Untitled Document
January 22, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
இரவில் கண் விழிப்பவர்களா நீங்கள்? - ஆபத்துக்களை அறிக
[Thursday 2017-10-26 18:00]

இரவு நேரத்தில் தொடர்ந்து தூக்கம் வரவில்லையா, உங்கள் பணியே இரவு நேரத்தில்தானா, இரவு முழுக்க விழித்து செல்போன், சினிமா, கணினியைக் கவனிப்பவர்களா, நண்பர்களோடு சேர்ந்து தினமும் இரவைக் கொண்டாடுபவரா இவை எல்லாமே ஆபத்தானது என்பதை உடனே புரிந்துகொள்ளுங்கள். இரவில் மட்டுமே சுரக்கும் 'மெலடோனின்' என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்கிறது மருத்துவ உலகம்.

மூளையில் இருக்கும் பினியல் சுரப்பி சுரக்கும் இந்த மெலடோனின், சுரக்காமல் போனால் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் கெட்டுப்போகும். அது மட்டுமா, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எல்லா நோய்களையும் வரவேற்கும் விதமாக உடல் கெட்டுவிடுகிறது என்கிறார்கள்.

மேலும், இரவில் கண் விழிப்பதால் ஓய்வுகொள்ள வேண்டிய கல்லீரலும் பாதிப்பு அடைகிறது. கண் தொடங்கி சிறுநீரகம் வரை இரவு தூக்கம் தொலைப்பதால் கடுமையான பாதிப்பை அடைகிறது. பகலில் உறங்குவதால் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் அல்சர், செரிமானப் பிரச்னை என முதலில் நோய்கள் ஆரம்பிக்கிறது.

மேலும், நரம்புத்தளர்ச்சி, தோல் சுருக்கம், மன அழுத்தம் தொடங்கி எதிர்மறையான எண்ணங்கள், ஆண்மைக்குறைவு, கல்லீரல் பிரச்னை என நோய்க்கு மேல் நோய் பெருகி வாழ்வையே சீர் குலைக்கிறது. இரவு நேரப் பணி, கேளிக்கை எல்லாம் 'கண்ணை விற்று சித்திரம் வாங்கும்' அபாய வேலைதான். எனவே, இப்போதே உங்கள் இரவு நேரத்து தூக்கத்தைத் தொடருங்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com



கண்களுக்கு சொட்டு மருந்தா?... கவனம்
[Monday 2018-01-22 13:00]

கண்களில் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கண்களில் பாதிப்பு ஏற்படும்போது அதைச் சரிசெய்வதற்கு திரவ நிலையில் உள்ள சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.



தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது?
[Saturday 2018-01-20 19:00]

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும். இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.



அரிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்
[Saturday 2018-01-20 18:00]

அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.



முகத்தை அழகாக்கிக் காட்டும் Beauty App அறிமுகம்
[Saturday 2018-01-20 18:00]

முகத்தை அழகாக்கிக் காட்டும் கைபேசி செயலிகள் உலகம் முழுவதும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வட கொரியாவில் முதன்முறையாக போம்ஹயங்கி 1.0 என்ற Beauty App திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்காக வெளியிடப்படுகிறது.



இரவில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
[Friday 2018-01-19 19:00]

பிறந்த நேரம் என்பது நம் எல்லோருக்குமே மிகவும் அவசியமானது. ஏனெனில் ஒருவரின் பிறந்த நேரத்தை வைத்து தான் அவர்களின் எதிர்காலத்தின் நன்மைகள் மற்றும் பாதிப்புகளை பற்றி சரியாக தெரிந்துக் கொள்ள முடியும்.



வேலைக்கு போகும் பெண்கள் திருமணம் செய்ய மறுப்பதற்கு காரணம்
[Friday 2018-01-19 17:00]

பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். 35 வயதிற்கு மேல் திருமணமாகாமல் இருப்பதால் வரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.



சருமத்தை பொலிவடையச்செய்யும் பாதாம் பேஷியல்
[Friday 2018-01-19 17:00]

சருமத்தை மென்மையாகவும், பொலிவடையச்செய்யவும் பாதாம் ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வந்தால் படிப்படிபாக பலனை காணலாம்.



வயிற்றுக்கொழுப்பை குறைக்கும் எளிய வழிமுறைகள்
[Friday 2018-01-19 12:00]

எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும்.சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு ஊட்டச்சத்துகளை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்கலாம்.



நெற்றியில் ஏன் குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா?
[Thursday 2018-01-18 17:00]

உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வமான உண்மையை பெண்கள் சந்தனம் மற்றும் குங்குமம் நெற்றியில் இடுவதற்கான காரணங்கள் அறியப்பட்டுள்ளது.



கழுத்து, முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமா? உங்களுக்கான டிப்ஸ்
[Thursday 2018-01-18 16:00]

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலையே பார்த்துக் கொண்டிருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டு கழுத்து, முதுகு வலி உண்டாகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக வலித்தாலும் அதனை கவனிக்காமல் விடும்போது கழுத்தையே திருப்பமுடியாத அளவிற்கு பிரச்சனைகளை கொடுத்துவிடுகிறது. இந்த வலியை குறைக்க வலி மருந்துகளை சாப்பிடுவது நல்லதல்ல. இதற்கு இயற்கையான முறையில் தீர்வளிக்க யோகாவினால் முடியும்.



இரவில் நித்திரைக்கு முன் பற்களைத் துலக்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Thursday 2018-01-18 15:00]

இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும்.



ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சப்போட்டா
[Thursday 2018-01-18 10:00]

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.



தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக செய்யவேண்டியவை
[Wednesday 2018-01-17 19:00]

தீப்புண் மிகவும் பயங்கராமனது அதே சமயம் வலி மிக்கது. தீப்புண் உண்டான பிறகு தரப்படுகிற சிகிச்சைகளை விட, முதலில் தருகின்ற முதலுதவி தான் மிகவும் முக்கியமானது. வீட்டில் கவனக்குறைவாக ஏதேனும் சூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீப்புண் உண்டானால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.



கற்றாழையை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
[Tuesday 2018-01-16 19:00]

இயற்கையாகவே அளவுக்கு அதிக நன்மைகளை தருவது கற்றாழை. அதிக மருத்துவ குணங்களும், ஆண்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் என அனைத்தும் இதில் கிடைக்கின்றன.



இதய நோய் வராமல் பாதுகாக்க வாரம் 5 நாட்கள் உடற்பயிற்சி அவசியம்
[Tuesday 2018-01-16 11:00]

குறிப்பாக நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) போன்ற பயிற்சியின் மூலம் நமது இதயத்தை வலுவாக்க முடியும். முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை, முறையான உடற்பயிற்சி செய்தால் கீழ்காணும் நன்மைகளைப் பெறலாம்.


Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா