Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்!
[Tuesday 2024-03-05 17:00]

எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் படங்களை கூட ஆடியன்ஸ் ஓடிடியில் பார்ப்பதை தான் விரும்புகின்றனர். டாப் ஹீரோக்களின் படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஓடிடி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பெரிய பெரிய படங்களை வாங்கி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஆடியன்ஸ் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் தான் டிஜிட்டலில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதன்படி ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வரும் 8-ம் தேதி வெளியாக இருக்கிறது. மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்திற்காக லைக்கா காசை தண்ணியாக வாரி இறைத்தது.

ஆனால் படம் வெளியான பிறகு போட்ட காசை கூட எடுக்க முடியாமல் தயாரிப்பு தரப்பு திணறியது. மேலும் விமர்சனங்களும் எதிர்மறையாக தான் இருந்தது. அதனால் டிஜிட்டலில் லால் சலாம் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கு போட்டியாக தியேட்டரில் வெளியான லவ்வர் படமும் வரும் 8-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கிறது.

மணிகண்டன் நடிப்பில் காதலர் தின ஸ்பெஷலாக வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் ஓடிடியிலும் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான மேரி கிறிஸ்துமஸ் நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

மேலும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்திய ஹனுமான் ஜீ 5 தளத்தில் வரும் மார்ச் 8 வெளியாகிறது. அடுத்ததாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ள மகாராணி சீசன் 3 தொடர் சோனி லைவ்வில் 8ம் தேதி வெளியாக உள்ளது. அரசியல் சம்பந்தப்பட்ட கதைக்களமான இந்த தொடருக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா