Untitled Document
May 3, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரே இரவில் மாறிய ஏழை முதியவரின் வாழ்க்கை!
[Thursday 2022-09-08 18:00]

கேரளாவில் தினக்கூலி வேலை பார்க்கும் 60 வயது முதியவரின் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு அடுத்த கொடிவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதான இவர் அப்பகுதியில் தினக்கூலி வேலைகளை செய்து வருகிறார். அனைவரிடமும் சிரித்து சகஜமாக பழகும் இவர், எந்த வீட்டில் என்ன கூலி வேலையாக இருந்தாலும் முதல் ஆளாக சென்று செய்பவர்.

வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என தோற்றம் கொண்ட இவரின் வாழ்க்கையை அப்பகுதி போட்டோகிராபர் மாற்றி உள்ளார்.

இவரின் தோற்றத்தைப் பார்த்த போட்டோகிராபர் அவரை கூப்பிட்டு மாடல் சூட் எடுக்க முடிவு செய்துள்ளார்.

முதலில் இதற்கு மம்மிக்கா மறுத்துள்ளார். ஆனால் தான் எடுத்த போட்டோக்களை காட்டி மம்மிக்காவை போட்டோ ஷூட்டிற்கு சம்மதிக்க வைத்துள்ளார்.

இதனை அடுத்து மம்மிக்காவிற்கு கோட் சூட், மேக் அப் போட்டு போட்டோ எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தினை பார்த்தவர்கள் ஆச்சரியத்துடன் பகிர ஆரம்பித்துள்ளனர்.

ஒரே இரவில் கேரளாவின் சூப்பர் மாடலாக மம்மிக்கா உருவெடுத்து இருக்கிறார். மாடலிங் பிடித்து போன மம்மிக்கா தற்போது கூலித்தொழில் மற்றும் மாடலிங் இரண்டையும் செய்து வருகின்றார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா