Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உடல் எடைக்கும், நீரிழிவு நோய்க்கும் சூப்பரான தீர்வு!
[Thursday 2018-02-22 12:00]

அனைவரது வீட்டு சமையலறையிலும் இருக்கும் நறுமணமிக்க மசாலாப் பொருள் தான் சீரகம். இது , உலகின் அனைத்து பகுதிகளிலும் சமையலில் சேர்த்து வரும் ஓர் பொதுவான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இது பார்ப்பதற்கு ஓமம் போன்று தான் காணப்படும். ஆனால் இதன் நறுமணம் மற்றும் சுவை வேறுபடும். இந்த சீரகம் உணவிற்கு மணத்தையும், சுவையையும் அளிப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது.

சீரகத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகள், மயக்க பண்புகள், ஆன்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் உள்ளன. அதோடு இதில் டயட்டரி நார்ச்சத்து, கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, காப்பர், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, செலினியம், ஜிங்க், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பல்வேறு பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் உள்ளன.

இத்தகைய சீரகத்தை ஒருவர் அப்படியே அல்லது பொடியாக தயாரித்து, உண்ணும் உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து பொடியாக செய்தால், அதனை சாலட், தயிர், ஸ்மூத்தி, ஜூஸ்கள் போன்றவற்றுடன் கலந்து உட்கொள்ளலாம்.

செரிமானத்திற்கு உதவும் ஆயுர்வேதத்திற்கு செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி, அஜீரண கோளாறு, வயிற்றுப் போக்கு, வாய்வுத் தொல்லை, குமட்டல் போன்றவற்றிற்கு சீரகம் பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு 1 டீஸ்பூன் வறுத்த சீரக பொடியை 1 டம்ளர் நீரில் சேர்த்து கலந்து தினமும் 1-2 முறை குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், 1/4 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியை ஒரு டம்ளர் மோரில் கலந்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து, தினமும் ஒருமுறை குடிக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி சீரகம் கைக்குழந்தைகள் சந்திக்கும் வயிற்று வலியில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, 1 டீஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, 1-2 டீஸ்பூன் சீரக நீரை குழந்தைகளுக்கு தினமும் ஒருமுறை கொடுத்தால், வயிற்று வலியைத் தடுக்கலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா