Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நிவாரண நிதியம்: Top News
[Friday 2018-02-02 19:00]

கிளிநொச்சியில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் கனடா செந்தில் குமரனின் நிவாரண நிதியம் சிகிச்சைக்காக ஏழரை இலட்சம் செலவில் முச்சக்கரவண்டியும் கையளிப்பு. இன்னமும் தாயகத்தில் யுத்தத்தின் கொடுமையால் ஏற்பட்ட வடுக்கள் ஆறாத காயங்களாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதன் வடுக்களை வலிகளை இன்னமும் சுமந்தவர்களாக முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட பல போராளிகள் பொதுமக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கான சிகிச்சை, மற்றும் வாழ்வாதாரம் என பல பணிகளை கனடா வாழ் உறவுகளின் அனுசரணையோடு செந்தில் குமரன் அவர்களின் நிவாரணநிதியம் ஆற்றிவருகின்றது.

அதன் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட நலப்பணிகளை ஆற்றுவதற்காக தாயகத்திற்கு வருகை தந்த செந்தில் குமரன் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்திற்கான வீட்டுத்தரிசிப்பு முறையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் மருத்துவ பராமரிப்புசேவையின் 2ம் கட்ட ஆரம்பநிகழ்வினை வடமாகண சுகாதார அமைச்சுடன் இணைந்து தொடக்கிவைத்தார். சமீபத்தில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் சிறப்புற இடம்பெற்ற இந்நிகழ்வில் கனடா செந்தில்குமரன் மற்றும் சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்தியர் குமரவேல் அவர்கள் மற்றும் பயனாளிகள் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கான வீட்டுத்தரிசிப்பு முறையிலான மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் மருத்துவ பராமரிப்பு சேவைக்காக கனடா செந்தில்குமரன் அவர்களால் ஏழரை இலட்சம் செலவில் முச்சக்கரவண்டியும் கையளிக்கப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த பயன்பெறும்முன்னாள் போராளி உண்மையில் எமது போராட்ட மௌனிப்புக்குப்பிற்பாடு முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட உறவுகள் கடுமையான துன்பங்களையும் வேதனைகளையும் சந்தித்துவரும் சூழலில் எமக்கு உதவிக்கரம் நீட்டிய கனடா வாழ் உறவுகள் மற்றும் செந்தில் குமரன் அண்ணாவிற்கும் நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.

உண்மையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நாங்கள் அநேகமானவர்கள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருக்கின்றவர்கள் எமக்கு போதியளவு மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை படுக்கைப்புண்களால் மிகவும் வேதனைகளை சந்தித்து வரும் சூழலில் கனடா வாழ் உறவுகள் மற்றும் செந்தில்குமரன் அண்ணாவின் நிவாரணநிதியம் கடந்த வருடம் வாடகை வாகனத்தை பெற்றுத்தந்து எமது வீடுகளுக்கே வருகை தந்து சிகிச்சைகளை மேற்கொள்ளும் சிறந்த பணிக்கு உதவிபுரிந்தார்கள். இதற்கு முன்னர் சிகிச்சை பெற வருவதாக இருந்தால் எங்களோடு துணைக்கு உறவினர் வரவேண்டும், முழுநாளும் எமக்காக செலவிடப்படவேண்டும்; கூலித்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்கள் எம்மோடு வருகின்ற போது அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது.

ஆனால் தற்போது நிலமை மாறியிருக்கிறது. எமக்காக முச்சக்கரவண்டி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக தற்போது பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் வாயிலாக எமது அவசியமான மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இவர்களுக்கான மருத்துவ சேவைக்காக கனடா செந்தில்குமரன் நிவாரணநிதியத்தால் 21இலட்சம் செலவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா