Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அறுவை சிகிச்சை மூலம் கழுத்திலிருந்து அகற்றப்பட்ட 90 குண்டூசிகள்!
[Saturday 2017-07-08 15:00]

ராஜஸ்தானை சேர்ந்த பத்ரிலால் என்பவரது ழுத்தில் இருந்து 90 குண்டூசிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர் அதிகமான குண்டூசிகளை விழுங்கியுள்ளார். இதனால் கழுத்தில் வலி மற்றும் உணவு சாப்பிட மிகவும் சிரமப்பட்டுள்ளார்.டில்லியில் உள்ள ஆந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள மருத்துவர்கள் அவரை சி.டி.ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது உடலின் உள்ளே பல்வேறு இடங்களில், 150 குண்டூசிகள் இருந்தது தெரிய வந்தது.

குறிப்பாக, கழுத்து பகுதியில் மட்டும், 90 குண்டூசிகள் இருந்தன. சுமார் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கழுத்து பகுதி வழியாக தான் மூளைக்கு ரத்தம் மற்றும் பிராண வாயு கொண்டு செல்லப்படுகின்றன.சிறிய தவறு நிகழ்ந்தால் கூட அவர் கோமாவில் விழுந்து விடும் அபாயம் இருந்தது.இருப்பினும் மிகவும் சிரமப்பட்டு அவரது கழுத்து பகுதியில் இருந்த, 90 குண்டூசிகள் அகற்றப்பட்டன என்று கூறியுள்ளார்.இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பத்ரிலால் நலமாக இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா