Untitled Document
April 26, 2024 [GMT]
சூர்யாவிடம் மன்னிப்பு கோரியது பீட்டா
[Saturday 2017-01-28 22:00]

ஜல்லிக்கட்டுக்கு நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வந்தன.மேலும் ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டா அமைப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் பீட்டாவை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அவர்களில் சூர்யாவும் பீட்டாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.


தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் சமந்தா..
[Saturday 2017-01-28 09:00]

கன்னடத்தில் வெளிவந்த திரில்லர் திரைப்படமான யு-டர்ன் விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை பார்த்த சமந்தா இப்படத்தின் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தார். யு-டர்ன் பட இயக்குனர் பவன் குமாரை தனது காதலர் நாகசைதன்யாவுடன் சந்தித்த சமந்தா அப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கை இயக்கும்படி கேட்டுள்ளார். தானே அப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் சமந்தா கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் இயக்குனர் பவன் குமார். யு-டர்ன் படத்தின் தமிழ் தெலுங்கு ரீமேக்கில் நடிகை சமந்தாவே நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. தமிழில் இரும்புத்திரை, அநீதி கதைகள் போன்ற படங்களில் நடித்து வரும் சமந்தா தெலுங்கிலும் ராம் சரணுக்கு ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்.


சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் பட டீசரை வெளியிடுகிறார் சிம்பு
[Friday 2017-01-27 12:00]

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மராத்தி பட நடிகை வைபவி சாண்டில்யா நடிக்க, மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் மற்றும் ஆனந்த்ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.மேலும், நாகேஷ்க்கு சர்வர் சுந்தரம் மெகா ஹிட்டாக அமைந்தது போன்று இந்த படமும் தனக்கு ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கும் சந்தானம், இந்த படத்திற்கு பரபரப்பு கூட்ட வேண்டும் என்பதற்காக தற்போது டீசரை சிம்பு, பிப்ரவரி 3-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்.


வாய்ப்பு குறைந்ததால் ஓட்டல் தொடங்கும் அனுஷ்கா
[Friday 2017-01-27 12:00]

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு பட உலகில் 12 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அருந்ததியில் மந்திரவாதியை பந்தாடிய ஆக்ரோஷமும், பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் ராணியாக வந்து வாள் வீசியதும், இஞ்சி இடுப்பழகி படத்தில் 20 கிலோ எடை கூடி குண்டு பெண்ணாக வந்ததும் இவரது நடிப்பு திறமையை பறைசாற்றுவதாக அமைந்தன.


தமிழ் புத்தாண்டில் வெளிவருகிறது '2.0' டீசர்
[Friday 2017-01-27 12:00]

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்து வருகிறார். லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.


காதலனைக் கைப்பிடிக்கும்ம பிச்சைக்காரன் நாயகி
[Friday 2017-01-27 12:00]

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம்


இன்னும் சில நாட்களில் ஜாக்கிசானின் `குங் பூ யோகா' ரிலீஸ்
[Thursday 2017-01-26 22:00]
அதிரடி மன்னன் ஜாக்கி சான், சோணு சூட் நடித்து பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'குங்பூ யோகா' படம் பிப்ரவரி 3-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சீனாவின் பிரபல இயக்குநர் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் திஷா படானி மற்றும் தமிழில்

பிரெஞ்சு புரட்சி போல ஜல்லிக்கட்டு புரட்சி வரலாறு காணும்: சத்யராஜ்
[Thursday 2017-01-26 22:00]

திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இப்படி ஒரு எழுச்சியை நான் எதிர்பார்க்கவில்லை. இந்த எழுச்சி என்பது பிரெஞ்சு புரட்சி என்று சொல்வது போல், இது ஜல்லிக்கட்டுக்கான புரட்சி என்று சொன்னால் சரியாக இருக்கும். உலகத்திலேயே இப்படி ஒரு புரட்சி நடந்தது இல்லை. இவ்வளவு கட்டுக்கோப்பாக பல லட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு வந்து போராடி உள்ளனர். இந்த இளைஞர் சமுதாயத்தையும், மாணவர் சமுதாயத்தையும் தலைவணங்கி நான் ஏற்றுக்கொள்கிறேன்.


மணிரத்னத்தின்
[Thursday 2017-01-26 22:00]

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி


தள்ளிப்போனது 'சி-3' ரிலீஸ் -
[Thursday 2017-01-26 22:00]

சூர்யா நடிப்பில் தற்போது


அனிருத்தின் குரலில் நயன்தாராவின் பாடல்...
[Thursday 2017-01-26 22:00]

இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் திகில் கலந்த திரில்லர் படமாக உருவாகி வரும் படம் `டோரா'. தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இப்படத்தை சற்குணம், ஹிதேஷ் ஜபாக் தயாரித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்தில் அனிருத் "ரா ரா ரா" என்ற ஒரு பாடலை பாடியுள்ளார். தீயசக்திகளை எதிர்த்து நிற்கும் நயன்தாராவுக்கு பொருத்தமாக அனிருத் குரலில் இப்பாடல் சிறப்பாக அமைந்துள்ளதாக இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக விவேக்-மெர்வின் இசையில் 'வடகறி' படத்தில் "லோ ஆன லைஃப்" என்ற பாடலையும், 'புகழ்' படத்தில் "நாங்க பொடியன்" என்ற பாடலையும் அனிருத் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.


நாய்கள் கடித்து குதறியதில் நடிகை படுகாயம்
[Thursday 2017-01-26 21:00]

மும்பையைச் சேர்ந்தவர் நடிகை பருல்யாதவ். இவர், தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான டைரக்டர் கஸ்தூரிராஜாவின் `டிரீம்ஸ்' என்ற படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாக நடித்து உள்ளார். மேலும் 'புலன் விசாரணை-2' படத்திலும் கதாநாயகியாக நடித்தவர்.இதேபோல மலையாளத்தில் புல்லட், கிருத்தியம், பிளாக் டாலியா என்பது உள்பட பல படங்களிலும், கன்னடம் மற்றும் பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளார். மாடலிங்கிலும் ஈடுபட்டு வரும் இவர் டி.வி. தொடர்களிலும் நடித்து வருகிறார்.


தனுஷ் மீது வழக்கு- ரத்துச் செய்யக் கோரி மனு
[Thursday 2017-01-26 10:00]

நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் நான் அவர்களுடைய மகன் கலைச்செல்வன் என்றும், வயதான அந்த தம்பதியருக்கு நான் மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்பு தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். நான் அவர்களுடைய மகன் என்பதற்கான எவ்வித ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இருப்பினும் மேலூர் கோர்ட்டு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.


காஜலின் மனதைக் கொள்ளையடித்த சிரஞ்சீவி
[Thursday 2017-01-26 10:00]

நடிகை காஜல் அகர்வால் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- 'என் சினிமா வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது. நடிக்க வந்து 10 வருடங்கள் ஆன பிறகும் படங்கள் குறையவில்லை. படப்பிடிப்புகளுக்காக ஓய்வில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கிறேன். என்னை சந்திப்பவர்கள் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள்.


ஜல்லிக்கட்டுக்கு மலையாள நடிகர்கள் ஆதரவளித்தமைக்கு மலையாள ரசிகர்கள் எதிர்ப்பு
[Thursday 2017-01-26 10:00]

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடிகர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். தமிழ்க் கலாச்சாரமும், பண்பாடும் காக்கப்பட வேண்டும் என வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழில் நடிக்கும் நடிகர்கள் பலரும் குரல் கொடுத்தனர். மொழி கடந்து, மாநிலம் கடந்து கூட தமிழ் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது. தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண், மகேஷ் பாபு உள்ளிட்டவர்கள் வெளிப்படையாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அதே போல மலையாள நடிகர்களான மம்முட்டி, ஜெயராம், நிவின் பாலி, வினித் சீனிவாசன் உள்ளிட்டவர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள்.


விலங்குகள் நல வாரிய தூதர் பதவியை நீடிப்பாரா சௌந்தர்யா ரஜினிகாந்த்
[Thursday 2017-01-26 10:00]

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், குடும்பத்தினர் என பலரும் போராட்டம் நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து மாநில அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நிரந்தரமாக நடக்கும் எந்தப் பிரச்சனையும் வராது என்றார்கள். ஆனால், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் இந்திய விலங்குகள் நல வாரியம், உள்ளிட்ட சில அமைப்புகள் மாநில அரசின் சட்டத்தை எதிர்த்து மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.


விஜய் சேதுபதிக்கு ஜோடியான தன்யா
[Wednesday 2017-01-25 22:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவரும் விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த படங்களை கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். கடந்த வருடம் இவரது நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகி சாதனை படைத்தன. அதேபோல இந்த வருடக் கணக்கை தனது 'புரியாத புதிர்' படத்தின் மூலம் தொடங்கவிருக்கிறார். இந்நிலையில் `விக்ரம் - வேதா' படத்தில் ஒருபகுதியை முடித்த விஜய் சேதுபதி, தற்போது, 'ரேணிகுண்டா' இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கும் 'கருப்பன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கொம்பு மீசையுடன் வரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவிருந்த நிலையில், அவருக்கு காயம் ஏற்பட்டது.


ஹிந்தி படங்களுக்கு முதன்மை கொடுக்கும் தமிழ்த் திரையுலகம்
[Wednesday 2017-01-25 22:00]

தமிழ்நாட்டில் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடுவதற்கே தியேட்டர்கள் கிடைக்காமல் பல பெரிய தயாரிப்பாளர்கள், சிறிய தயாரிப்பாளர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கடந்த சில வருடங்களாக ஆங்கிலத் திரைப்படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். சில படங்கள் நேரடித் தமிழ்ப் படங்களை விட நல்ல வசூலைப் பெற்றன. அதைப் பார்த்த ஹிந்தித் திரையுலகில் உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளும் அவர்கள் தயாரிக்கும் ஹிந்திப் படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிட ஆரம்பித்தன.


மான் வேட்டை வழக்கில் நேரில் ஆஜராவதில் சல்மான் கானுக்கு விலக்கு
[Wednesday 2017-01-25 22:00]

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 1998-ம் ஆண்டு,


சிங்கம்-3 நாளை வெளியீடு - பதற்றத்தில் படக்குழு
[Wednesday 2017-01-25 12:00]

S3 என்று படம் ஆரம்பிக்கும் போது விளம்பரப்படுத்தப்பட்ட சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம், பின்னர் C3 என்று அழைக்கப்பட ஆரம்பித்தது. தமிழில் சி3 என்றும் பலரும் கூற ஆரம்பித்தார்கள். ஆனால், நேற்று தயாரிப்பு நிறுவனத் தரப்பிலிருந்து படத்தை C 3 என்று அழைக்க வேண்டாம்,S3 என்று சொல்லுங்கள் என கூறினார்கள். ஆனால், சராசரி ரசிகரை எப்படி குழப்பினாலும், சிங்கம் பார்ட் 3 என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள்.


ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி பற்றி பாரதிராஜா எழுதிய கவிதை
[Wednesday 2017-01-25 12:00]

மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. அதுபற்றி இயக்குனர் பாரதிராஜா எழுதியுள்ள கவிதை வருமாறு:


நயன்தாராவை பின்பற்றும் தமன்னா
[Wednesday 2017-01-25 12:00]

மும்பை நடிகையான தமன்னா இந்தி சினிமாவில்தான் அறிமுகமானார். ஆனபோதும் முதல் படத்திற்கு பிறகு அங்கு அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. அதனால் பின்னர் தமிழ், தெலுங்கில் நடிக்கத் தொடங்கி முன்னணி நடிகையாகிவிட்டார். இருப்பினும் தாய்மொழியான இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ், எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் மூன்று படங்களுமே தோல்வியடைந்ததால் பின்னர் தமன்னாவுக்கு இந்தியில் படங்கள் கிடைக்கவில்லை.


மாரி-2 படப்பிடிப்பு ஆரம்பம்..
[Wednesday 2017-01-25 11:00]

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் மாரி. இந்த படத்தில் தனுசுடன் காஜல்அகர்வால், விஜய் யேசுதாஸ், ரோபோ சங்கர், மைம் கோபி உள்பட பலர் நடித்தனர். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. என்றபோதும், தனுசுக்கு பிடித்தமான படமாக அமைந்தது. அதனால் அந்த படத்தில் நடித்து முடித்ததுமே மாரி-2 கதையை ரெடி பண்ணுமாறு பாலாஜி மோகனிடம் கூறினார். அதையடுத்து தனுஷ் பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாரி-2 படத்திற்கான கதையை ரெடி பண்ணி வந்த பாலாஜிமோகன், தற்போது அந்த படத்தை இயக்க தயாராகி விட்டார்.


காதலுக்கு கண் உண்டு, ரொமான்ஸ்க்கு கண்ணில்லை - ஹிருத்திக்
[Wednesday 2017-01-25 11:00]

மொகஞ்ஜதரோ' படத்தின் தோல்விக்கு பிறகு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‛காபில்'. ஹிருத்திக் ஜோடியாக யாமி கவுதம் நடித்திருக்கிறார். இப்படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ள ஹிருத்திக், காபில் படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...காபில் படத்தில் கண் பார்வையற்றவராக நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க.?முதலில் இந்த மாதிரி ஒரு ரோலில் நடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சவாலான பல விஷயங்களை செய்ய வேண்டும். இரண்டாவது நான் நடித்த ரோல்களில் மிகவும் கடினமான படம் என்றால் அது காபில் தான். உடல் ரீதியாக மட்டுமல்ல, மன ரீதியாகவும் நிறைய சவால்களை இந்த ரோலுக்காக எதிர்கொண்டேன்.


இலியானாவின் நிர்வாண புகைப்படம் வெளியீடு
[Tuesday 2017-01-24 22:00]

இலியானா பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.


என்னை பற்றி தவறான தகவல்கள் வருவது வருத்தம் அளிக்கிறது -விஷால்
[Tuesday 2017-01-24 21:00]

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா அமைப்பு போராடி உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்தது. இதனால், தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போனது. ஆனால், இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெற முடியாத சூழ்நிலை எழுந்தபோது மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் களமிறங்கினர்.


மீண்டும் நடிக்க வருகிறார் குஷ்பு
[Tuesday 2017-01-24 09:00]

நடிப்பிற்கு கொஞ்சம் ப்ரேக் கொடுத்துவிட்டு தீவிர அரசியலில் இறங்கிய நடிகை குஷ்பு, மீண்டும் நடிக்க வருகிறார். ஆனால், இவர் நடிக்கப்போவது தமிழ் படத்தில் அல்ல. த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்தில் நடிக்க போகிறார் குஷ்பு. இந்த அறிவிப்பை அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டிருக்கிறார்.


ஜல்லிக்கட்டு பேராட்டத்தால் 'பைரவா' க்கு நடந்தது என்ன?
[Tuesday 2017-01-24 09:00]

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் விஜய்யின் `பைரவா' படத்தின் வசூல் சற்றே குறைந்துள்ளது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம். பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த

Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா