சாப்பிடுவதுண்டு. சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள விதையை தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த விதையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

நாவல் பழக் விதைக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. அதில் உள்ள ஆல்கலாய்டுகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. குறைந்த ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இதைவிட சிறந்த மருத்துவம் இல்லையென்று சொல்லலாம். நாவல் விதையை அரைத்து அதை வடிகட்டி தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கிட்டதட்ட 35 சதவீதம் அளவுக்கு குறையும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வேலையையும் இந்த நாவல்பழம் செய்கிறது. மிகவும் சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடண்ட்டாகவும் இது செயல்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளையும் தீர்க்கக்கூடிய வல்லமை வாய்ந்தது நாவல்பழக் விதை. இத்தனை நன்மைகள் அந்த விதையில் இருக்கும்போது இனிமேல் நாம் அதை தூக்கி வீசலாமா?

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா