Untitled Document
May 2, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வேட்பாளர் கங்கனாவின் வியக்க வைக்கும் சொத்து!
[Sunday 2024-03-31 17:00]

பாலிவுட் நடிகை முதல் பாஜக வேட்பாளர் வரை சென்ற கங்கனா ரனாவத்தின் வாழ்க்கை மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். கங்கனா ரனாவத் என்றாலே பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். இவர், ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் பாம்ப்லா நகரில் 1987 -ம் ஆண்டு பிறந்தார்.

இவருடைய பெற்றோருக்கு கங்கானா மருத்துவராக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், தன்னுடைய 16 வயதில் குடும்பத்தை விட்டு வெளியேறி டெல்லிக்கு வந்தார். அப்போது மாடலிங் துறையை தேர்வு செய்ததால் திரைபட வாய்ப்பு வந்தது.

இவர், கடந்த 2006 -ம் ஆண்டு அனுராக் பாசுவின் கேங்ஸ்டர் என்ற முதல் திரைப்படத்தில் அறிமுகம் ஆன போதே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்ஃபேர் விருது கிடைத்தது. பின்னர், பல்வேறு திரைப்படங்களில் நடித்து இந்திய ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.

இவருக்கு மணாலியில் ரூ.30 கோடி மதிப்பில் 7,600 சதுர அடி கொண்ட பங்களா உள்ளது. இதில் ஏழு படுக்கை அறைகள், ஜிம், யோகா மையம் ஆகியவை உள்ளது. மேலும், ரூ.20 கோடி மதிப்பில் மும்பையில் ஒரு ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

அதோடு, ரூ.35 கோடியில் BMW கார், ரூ.75 லட்சத்தில் Mercedes-Benz கார், ரூ.34 லட்சம் மதிப்பில் Audi car உள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ.95 கோடி ஆகும்.

இவர், ஒரு திரைப்படத்திற்கு ரூ.15 முதல் 27 கோடியும், விளம்பரங்களுக்கு ரூ.3.5 கோடி வரை வாங்குகிறார். மேலும், மணிகர்னிகா என்ற பெயரில் ஒரு புரொடக்ஷன் கம்பெனியை நடத்தி வருகிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா