Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சிறார்களின் இருதய சத்திர சிகிச்சைக்கு வரிசை கட்டி வாரி வழங்கிய பக்தர்கள்! Top News
[Saturday 2023-12-09 06:00]

கடந்த சூரன் போர் - பாரணை தினங்களில் கனடா கந்தசாமி ஆலயத்தில் சேகரித்த $13,833.16 நிதியின் விவரம். கடந்த நவம்பர் 18 - 19 திகதிகளில் கனடா கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற சூரன் போர் - பாரணை நேரங்களில், கடும் இருதய நோயுடன் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரண்டு சிறார்களின் இருதய சத்திர சிகிச்சைக்கு நானும் எங்கள் நிவாரண அமைப்பின் தொண்டர்களும் நின்று நிதி சேகரித்தோம்.

உயிர்களை காக்க கருணை உள்ளதோடு வரிசை கட்டி வாரி வழங்கிய பக்தர்களின் செயல் எங்களை இன்ப வெள்ளத்தில் திக்கு முக்காட வைத்தது. அந்த சிறு குழந்தைகளின் கடும் நோயினால் அவர்களின் பெற்றோர்கள் படும் துன்பங்களை வெறும் வார்த்தையினால் சொல்லி மாளாது. இணையத்தில் TOF Heart Disease என்று தேடி பார்த்தால் தெரியும் இதன் கடுமையை. பிள்ளைகள் மூச்சு விட முடியாமல் உடலில் சில பாகங்கள் நீலமாக மாறி பெற்றோருக்கு பெரும் பயத்தினை கொடுக்கும். சிறுவர்களாக இருக்கும் பொழுது இந்த சத்திர சிகிச்சையினை செய்து முடிக்காவிட்டால், அவர்கள் உயிரினை காப்பாற்றுவது பெரும் கடினம்.

அநேகமானோர் தவறி விடுவார்கள். சமீபத்தில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறார்களின் இதய நோய் நிபுணர் வைத்திய கலாநிதி திரு கார்த்திக் அவர்கள் இந்த நோயினின் சீற்றத்தால் பரிதவிக்கும் குழந்தைகள் - சிறார்களின் சத்திர சிகிச்சைக்கு உதவி புரியும்படி கேட்டிருந்தார். அதனை கருத்தில் கொண்டு சிறார்களின் சத்திர கிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி காஞ்சனா சிங்கப்புலியிடம் இது பற்றி ஆலோசித்து முதற்கட்டமாக இரண்டு பிள்ளைகளை அனுப்புகிறோம்.

தாயகத்தில் பல பிரதேசங்களிலுள்ள மேலுமுள்ள சில குழந்தைகளுக்கு எதிர் வரும் Jan 19 திகதி 2024, MGR 107 இன்னிசை இரவின் ஊடாக நிதி திரட்டி அவர்களுக்கும் சத்திர சிகிச்சையினை செய்து உயிர்களை காப்பாற்ற உள்ளோம். உங்கள் அனைவரின் ஆதரவினையும் அன்புடன் எதிர்பார்க்கின்றோம். எங்களை நிதி திரட்ட அனுமதி தந்து, இன்முகத்துடன் வரவேற்று ஒழுங்கினை செய்த கனடா கந்தசாமி கோவில் நிர்வாக சபையினருக்கும், திரு தனபாலசிங்கம், திரு முத்து ஆகியோருக்கும் தாயக மக்களின் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

டொரோண்டோ மாநகரில் எத்தனையோ கோவில்கள் இருப்பினும், தாயக மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு தொடர்ச்சியாக தோள் கொடுப்பது கனடா கந்தசாமி ஆலயம் மட்டுமே என்பதனை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். சமூக கடமையினை செவ்வனே செய்யும் கோவில் இது. தாங்கள் கொண்டு வந்த தொகை பெரிதோ - சிறிதோஇ அதனை அப்படியே அள்ளி தந்து இந்த நற்பணியில் தங்களையும் இணைத்து கொண்ட பக்த கோடிகளுக்கு தாயகத்தில் உள்ள அந்த நோயாளிகளின் குடும்பங்களின் சார்பில் நன்றியினை கூற கடமைபட்டுளோம்.

என்னுடன் நின்று நிதி சேகரிக்க தங்கள் நேரத்தினை தந்துதவிய திரு ராசநாதன், திரு ராஜ் மோகன் மற்றும் திரு ஜெயராஜா வல்லிபுரம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். உண்மையில் இது மிகப்பெரிய ஒரு வரம், உதவி கிடைக்கப்பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் தான்! - செந்தில் குமரன்

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா