Untitled Document
May 2, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தனது பட பாடலையே ஷாலினிக்கு காதல் கடிதமாக கொடுத்த அஜித்!
[Wednesday 2024-04-03 18:00]

நடிகர் அஜித் தனது படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட் பாடல் ஒன்றை ஷாலினிக்கு காதல் பரிசாக கொடுத்துள்ளார். 'அமராவதி'யில் ஆரம்பித்து 'காதல் மன்னன்', 'ஆசை', 'அமர்க்களம்' என தொடர்ந்து 60 படங்களை முடித்து இருக்கிறார் நடிகர் அஜித். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகிய “துணிவு” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் “விடாமுயற்சி” திரைப்படத்திற்கான ஷீட்டிங் இடம்பெற்று வருகின்றது.

அஜித்தின் அடுத்த படத்தை மார்க் ஆண்டனி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.இந்த படத்திற்கு ‘Good Bad Ugly’ (குட் பேட் அக்லீ) என்று பெயரிடப்ட்டுள்ளதாகவும் தெரியவரகின்றது. நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

அஜித் தனது படத்தின் பாடல் ஒன்றையே ஷாலினிக்கு காதல் கடிதமாக கொடுத்தமை குறித்து பாடகரும் இசையமைப்பாளருமான பரத்வாஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமர்க்களம் படத்தில் அஜித் ஷாலினி ஆகியோருக்கு இடையில் காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இவர்கள் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.

குழந்தை நட்சத்திரமாக இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஷாலினிக்கு அதுதான் தமிழில் இரண்டாவது படம்.

ஷாலினி அஜித்தின் திருமணத்திற்கு அமர்க்களம் படத்தில் வரும் உன்னோடு வாழாத... என்ற பாடலை முழுவதையும் பதிவு செய்துதருமாறு இசையமைப்பாளர் பரத்வாஜிடம் அஜித் கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் அந்த பதிவை நடிகை ஷாலினிக்கு காதல் பரிசாக அஜித் கொடுத்ததாக தெரியவந்துள்ளமை குறித்த சுவாரஸ்யமான விடயத்தை பரத்வாஜ் பகிர்ந்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா