Untitled Document
September 21, 2024 [GMT]
தைரியமாக நானே நடிக்கின்றேன் படக் குழுவினரை ஆச்சரியப்படுத்திய ஹன்சிகா!
[Thursday 2016-03-31 13:00]

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார் ஹன்சிகா. இவர் நடிப்பில் நாளை உயிரே உயிரே படம் திரைக்கு வரவிருக்கின்றது.இப்படத்தில் சில இளைஞர்கள் இவரை பாலியல் பலாத்காரம் செய்யவருவது போல் ஒரு காட்சி, இதில் வழக்கம் போல் ஹீரோ அவர்களை அடித்து ஹீரோயினை காப்பாற்றுவாராம்.இந்த காட்சியில் நடிக்க சில முன்னணி நடிகைகள் என்றால் டூப் போடுவார்களாம், ஆனால், ஹன்சிகா தைரியமாக நானே நடிக்கின்றேன் என கூறி படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தினாராம்.


அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்: - லாரன்ஸ் வருத்தம்
[Thursday 2016-03-31 13:00]

காஞ்சனா, காஞ்சனா-2 என தொடர் வெற்றிகளை கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். இவர் அடுத்து மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை இயக்கி, நடித்து வருகிறார்.இப்படத்தில் இவர் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் லாரன்ஸ் ரசிகர்கள் இவரை மூன்று முகம் ரஜினியுடன் ஒப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.அதற்கு லாரன்ஸ், தயவு செய்து அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள், நான் எப்போதும் அவருடைய ரசிகர் மட்டுமே என கூறியுள்ளார்.


அஜித்தின் சாதனைகளை முறியடித்த விஜய்
[Thursday 2016-03-31 13:00]

இளைய தளபதி விஜய் தெறி படத்தின் கடைசி கட்ட பணியில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் அஜித் படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்து சாதனைகளையும் தெறி முறியடித்துள்ளது.ஏற்கனவே வேதாளம் படத்தின் டீசர் லைக்ஸுகளை முறியடித்தது தெறி டீசர். தற்போது வெளிவந்த தெறி ட்ரைலர் 65 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது.இதன் மூலம் வேதாளம் டீசரின் ஹிட்ஸை, தெறி ட்ரைலர் முறியடித்துள்ளது. வேதாளம் டீசர் தற்போது வரை 64 லட்சம் ஹிட்ஸை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டீசர், ட்ரைலர் ஹிட்ஸ், லைக்ஸ் என அனைத்திலும் இளைய தளபதியே நம்பர் 1.


ஹிந்தியில் ரீமேக்காகவுள்ள தோழா: - ரீமேக் உரிமையை வாங்கிய பிரபல பாலிவுட் இயக்குனர்
[Thursday 2016-03-31 13:00]

கார்த்தி, நாகர்ஜுனா மற்றும் தமன்னா நடிப்பில் சென்ற வாரம் வெளியான தோழா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டு மொழிகளிலும் நான்கு நாட்களில் 20 கோடி அளவிற்கு வசூல் செய்த இந்த படம் இப்போது ஹிந்தியில் ரீமேக்காகவுள்ளது.பிரபல இயக்குனர் கரன் ஜோஹர் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்னும் இரண்டு வாரங்களுக்கு எந்த பெரிய படங்களும் வராது என்பதால், தோழா நல்ல வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கலாம்.


கேரளாவில் தெறி பட உரிமையை வாங்கிய பிரபல நடிகர்!
[Thursday 2016-03-31 12:00]

தெறி படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட அனைத்து ஏரியாக்களிலும் முடிந்து விட்டது. இன்னும் கேரளாவில் தான் வியாபாரம் நடக்காமல் இருந்தது.ஏனெனில் இப்படத்தை அங்கு வாங்க பலத்த போட்டிகள் நடந்தது. இறுதியில் தெறி படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் ஒரு பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறுப்படுகின்றது.இந்நிறுவனம் மலையாள சினிமாவின் பிரபல நடிகர் ப்ரித்விராஜுடையது என்பது குறிப்பிடத்தக்கது.


மர்ம நபரால் தாக்கப்பட்டாரா அஜித்தின் தம்பி!
[Thursday 2016-03-31 07:00]

அஜித் திரைப்பயணத்தில் கிராம பின்னணியில் முதன் முறையாக வெளிவந்த படம் வீரம். இப்படத்தில் அஜித்திற்கு 4 தம்பிகள். இதில் ஒரு தம்பியாக நடித்தவர் தான் பாலா.இவர் இப்படத்தின் இயக்குனர் சிவாவின் ரியல் லைப் தம்பி. இந்நிலையில் பாலா தன் அப்பார்ட்மெண்டில் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டார் என்று ஒரு செய்தி உலா வந்தது.இதனால், அனைவரும் அதிர்ச்சியடைய பின் அவரே இதெல்லாம் வதந்தி தான் அப்படி ஏதும் நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.


தெறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்லீ!
[Thursday 2016-03-31 07:00]

அட்லீ இயக்கத்தில் தெறி படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர ரெடியாகவிருக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் சென்ஸார் இந்த வாரத்திற்குள் முடிந்து விடும் என கூறப்பட்டது.ஆனால், தெறி சென்ஸார் முடிந்துவிட்டது, படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துவிட்டது, படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடம் என பல வதந்திகள் உலா வந்தது.இதை கவணித்த அட்லீ, தெறி படத்தின் சென்ஸார் இன்னும் முடியவில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறிவிட்டார்.


காணாமல் போயிருந்த தமன்னா தத்துவ மழையோடு வந்தார்..!
[Wednesday 2016-03-30 21:00]

தமிழ் திரையுலகில் காணாமல் போயிருந்த தமன்னா மீண்டும் தோழா மூலம் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். படம் வசூல் மழையில் நனைய, தமன்னாவோ தத்துவ மழை பொழிகிறார். வேறெந்தத் துறையையும் விட சினிமாக் கலைஞர்களுக்கு இத்துறையில் ஆயுள் குறைவு என்றும், படம் வெற்றிபெற்றால் தான் நினைவில் வைத்திருப்பார்கள் இல்லாவிட்டால் தூக்கியெறிந்துவிடுவார்கள் என்றும் பலரும் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது உண்மை அல்ல. இங்கு திறமைக்கே முதலிடம். திறமையாக நடிப்பவர்களுக்கு வாய்ப்புகள் தானாக வரும். இதற்கு நானே ஒரு நல்ல உதாரணம் என்கிறாராம் தமன்னா. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் அம்மணி!


ரஜினி மீது பாய்ந்தது வழக்கு? - ரசிகர்களா காரணம்
[Wednesday 2016-03-30 15:00]

சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் வட இந்தியா வரை ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் தற்போது முன்னணி வட இந்தியா மீடியா ஒன்று ரஜினி மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளது.இதில்


மறைந்த எடிட்டர் கிஷோரை ஏமாற்றினாரா பிரபல ஹீரோ? - அதிர்ச்சி தகவல்
[Wednesday 2016-03-30 14:00]

விசாரணை படத்தின் மூலம் மீண்டும் இரண்டாவது முறை தேசிய விருதை வென்றுள்ளார் எடிட்டர் கிஷோர். ஆனால், அவர் கடந்த வருடமே மரணமடைந்து விட்டார்.இவர் மரணத்திற்கு பிறகு கிஷோரின் குடும்பம் வறுமையில் கஷ்டப்பட சிவகார்த்திகேயன், ராதிகா ஆகியோர் உதவி செய்துள்ளனர்.இந்நிலையில் இவர் இறப்பதற்கு முன் ஒரு பிரபல ஹீரோ தயாரித்த படத்தில் பணியாற்றியுள்ளார். அந்த படத்திற்கு இன்னும் அந்த ஹீரோ சம்பளம் தரவில்லையாம். கிஷோர் குடும்பத்தினர் கஷ்டத்தில் இருக்கும் தருவாயில் இச்செய்தி தற்போது கோலிவுட்டில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.


முன்னணி நடிகர்களின் வசூலை ஓரங்கட்டிய கார்த்தி!
[Wednesday 2016-03-30 14:00]

கார்த்தி-நாகர்ஜுனா கூட்டணியில் கடந்த வாரம் திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் தோழா. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.அதிலும் சென்னை, செங்கல்பட்டு, கோயமுத்தூர் ஏரியாக்களில் வசூல் நன்றாக இருந்து வருவதாக விநியோகஸ்தர்கள் தரப்பே கூறியுள்ளது.இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூல் செய்தது, இதுநாள் வரை விஜய், அஜித், சூர்யா படங்களே இத்தனை வசூல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், படம் வெளியான 3 நாட்களில் இப்படம் ரூ 30 கோடி வசூல் செய்ய, நாளைக்குள் ரூ 50 கோடி கிளப்பில் தோழா இணைந்து விடுமாம்.


மறைந்த எடிட்டர் கிஷோர் குடும்பத்திற்கு ஓடி வந்து உதவிய சிவகார்த்திகேயன்,ராதிகா!
[Wednesday 2016-03-30 13:00]

ஆடுகளம், விசாரணை படத்திற்காக இரண்டு முறை தேசிய விருது வாங்கியவர் எடிட்டர் கிஷோர். ஆனால், இவர் கடந்த ஆண்டு உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தார்.இவர் மறைவிற்கு பின் கிஷோரின் குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதாக கூறப்பட்டது. இதை நாம் நேற்று நம் சினி உலகம் பக்கத்திலேயே குறிப்பிட்டுயிருந்தோம்.சமீபத்தில் கிடைத்த தகவலின்படி நடிகர் சிவகார்த்திகேயன் கிஷோர் குடும்பத்திற்கு ரூ 2 லட்சமும், ராதிகா ரூ1 லட்சமும் கொடுத்துள்ளார்களாம்.


பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி - 2: - கதாநாயகனாக நடிக்கும் லாரன்ஸ்
[Wednesday 2016-03-30 13:00]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் சந்திரமுகி. இப்படம் சென்னையில் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி சாதனை படைத்தது.இந்நிலையில் பி.வாசு அடுத்து கன்னட படமான சிவலிங்காவை, சந்திரமுகி-2வாக தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். இப்படத்தில் நடிக்க முதலில் ரஜினிகாந்திடம் தான் பேச்சு வார்த்தை நடந்தது.ஆனால், அவர் 2.0வில் பிஸியாகவிருக்க, இதில் லாரன்ஸ், அனுஷ்கா நடிக்க, தற்போது பி.வாசுவின் மகன் ஷக்தியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.


தன் கோபத்தை வெளிப்படுத்திய ஷங்கர்!
[Wednesday 2016-03-30 13:00]

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சர்ச்சைகளிலும் சிக்காத இயக்குனர் என்றால் ஷங்கர் தான். ஏனெனில் தேவையில்லாமல் எந்த இடத்திலும் வீண் கருத்துக்களை கூறமாட்டார்.சமூக வலைத்தளங்களில் கூட எப்போதும் மற்ற படங்களை பற்றி புகழ்ந்து தான் கூறுவார். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஐ படத்திற்கு விக்ரமிற்கு தேசிய விருது கிடைக்காமல் போனது.இதனால், கோபமான ஷங்கர், பி.சி.ஸ்ரீராம் மற்றும் விவேக் தேசிய விருது குறித்து கூறியதை தன் பக்கத்தில் ஷேர் செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


நடிகர் தனுஷின் ரசிகர்கள் கொண்டாட்டம்!
[Wednesday 2016-03-30 13:00]

கோலிவுட், பாலிவுட் தற்போது ஹாலிவுட் வரை சென்று விட்டார் தனுஷ். இந்நிலையில் இவர் நடிப்பில் 4 வருடத்திற்கு முன் இதே நாளில் வெளிவந்த படம் 3.இப்படத்தை இவருடைய மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்க, தனுஷிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். ரஜினி மகள், கமல் மகள் என படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.அதைவிட இப்படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார், இவர் இசையமைத்த


நடிகர் அஜித்தை இயக்குவது என் வாழ்நாள் லட்சியம்: - இளம் இயக்குனர் பேட்டி
[Wednesday 2016-03-30 11:00]

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் அனைவரும் அஜித்துடன் பணியாற்ற விரும்புவார்கள். அப்படியிருக்க இளம் இயக்குனர்களுக்கு ஆசை இருக்காதா? என்ன, அந்த வகையில் இந்த லிஸ்டில் இளம் இயக்குனர் ஒருவர் இணைந்துள்ளார்.கே.வி.ஆனந்தின் உதவி இயக்குனர் சாய் கோகுல் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் வாலிபராஜா.இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தை இயக்குவது என் வாழ்நாள் லட்சியம் என கூறியுள்ளார்.


நீதான் எங்கள் விருது உனக்கெதற்கு விருது: - விக்ரம் பற்றி நடிகர் விவேக் உருக்கம்
[Wednesday 2016-03-30 11:00]

நேற்று அறிவிக்கபட்ட தேசிய விருதுகள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிருப்தியைதான் கொடுத்துள்ளது. ஐ படத்திற்காக நடிகர் விக்ரமின் இரண்டு வருட உழைப்பை பாராட்டி விருது அளிக்காமல் தமிழ் சினிமாவை உதாசீனபடுத்திவிட்டதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றானர்.இதுபற்றி இப்போது காமெடி நடிகர் விவேக் கவிதையாக ஒரு டிவிட் எழுதியுள்ளார், அதில் ' நீதான் எங்கள் விருது! உனக்கெதற்கு விருது?" என கேட்டுள்ளார்."நண்பா விக்ரம்,"ஐ" காக உடலை பெருக்கினாய்;பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்;உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது!"


பல விருதுகளை வென்ற ரோஜா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாரா மணிரத்னம்...?
[Tuesday 2016-03-29 20:00]

காஷ்மீர் தீவிரவாதிகளை மையப்படுத்தி 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த படம் ரோஜா. இப்படம் பல விருதுகளை வாங்கி இந்திய அளவில் புகழ் பெற்றது.இந்த படத்தில் கண்கவரும் காஷ்மீர் காட்சிகளும், கடத்தல் காட்சிகளும் நெஞ்சை அள்ளும் வகையிலும் த்ரில்லாகவும் தந்தார் மணிரத்னம். இவர் தற்போது கார்த்தி, சாய்பல்லவியை வைத்து இயக்கபோகும் படமும் ஒரு தீவிரவாதிகளை பற்றி மையமாக கொண்டது தானாம்.மேலும் ரோஜா முலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திலும் தனது மேஜிக் இசையை அள்ளித்தர தயாராக இருக்கின்றாராம்.


ரஜினி மற்றும் அஜித்தை கடவுள் மாதிரி ஓப்பிடும் பிரபல நடிகை மானு!
[Tuesday 2016-03-29 19:00]

காதல் மன்னன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த மானு அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு குடும்ப தலைவியானார். இதனிடைய ரஜினி உடல்நிலை சரியில்லாமல் சென்ற போது சிங்கப்பூரில் இருந்த அவருக்கு பல உதவிகளை செய்தது மானு தான் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் ஒரு வார இதழ் பேட்டியில், ரஜினி சாரை பிடிக்காதவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை, எனக்கு ரஜினி மற்றும் என் முதல் பட நாயகன் அஜித் கடவுள் மாதிரி என்று குறிப்பிட்டுள்ளார்.


இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது: - கிளம்பிய சர்ச்சை
[Tuesday 2016-03-29 17:00]

தேசிய விருதுகள் பட்டியல் வந்ததில் இருந்தே பல சர்ச்சைகள் எழும்பியுள்ளன. பாகுபலி சிறந்த படமா, தொழில்நுட்ப ரீதியில் தானே விருது கொடுத்திருக்க வேண்டும் என்றும் இன்னொரு பக்கம் விக்ரமுக்கு ஏன் விருது இல்லை எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.அதேபோல் இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு சர்ச்சை கிளம்பிவிட்டன. கங்கை அமரன் தேசிய விருது கமிட்டி உறுப்பினர் என்பது பெரிய சர்ச்சையாகியுள்ளது.இதுகுறித்து கங்கை அமரன், அண்ணனா, தம்பியா என்ற உறவுமுறையெல்லாம் இங்கு கிடையாது. நாங்கள் வெறும் தமிழுக்காக மட்டும் அங்கு அமரவில்லை. எல்லா மொழிகளுக்கும் நாங்கள் பார்த்தாக வேண்டுமே தவிர நிஜமான கலைஞனாக எல்லா மொழிகளுக்குமிடையே பார்த்துதான் தேர்வு செய்திருக்கிறோம் என்றார்.


படக்குழுவினரை காப்பாற்றிய பிரியா ஆனந்த்!
[Tuesday 2016-03-29 17:00]

முத்துராமலிங்கம் என்ற பெயரில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஒரு படம் நடித்து வருகின்றனர். அறிமுக இயக்குனர் ராஜதுரை இயக்கிவரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்போடு நின்றிருக்கிறதாம். ஏனென்றால் முதல்கட்டப் படப்பிடிப்பின்போதே படப்பிடிப்புக் குழுவினருக்கு உரிய வசதிகளைத் தயாரிப்புத்தரப்பு செய்து தரவில்லை என்று சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்து எல்லோரும் கிளம்பும் நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கட்டணம் உட்பட எதுவும் தயாரிப்புத் தரப்பு கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.இதனால் படக்குழுவினர் தவிக்க, தகவல் அறிந்த பிரியா ஆனந்த், சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து படக்குழுவினரை மீட்டாராம்.


நடிகர் விஷாலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: - உருவாக்கியது யார்..?
[Tuesday 2016-03-29 16:00]

விஷால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்து வருகிறார். நடிகர் சங்க பொறுப்பு ஏற்றதில் இருந்தே பல நல்ல காரியங்களை அனைவருக்கும் செய்து வருகிறார்.இந்த நிலையில் விஷாலுக்கு யாரோ ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை உருவாக்கி அதை வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.அதில் திரு. விஷால் எங்களை பகைத்தால் இதுதான் நிலைமை என்று குறிப்பிட்டுள்ளனர். இது யார் செய்த செயல் என்று தெரியவில்லை.


தேசிய விருது மீது உச்சக்கட்ட கோபத்தில் ரசிகர்கள்!
[Tuesday 2016-03-29 13:00]

63வது வருட தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு சுமார் 5 விருதுகளை வரை கிடைத்தது.ஆனால், வழக்கம் போல் பாலிவுட் படங்களுக்கே பல விருதுகளை அள்ளிக்கொடுத்துள்ளனர். குறிப்பாக ஐ படத்திற்கு விக்ரமிற்கு விருது அளிக்காதது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விக்ரமிற்கு ஆதரவாகவும், தேசிய விருதிற்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.


பாலா குற்றப்பரம்பரை படத்தை இயக்கினால் வழக்கு தொடர்வேன்: - பிரபல இயக்குனர்
[Tuesday 2016-03-29 13:00]

குற்றப்பரம்பரை என்ற கதையை படமாக்குவதில் பாரதிராஜா, பாலா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த கதைக்கு எழுத்தாளர்கள் ரத்னகுமார், வேல ராமமூர்த்தி இருவரும் உரிமை கொண்டாடுகின்றனர். இப்படத்தை வேல ராமமூர்த்தி பாலா இயக்கவேண்டும் என்று கூற, ரத்னகுமாரோ, இது எனது கதை, பாரதிராஜாதான் இயக்க வேண்டும் என்கிறார்.இதுகுறித்து ரத்னகுமார் கூறுகையில், 1997ல் இக்கதையை எழுதி அதனை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன். பாரதிராஜா இயக்க, சிவாஜி கணேசன் தந்தையாகவும், சரத்குமார் மகனாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் சிவாஜிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன.தற்போது அப்படத்தை பாலா இயக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. குற்றப்பரம்பரை கதை என்னுடையது, நான் எழுதிய கதையை திருடி உள்ளனர். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. குற்றப்பரம்பரை படத்தை பாலா இயக்க கூடாது, மீறி இயக்கினால் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என ரத்னகுமார் கூறியுள்ளார்.


குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: - நடிகர் பார்த்திபன்
[Tuesday 2016-03-29 13:00]

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் நேற்று திடீரேன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் கொடுத்துள்ளார். மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்த நடிகர் பார்த்திபன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தபோது, அண்மையில் லதா ரஜினிகாந்த் எனக்கு போன் செய்து அழுதபடி பேசினார்.குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக இன்று காலையில் பத்திரிக்கையில் வந்த செய்தியை படித்தேன். ஒரு பெண், ஆண் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதுபோல் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு, நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் தற்போது போலீஸ் கமிஷனரை சந்தித்து இதுபோல் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


மறைந்த நடிகர் கலாபவன் மணிக்கு ரசிகர்கள் உருவாக்கிய அணையாவிளக்கு!
[Tuesday 2016-03-29 13:00]

கலாபவன் மணியின் மரணம் சினிமாவிற்கு ஒரு ஈடுகட்ட முடியா இழப்பாகும். இந்நிலையில் கலாபவன் மணிக்கு திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் மாமம் என்ற இடத்தில் அவரது ரசிகர்கள் அமைப்பான கலாபவன்மணி சேவா சமிதி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது கலாபவன்மணியின் உருவபடத்தை அணையாவிளக்குடன் அமைத்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் அவரது சகோதரர் மற்றும் பல பிரபலங்கள், எராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.


தமிழகத்தில் தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பே தருவதில்லை: - ஐஸ்வர்யா
[Tuesday 2016-03-29 12:00]

காக்கா முட்டை படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் ஐஸ்வர்யா. வளர்ந்து வரும் போதே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், குப்பத்து பெண்ணாகவும் நடித்து கலக்கியவர்.இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில்


விசாரணை திரைப்படத்திற்கான தேசிய விருது: - தனுஷ், ரித்திகா சிங் கூறிய உருக்கமான கருத்து
[Monday 2016-03-28 22:00]

63வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விசாரணை படத்தை தமிழ் சினிமாவின் சிறந்த படமாக தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்து இருந்தார். இதுமட்டுமின்றி சிறந்த துணை நடிகராக சமுத்திரக்கனி, சிறந்த எடிட்டர் கிஷோர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுக்குறித்து தனுஷ் கூறுகையில்

Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா