Untitled Document
May 6, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மாந்தை கிழக்கில் மனை பொருளியல் டிப்ளோமா கண்காட்சி! Top News
[Saturday 2023-03-18 07:00]

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள நிதி அனுசரணையில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையம் இணைந்து நடாத்தும் மனை பொருளியல் டிப்ளோமா கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் (2022 க்கானது) நேற்று பாண்டியன்குளம் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

மாந்தை கிழக்கின் உதவி பிரதேச செயலாளர் திரு .ப. ஜெபமயூரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், விருந்தினர்களை வரவேற்றல் ,கண்காட்சியை ஆரம்பித்து வைத்தல் ,விழா சுடரேற்றல், இறைவணக்கம், கண்காட்சியை பார்வையிடல் ,கலை நிகழ்வுகள் , விருந்தினர்கள் உரை என்பன இடம்பெற்றிருந்தன.

பிரதம விருந்தினராக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி .ந.நிரஞ்சனா , துணுக்காய் பிரதேச செயலாளர் ச.லதுமீரா ,கௌரவ விருந்தினர் திரு.சி.உமாபாலன் (மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் - முல்லைத்தீவு) அருட்பிரகாசம் அன்டனி க்ரூஸ் (மாந்தை கிழக்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் ), மற்றும் செல்வன் க.சுஜாந்த் (கிராம அலுவலர்- பாண்டியன்குளம்) மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் மனை பொருளியல் டிப்ளோமா கற்கைநெறியினை பூர்த்தி செய்த மாணவர்கள் விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா