Untitled Document
May 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் அஜித்!
[Saturday 2024-03-09 15:00]

நடிகர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தற்போது வீட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அஜித், இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இதற்கு அஜித்தின் மேலாளர், விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ம் தேதி முதல் மீண்டும் அஜர்பையான் நாட்டில் தொடங்க உள்ளதால், ரெகுலர் செக்கப் செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் அஜித்திற்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், தண்டுவட பகுதியில் பிரச்சினை இருப்பதாகவும் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

தற்போது அவரது மேலாளர் அளித்த விளக்கத்தில், மூளையில் கட்டி இருப்பதாக கூறியது உண்மையல்ல... அவரது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் உள்ளதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

நேற்று இரவு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அஜித் இன்று வீடு திரும்புவதாக கூறிய நிலையில், தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா