Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கிளிநொச்சி முழங்காவில் மகாவித்தியாலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம்: - கனடா செந்தில் குமரன் வழங்கிவைப்பு Top News
[Sunday 2018-01-21 20:00]

தாயகத்தில் ஏராளமானோர் சுத்தமில்லாத குடி நீரை அருந்துவதால் சிறுநீரக நோய்;க்கு உள்ளாகி அவதியுற்று இறக்கும் நிலை பெருகி வருகின்றது. இந்நிலையில் தாயகத்தில் யுத்தத்தின் வடுக்களைச்சுமந்தும் நோய்களின் தாக்கங்களினாலும் துன்பங்களைச்சந்தித்து வரும் தாயக உறவுகளுக்கு உயிர்காக்கவும் உதவிக்கரம் நீட்டுவதிலும் கனடா செந்தில்குமரன் அவர்களின் நிவாரண நிதியமும் கனடா வாழ் உறவுகளும் பெரும்பங்கை ஆற்றிவரும் நிலையில் இன்றைய தினம் பூநகரிப்பிரதேசத்தின் கிளி/முழங்காவில் மகாவித்தியாலயத்தில் குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்வு பாடசாலைமுதல்வர் திரு பத்மநாதன் ஆனந்தராசா தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.

முதல்வர் கருத்து தெரிவிக்கையில் தமது வாழ் நாள் இந்நிகழ்வின் வாயிலாக 10 வருடங்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்த உதவிக்காக பல வருடங்கள் காத்திருந்ததாகவும் மன நெகிழ்ச்சியுடன் கூறி செந்தில் குமரன் அவர்களுக்கும் கனடா Ralhan Dentistry நிறுவனத்திற்கும் அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். பிரதம அதிதியாக கனடா செந்தில் குமரன் அவர்கள் கலந்து கொண்டு குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை கையளித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தமக்கு வடகிழக்குப்பிரதேசங்களில் இருந்து சிறுநீரக சிகிச்சைக்காக நிதி உதவி வேண்டி பல கோரிக்கைகள் வந்ததையிட்டு தான் இந்த முடிவை எடுத்ததாகவும் இதன்மூலம் எமது எதிர்கால சந்ததியினரை நோய்களிலிருந்து பாதுகாக்கமுடியுமென நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இச்செயற்திட்டம் வன்னிப்பெருநிலப்பரப்பில் சுத்தமான தண்ணீரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் இதர பாடசாலைகளுக்கும் எடுத்துச்செல்லப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். அவரின் இந்த முயற்சிக்கு கனேடியதமிழ் உறவுகள் முழு ஆதரவும் வழங்கி தாயக உறவுகளின் எதிர்கால வாழ்விற்கு உதவிக்கரம் நீட்டும்படி அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம். இந்த முதலாவது திட்டத்தின் பிரகாரம் 1000ற்கு மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா