Untitled Document
May 3, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
காசி புனித தீர்த்தம் வட்டுக்கோட்டை - அராலி குளத்தில் கலப்பு! Top News
[Tuesday 2023-01-17 20:00]

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நேற்றையதினம் உலகலாவிய ரீதியாக நடைபெற்றது. பொங்கலுக்கு அடுத்த நாளான இன்றையதினம், உழவுத் தொழிலுக்கு அளப்பரிய பணியாற்றிய பசுக்களுக்கும் காளைகளுக்கும் பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்றையதினம் யாழ். வட்டுக்கோட்டை - அராலி உப்புவயல் குளத்தருகில் பட்டிப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கலாநிதி சிதம்பரமோகன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.

கலாநிதி சிதம்பரமோகன் அவர்களால், இந்தியா காசியில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித காசி தீர்த்தமானது யாழ். இந்திய துணைத் தூதுவரால் குளத்தில் கலக்கப்பட்டது. பின்னர் பட்டிப் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலாநிதி சிதம்பரமோகன், யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர், நாக விகாரை விகாராதிபதி, வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா