Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வைட்டமின்-ஏ கட்டாயம் தேவை: ஏன் தெரியுமா?
[Wednesday 2023-10-11 18:00]

பொதுவாக கண்களின் ஆரோக்கியத்தில் மிகச்சிறந்த பங்கு வகிக்கும் வைட்டமின் -ஏ உடலில் ஏற்படக்கூடிய 50 சதவீதம் தோல் நோய்களுக்கு தீர்வாக அமைகின்றது. சிறுவயதில் ஏற்படக்கூடிய உடல் பிரச்சினைகள் தொடக்கம் முதல் வயதானவர்களில் உடல் பிரச்சினைகள் வரை வைட்டமின்-ஏ தாக்கம் செலுத்துகின்றது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் மிக முக்கியமான வைட்டமின்களில் ஒன்றாக விளங்கும் வைட்டமின்-ஏ எந்த உணவுகளில் அதிகமாக கிடைக்கின்றது என்பது குறித்தும் இதனால் உடலுக்கு கிடைக்கின்ற நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு சக்தி, இனப்பெருக்கம், கண் பார்வை மேம்படுதல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மற்றும் உடல் செயல்பாட்டிற்கும் மிகவும் இன்றியமையாத வைட்டமினாக கருதப்படுகின்றது.

பொதுவாகவே அனைவருக்கும் புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால் சிவப்பு பச்சை மஞ்சள் மற்றும் ஆரஞ்சி நிறங்களில் காணப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின் -ஏ செறிந்து காணப்படுகின்றது.

இவ்வாறு நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம் வைட்டமின்-ஏ அடங்கிய உணவுகளை அனைவரும் இலகுவில் அடையாளம் காண முடியும்.

முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், பால், சீஸ்,மஞ்சள் ஆரஞ்சு நிற பழங்கள் காய்கறிகள் மஞ்சள் மக்காச்சோளம் போன்றவை, நிறமி கரோட்டின் கொண்டுள்ளது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ப்ரக்கோலி, கீரைகள், மா, பூசணி, தக்காளி, ஓட்மீல், ஆப்ரிகாட், பட்டாணி, பப்பாளி மற்றும் காலே கீரைகள் போன்றவற்றில் வைட்டமின் -ஏ நிறைந்து காணப்படுகின்றது.

வைட்டமின் ஏ நோய்களை உருவாக்கும் ஆண்டிஜென்களுக்கு எதிரான லிம்போசைடிக் அதிகரிப்பதன் மூலம் நோய்த்தொற்றுகளுக்கு எதிரான உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.

மேலும் வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் கிருமிகள் உடலில் நுழைவதை தடுப்பது மட்டுமல்லாமல் கிருமிகள் உடலில் நுழைந்தவுடன் தொற்றுநோய்களை எதிர்த்து போராடவும் செய்கிறது.

வைட்டமின் ஏ பார்வையை மேம்படுத்த உதவுகிறது. கண்களில் வறட்சியை தடுத்து கண்களை ஈரப்பதமாக வைத்திருக்கிறது.

இரவு நேரத்தில் பார்வைத்திறனில் குறைபாட்டை உண்டாக்கும் மாலை கண் நோயை தடுக்கின்றது. கண்களில் பார்வைத்திறனை அதிகரிப்பதுடன் உலர்ந்த கண்களுக்கும் ஈரலிப்பை வழங்குவதில் முக்கிய இடம் வகிக்கின்றது.

மேலும் கண்புரை மாகுலர் சிதைவு அபாயத்தையும் இந்த வைட்டமின் கணிசமாக குறைக்கும்.

கிளைகோமா பாதிப்பு கொண்டிருப்பவர்களுக்கு இந்த வைட்டமின் நிறைவாக இருந்தால் பாதிப்பு அதிகமாகாமல் தடுக்கலாம். வைட்டமின் எ எலும்பு ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்பு நோய்களுக்கு தீர்வு கொடுப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது.

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் அதன் வடிவத்தை தக்கவைத்துகொள்வதன் மூலம் குழந்தைகள் வளரும் பருவத்தில் சரியான தசை வளர்ச்சியை பெறுவார்கள். குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் சரியான தசை வளர்ச்சியை உறுதி செய்வதில் வைட்டமின் ஏ முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் தசை நார் டிஸ்டிராபி உருவாகும் வாய்ப்பை தடுப்பதுடன் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது​. வைட்டமின் ஏ அதிகப்படியான முகப்பரு அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது சருமத்தின் பாதுகாப்பு திசுக்களை வலுப்படுத்துகிறது.

வைட்டமின்-ஏ சருமத்தின் மேற்பரப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சருமத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றி அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளால் சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் முகப்பரு அபாயம் குறைகிறது. சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க செய்கிறது.

வைட்டமின் ஏ குறைபாடு குழந்தைகளுக்கு அம்மை நோயை உண்டாக்க வாய்ப்புண்டு வைட்டமின் ஏ குழந்தைகளுக்கு நிறைவாக இருந்தால் அது அம்மை நோயை தடுக்க உதவும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.

இந்த வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை எடுத்துகொள்வது அம்மை நோயால் உண்டாகும் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கை தடுக்கவும் உதவுகிறது.குழந்தைகளை அம்மை உண்டாக்கும் வைரஸிலிருந்து பாதுகாக்க செய்கிறது.

உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க வைட்டமின் ஏ உதவுகிறது. வைட்டமின் ஏ என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும்.

இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அளவு குறைவதால் அது இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

சரும சுருக்கங்களை நீக்கும் குணங்களை வைட்டமின் -ஏ அதிகமாக கொண்டுள்ளது. வயதான பிறகு புள்ளிகள், நேர்த்தியான கோடுகளை குறைக்கும். இது சருமத்தின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் வயதான செயல்முறையை குறைக்க செய்கிறது.

என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் வைட்டமின்-ஏ நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி செயற்பாடுகளுக்கு தேவையான மன மற்றும் உடல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு வைட்டமின் -ஏ துணைப்புரிகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா