Untitled Document
May 3, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சாதம் வடித்த கஞ்சியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!
[Tuesday 2023-08-08 18:00]

பொதுவாகவே நாம் சிலர் நமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நல்ல பொருட்களை தினமும் தூக்கி எறிவதுண்டு. அப்படி நீங்கள் தூக்கி எறியும் சில பொருட்களின் எத்தனை நன்மைகள் இருக்கிறதென தெரியுமா? ஆனால் அவற்றை அறியாமல் நாம் தூக்கி எறிவதால் பல நன்மைகளை இழந்து விடுகிறோம். அந்தவகையில் சாதம் வடித்தப்பின் அந்த கஞ்சியை கீழே எறியாமல் குடித்தால் பல நன்மைகள் பெறலாம்.

அரிசி வேக வைத்த தண்ணீரில் கார்போஹைட்ரேட் நிரம்பியிருக்கிறது. இதனை தினமும் காலையில் குடித்தால் அன்றைய நாளில் உங்கள் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

இந்த சாதம் வடித்த தண்ணீர் நீரிழிவு நோயைக் கூட கட்டுப்படுத்தும்.

நோய் அல்லது வைரஸ் தொற்றுகள் ஏற்படும் போது சாதம் வடித்த தண்ணீர் சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கிறது.

தொற்றுக்களில் இருந்து விடுபட்டு உடல் மீள செயல்முறை விரைவுப்படுத்த அரசி தண்ணீர் குடித்தால் போதும்.

அரிசியில் இருக்கும் நார்ச்சத்து சீரான குடல் இயக்கத்தை எளிதாக்கும் மேலும், மலச்சிக்கலை தடுக்கும்.

அரிசியில் இருக்கும் மா சத்து வயிற்றில் இருக்கும் நல்ல பக்றீரியாக்களின் வளர்ச்சியை தூண்டி ஆரோக்கியமான குடல் இயக்கத்தைக் கொடுக்கும்.

உடல் எடை குறைவாக இருப்பவர்கள் கஞ்சியை குடிக்கும் போது இதில் இருக்கும் கார்போஹைடிரேட் உடலில் மா சத்தை சேர்த்து உடல் எடையை அதிகரிக்கும்.

இந்த கஞ்சி உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்கும். மேலும், உடல் சூடால் ஏற்படும் முடிப்பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வாக இருக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா